search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால் அழகு"

    பெண்களில் பாத அழகை கெடுப்பதில் குதிகால் வெடிப்பு ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு தரும் சிறந்த வழி ஒன்று உள்ளது.
    குதிகால் வெடிப்பு பிரச்சனை ஒரு பெரும் பிரச்சனையாக மாற வாய்ப்பு உள்ளது. அந்த பிரச்சனையால் அவதிப்படபவர்களுக்குத்தான் தெரியும் அதன் வலி. சில சமயம் சாதரணமாக வெளியே கால்களை நீட்டி உட்கார முடியாது. சில சமயங்களில் கடினமாக தளங்களில் அவர்களால் நடக்கவும் முடியாது. இதை சரி செய்ய ஓர் எளிய இயற்கை மருத்துவம் உள்ளது.

    அதற்கு முதலில் எலுமிச்சை பழத்தை எடுத்து இரண்டாக வெட்டி, அதிலிருக்கும் சாறை முற்றிலுமாக எடுத்து விடவேண்டும். நமக்கு தேவை அந்த எலுமிச்சை  தோல் மட்டும் தான்.



    சற்றே காய்ந்த அந்த தோலை எடுத்து, அதை உங்கள் குதிக்காலில் படும்படி வைக்கவும். உங்கள் குதிகால் வெடிப்புகளை முழுவதும் கவர்  செய்யும்படியாக வைக்கவேண்டும். பிறகு அந்த எலுமிச்சை தோலின் நிலை விலகாத வண்ணம், சாக்ஸை அணிந்துக் கொள்ளுங்கள். இது சருமத்தின் வறட்சி மற்றும் வெடிப்புகளை சரி செய்ய  உதவும்.

    இதை இரவு நேரங்களில் பின்பற்றுவதால், எங்கும் நடக்காமல் ஓரிடத்தில் இருப்பதால் நல்ல பலன் அடையமுடியும். எலுமிச்சையின் நறுமணம் இரவு உங்கள் தூக்கமின்மை பிரச்சனையை போக்க உதவும். இதை தொடர்ந்து செய்து வருவதால், உங்கள் குதிகால் வெடிப்பு மெல்ல, மெல்ல குணமடைவதை நன்கு  உணர முடியும்.

    கால்களில் உள்ள கருமையைப் போக்கி, கால்களை அழகாக காட்ட வீட்டிலேயே பெடிக்யூர் செய்யலாம். பெடிக்யூரை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    கால்களில் உள்ள கருமையைப் போக்க வீட்டிலேயே பெடிக்யூர் செய்யலாம்.

    * முதலில் கால்விரல் நகங்களில் நெயில் பாலிஷ் இருந்தால், அதை நல்ல தரமான நெயில் பாலிஷ் ரிமூவர் கொண்டு நீக்கிவிடுங்கள்.

    * பின்பு ஒரு அகன்ற டப்பில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் 1 டேபிள் ஸ்பூன் ஷாம்பு சேர்த்து கலந்து, பின் அதனுள் கால்களை 5 நிமிடம் ஊற வைத்து, பிரஷ் கொண்டு கால்களைத் தேய்த்து வெளியே எடுத்து, துணியால் துடைக்கவும்.

    * அடுத்து அகன்ற டப்பில் வெதுவெதுப்பான நீரை பாதியாக நிரப்பி, அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் பாதி எலுமிச்சையைப் பிழிந்து, எலுமிச்சைத் தோலை நீரிலேயே போட்டு, கால்களை நீரில் மீண்டும் 5 நிமிடம் ஊற வைத்து, பின் எலுமிச்சைத் தோலைக் கொண்டு தேய்க்க வேண்டும். பிறகு பியூமிக் கல் பயன்படுத்தி, குதிகால்களை நன்கு தேய்த்து விட்டு, கால்களை வெளியே எடுத்து துணியால் துடைக்க வேண்டும்.



    * ஒரு பௌலில் 2 டீஸ்பூன் காபி பொடி, 2 டீஸ்பூன் சர்க்கரை, 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் பாதி எலுமிச்சையைப் பிழிந்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை கால்களில் தடவி 5 நிமிடம் ஊற வைக்கவும். பின்பு கையால் கால்களை சிறிது நேரம் தேய்த்து, சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.

    * இறுதியில் கெட்டியான ஏதேனும் ஒரு மாய்ஸ்சுரைசரை கால்களில் தடவி, மென்மையாக 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.

    இந்த முறையில் மாதம் இருமுறை பெடிக்யூர் செய்து வந்தால் கால்களில் உள்ள இறந்த செல்கள் நீங்க உங்கள் பாதம் அழகாக காட்சியளிக்கும்.
    கால்களில் ஷேவ் செய்யும் போது செய்யும் தவறுகள் என்ன என்பதை தெரிந்து அதனை தவிர்ப்பதால் உங்கள் முடி வளர்ச்சியைக் குறைத்து சருமத்தை பாதுகாப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.
    கால்களில் ஷேவ் செய்யும் போது செய்யும் தவறுகள் என்ன என்பதை தெரிந்து அதனை தவிர்ப்பதால் உங்கள் முடி வளர்ச்சியைக் குறைத்து சருமத்தை பாதுகாப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    குளிப்பதற்கு முன் சருமம் கடினமாகவும் வறண்டும் இருப்பதால் ஷேவ் செய்வதை தவிர்க்க வேண்டும். முதலில் சருமத்தை நன்கு நனைத்துவிட்டு அதன் பிறகு முடியை நீக்க முயல வேண்டும். இது பெண்கள் கால்களை ஷேவ் செய்யும் போது பொதுவாகச் செய்யும் தவறு.

    உங்கள் கால் சருமத்தை ஷேவ் செய்யும் முன் சுத்தம் செய்வது அவசியம். இதனால் வறண்ட மற்றும் இறந்த தோல் பகுதிகள் நீக்கப்பட்டு சரும எரிச்சலும் குறைக்கப்படும்.

    சோப்பு உங்கள் சருமத்தை வறட்சியாகவும், அரிப்புடையதாகவும் செய்யும். எனவே சோப்பிற்கு பதிலாக ஷேவிங் பாம்மை உபயோகிப்பது அரிப்பைக் குறைத்து நல்ல பலன் தரும்.



    பெண்கள் தங்கள் கால்களை ஷேவ் செய்யும் போது செய்யும் ஒரு பொதுவான விஷயம் பழைய ரேசரை உபயோகிப்பது. ரேசர்கள் காலப் போக்கில் மழுங்கிவிடுவதுடன் நெருக்கமான சேவை தருவதில்லை. மாறாக அவை சரும எரிச்சலையும் தரும் என்பதால் அவற்றை முதலில் தூக்கி எறியுங்கள்.

    ஷேவ் செய்ய உகந்த வழி உங்கள் காலின் கீழ் பகுதியில் இருந்து துவங்கி மேல் நோக்கி செய்ய வேண்டும். இதனால் உங்கள் முடி வளர்ச்சி குறைவதுடன் மிருதுவான சருமமும் கிடைக்கும்.

    உங்க ரேசரை இன்னொருத்தருக்குக் கொடுக்காதீங்க.. இல்ல அவங்களோடதை நீங்க உபயோகிக்காதீங்க… இது பல பெண்கள் செய்கிற தவறு. ஏனென்றால் இதில் பல நோய்த்தொற்றுக்கள் மற்றும் பாக்டீரியாக்கள் குடிகொண்டிருக்கும்.

    கிரீம் ஷேவிங் செய்வதால் உங்கள் சருமம் வறட்சி அடையும். எனவே ஒரு மாய்ஸ்சுரைசர் உபயோகிப்பது நல்லது. இது எரிச்சல் மற்றும் சரும வறட்சியைத் தடுக்கும். 
    ×