என் மலர்
செய்திகள்

கோவை மாநகர காவல் துணை ஆணையர் ஜெயச்சந்திரன் பேட்டி
கோவை மாணவி தற்கொலை- பள்ளி முதல்வரை கைது செய்ய போலீஸ் தீவிரம்
மாணவி தற்கொலை விவகாரத்தில் வேறு யாரும் தவறு செய்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாநகர காவல் துணை ஆணையர் ஜெயச்சந்திரன் கூறினார்.
கோவை:
கோவையில் பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் மாணவிக்கு பாலியல் தொல்லை, தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மாணவி தற்கொலை விவகாரத்தில் வேறு யாரும் தவறு செய்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாநகர காவல் துணை ஆணையர் ஜெயச்சந்திரன் கூறினார்.
உயிரிழந்த மாணவியின் பெற்றோரை கோவை மாநகர காவல் துணை ஆணையர் ஜெயச்சந்திரன் நேரில் சந்தித்து விசாரணை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாணவி புகார் அளித்தும் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அவரைப் பிடிக்க 2 குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
Next Story