என் மலர்
நீங்கள் தேடியது "கோவை பள்ளி மாணவி தற்கொலை"
கோவையில் பாலியல் தொல்லை காரணமாக பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
மேலும் மாணவி புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத குற்றத்திற்காக பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனும் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியால் வேறு எந்த மாணவியும் பாதிக்கப்பட்டுள்ளனரா? என்பது பற்றி விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர்.
இதற்காக 5 நாள் காவல் கேட்டு கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ கோர்ட்டில் போலீசார் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை இன்று காலை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன், மிதுன் சக்கரவர்த்தியை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
இதையடுத்து போலீசார் அவரை கோர்ட்டில் இருந்து பலத்த பாதுகாப்புடன் வெளியே அழைத்து வந்தனர். பின்னர் அவரை வேனில் ஏற்றி சென்று ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முன்னதாக இந்த வழக்கில் கைதான பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் தனக்கு ஜாமீன் வழங்ககோரி கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
கோவை:
கோவையில் ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக கோவை மேற்கு மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மாணவியின் தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மாணவிக்கு வேறு யாராவது பாலியல் தொல்லை கொடுத்தார்களா? தற்கொலைக்கு முன்பு மாணவி யார், யாரிடம் பேசினார் என பல்வேறு கோணங்களில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை செய்த மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் உள்ள கையெழுத்தும், பழைய பள்ளியில் மாற்று சான்றிதழ் கேட்டு மாணவி கொடுத்த விண்ணப்பத்தில் உள்ள கையெழுத்தும் சரியாக பொருந்தவில்லை. இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மாணவியின் நோட்டு புத்தகங்களையும் ஆய்வு செய்ய முடிவு செய்தனர்.
இதையடுத்து கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிர் போலீசார் நேற்று மாணவி வீடு, கைது செய்யப்பட்ட ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனின் அறை, மாணவியின் ஆண் நண்பர் வீடுகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மாணவியின் வீட்டில் இருந்து நோட்டு புத்தகங்கள், மடிக்கணினி ஆகியவற்றை எடுத்து சென்றனர். அதில் உள்ள கையெழுத்தையும், மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் உள்ள கையெழுத்ததும் ஒன்று தானா? என்பதை கண்டறிய ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். மேலும் மாணவியின் நண்பர் மற்றும் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி வீட்டில் இருந்து தலா ஒரு செல்போன் என 2 செல்போன்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
தற்கொலை செய்து கொண்ட மாணவி எழுதிய கடிதத்தில் இருந்த மற்ற 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் தனிப்படையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே மாணவி தற்கொலை செய்து கொண்டதும், சமூக வலைதளமான யூடியூப் சேனல்களில் மாணவியின் புகைப்படம், முகவரி, பெயர் போன்ற விவரங்களுடன் பலரும் செய்திகளை பரவவிட்டனர். பாலியல் தொல்லையில் மாணவி இறந்ததால் அவரது பெயர், புகைப்படங்களை வெளியிட்டதாக கூறி 48 யூடியூப் சேனல்கள் குறித்த தகவல்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
விரைவில் அந்த 48 சேனல்கள் மீதும் வழக்குப்பதியப்பட்டு, அதனை முடக்குவதற்கான நடவடிக்கைகளையும் போலீசார் எடுத்து வருகின்றனர்.
கோவையை சேர்ந்த 17 வயது மாணவி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் மாணவி சாவுக்கு நீதி கேட்டு கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பேனர் வைத்ததாக கவுதம் என்பவர் மீது கோவை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதேபோல உக்கடம் பெருமாள் கோவில் வீதி பகுதியிலும், ஈஸ்வரன் கோவில் வீதி பகுதியிலும் மாணவி சாவுக்கு நீதி கேட்டு பேனர் வைத்ததாக தமிழ்நாடு ஆரிய வைசிய சங்கம் மீது உக்கடம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மாணவியின் பெயர் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கோவை:
கோவையை சேர்ந்த 17 வயது மாணவி ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவி ஆர்.எஸ். புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்த போது, அந்த பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்த மிதுன்சக்கரவர்த்தி பாலியல் தொல்லை கொடுத்ததும், அதனாலேயே மாணவி தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து போலீசார் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை கைது செய்தனர். ஆனால் உறவினர்கள், பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவித்தும் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளார். எனவே அவரையும் கைது செய்ய வேண்டும் என கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீதும் போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டில் வைத்து அதிரடியாக கைது செய்தனர்.
பின்னர் அவரை கோவை ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு துணை கமிஷனர்கள் ஜெயச்சந்திரன், உமா ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
பள்ளி முதல்வரிடம், ஆசிரியரின் பாலியல் தொல்லை குறித்து மாணவி உங்களிடம் தெரிவித்தும், நீங்கள் ஏன் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும் பாலியல் தொல்லை தெரிந்ததும், போலீசாருக்கும், மாவட்ட குழந்தைகள் மையத்திற்கு தகவல் தெரிவிக்காது ஏன்? அதற்கு என்ன காரணம். யாராவது நடவடிக்கை எடுக்க வேண்டாம், வெளியில் சொல்ல வேண்டாம் என உங்களுக்கு அழுத்தம் கொடுத்தார்களா? கைது செய்யப்பட்ட ஆசிரியர் இந்த மாணவியை போன்று வேறு யாராவது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாரா? அது குறித்து யாராவது புகார் உங்களிடம் தந்தார்களா? இதில் வேறு யாரும் சம்பந்தப்பட்டுள்ளனரா? அது குறித்த தகவல் உங்களுக்கு தெரியுமா? என பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை மேற்கொண்டனர். அதற்கு மீரா ஜாக்சனும் பதில் அளித்துள்ளார். அதனை போலீசார் வீடியோ பதிவுடன் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.
காலையில் தொடங்கிய விசாரணை இரவு வரை சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
விசாரணை முடிந்ததும் போலீசார் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை மகளிர் கோர்ட்டு நீதிபதி நந்தினி தேவி வீட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி, அவரை வருகிற 26-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை கோவை சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து துணை கமிஷனர் ஜெயச்சந்திரன் கூறுகையில், மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் இருந்தா? என விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் கைப்பற்றப்பட்டுள்ள துண்டு சீட்டு மற்றும் வாட்ஸ்- அப் ஆதாரங்கள், ஆடியோ உரையாடல்களை வைத்தும் அடுத்தகட்ட விசாரணை நடக்கிறது. மாணவி தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா? வேறு யாருக்காவது இதில் தொடர்பு உள்ளதா? எனவும் விசாரித்து வருகிறோம். இதுதவிர மாணவி எழுதிய துண்டு சீட்டில் உள்ள பெயர்கள், விவரங்கள் குறித்து விசாரணை நடக்கிறது. சக மாணவிகள், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்த உள்ளோம் என்றார்.
கோவை:
கோவையில் ஆசிரியரின் பாலியல் தொல்லையால் 17 வயது மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள இறந்த மாணவியின் வீட்டிற்கு அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செந்தில் பாலாஜி ஆகியோர் சென்றனர். அவர்கள் மாணவியின் பெற்றோரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
அதனை தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நடக்கக் கூடாத காரியம் சில நாட்களுக்கு முன்பு நடந்துவிட்டது. இன்றைக்கு நடந்துள்ள இந்த இழப்பானது எங்கோ தமிழகத்தின்ஒரு மூலையில் நடந்தது என்று நான் பார்க்கவில்லை. மாறாக என்னுடைய சொந்த பெண் இந்த நிலைமைக்கு ஆளாகி இருந்தால் எப்படிப்பட்ட நிலையில் இருப்பேனோ அந்த மனநிலையில் தான் நான் தற்போது இங்கு வந்துள்ளேன்.
இது தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளேன். சம்பவம் நடந்த 24 மணி நேரத்திலேயே ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது பள்ளி முதல்வரையும் கைது செய்துள்ளோம்.

போக்சோ சட்டம் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு தேவை. அரசு பள்ளியை போல் தனியார் பள்ளிகளிலும் அந்தந்த ஆசிரியர்கள் மூலம் ஒரு மணி நேரம் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பாலியல் தொல்லைக்கு ஆளாகும் மாணவர்கள் அரசின் உதவி எண்ணிற்கு அழைத்து தகவலை தெரிவிக்கலாம்.
தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உரிய தண்டனை வாங்கித் தருவது எங்களுடைய கடமை. அதனை நாங்கள் செய்வோம்.
மாணவியை இழந்த பெற்றோர் தங்கள் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வேண்டும் என்றும், தங்கள் மற்ற குழந்தையை படிக்க வைக்க வேண்டும். மேலும் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதனை முதல்- அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவி எழுதியதாக கூறப்படும் அந்தக் கடிதம் எந்த ஒரு குறிப்பும் இல்லாமல் உள்ளது. அது மாணவியின் கையெழுத்து தானா? என்பதை அறிய அவரது பெற்றோரிடம் விசாரிக்கப்படுகிறது. அவர்கள் தங்கள் மகள் கையெழுத்து என்று கூறினால் அதன்பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்...மழை நின்று 2 நாட்கள் ஆன பிறகும் சென்னையில் 70 தெருக்களில் தண்ணீர் இன்னமும் தேங்கியுள்ளது
கோவையில் பிரபல தனியார் பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், இதுதொடர்பாக மாணவி புகார் அளித்தும் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீதும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், மீரா ஜாக்சன் தலைமறைவானதை அடுத்து அவரைப் பிடிக்க 2 குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், பெங்களூரு தனிப்படை போலீசார் மீரா ஜாக்சனை சுற்றி வளைத்து கைது செய்தனர். பெங்களூருவில் கைது செய்யப்பட்ட அவரை, இன்று மாலை கோவை அனைத்து மகளிர் காவல் நிலையம் (மேற்கு) அழைத்து வரப்பட்டு மேற்கொண்டு விசாரணை நடத்த உள்ளனர்.
கோவையில் பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் மாணவிக்கு பாலியல் தொல்லை, தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவியின் உடல் கோவை அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. பள்ளி தலைமை ஆசிரியை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு மாணவர்கள் கருப்பு சட்டை அணிந்து அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறை முன்பு பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்கொலைக்கு நீதி வேண்டும், நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்ற வாசங்கள் அடங்கிய பதாகைகளை வைத்து கொண்டு மாணவர்கள் கோஷங்களை எழுப்பினர். மாணவர்களின் போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை உருவானது.
இதேபோல் கோட்டைமேடு, பெருமாள் கோவில் பகுதியில் மாணவியின் வீட்டின் முன்பு 200-க்கும் அதிகமானோர் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.







