search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலிபிளவர்"

    • கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து காலிபிளவர் அதிக விளைச்சலை தந்துள்ளது.
    • 20 டன் வரை காலிபிளவர் விற்பனைக்கு வருகிறது. இதன் காரணமாக ரூ.30 முதல் ரூ.40 வரை விற்ற 1 காலிபிளவர் பூ , தற்போது ரூ.15 , ரூ.20, ரூ.25, ரூ.30 வரை என அளவைப் பொறுத்து விற்கப்படுகிறது.

    சேலம்:

    தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல், குன்னூர், கோத்தகிரி, ஓசூர் , ராயக்கோட்டை, கெலமங்கலம், கர்நாடகா மாநிலம் மைசூரு, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் காலிபிளவர் விளைவிக்கப்படுகிறது. இந்த பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து காலிபிளவர் அதிக விளைச்சலை தந்துள்ளது.

    இதன் காரணமாக சேலம் மார்க்கெட்டுக்கு வழக்கத்தை விட காலிபிளவர் வரத்து அதிகரித்துள்ளது. சேலம் மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு வழக்கமாக சுமார் 10 டன் வரை காலிபிளவர் பூ விற்பனைக்கு வரும்.

    கடந்த சில நாட்களாக வரத்து அதிகரித்து 20 டன் வரை காலிபிளவர் விற்பனைக்கு வருகிறது. இதன் காரணமாக ரூ.30 முதல் ரூ.40 வரை விற்ற 1 காலிபிளவர் பூ , தற்போது ரூ.15 , ரூ.20, ரூ.25, ரூ.30 வரை என அளவைப் பொறுத்து விற்கப்படுகிறது.

    குழம்பு, பொரியல், மற்றும் காலிபிளவர் சில்லி போட அதிகளவில் விற்பனை ஆகிறது . இன்னும் சில மாதங்களுக்கு அதிகளவில் வரத்து இருக்கும் என தெரிவித்தனர். காலிபிளவரில் நார்ச்சத்து, வைட்டமின்கள் சத்துக்கள், அதிகம் உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதால் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர் என வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர்.

    • சீதோஷ்ண நிலை இருப்பதால் காலிபிளவர் சாகுபடிக்கு விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
    • பண்ணைகளில் நாற்று 1-க்கு 50 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர், பல்லடம் சுற்றுப்பகுதியிலும் மிதமான சீதோஷ்ண நிலை இருப்பதால் காலிபிளவர் சாகுபடிக்கு ஏதுவாக உள்ளதால் விவசாயிகள் காலிபிளவர் சாகுபடியில் ஆர்வம் காட்டுகின்றனர்.

    குறைந்த அளவு தண்ணீரில் விளையக் கூடிய பயிராகவும் விவசாயிகளுக்கு தினமும் ஏற்படும் பணத்தேவையை தீர்க்கும் பயிராகவும் காலிபிளவர் உள்ளது. காலிபிளவர் நாற்றுகளை, தனியார் நாற்று பண்ணைகளில் நாற்று 1-க்கு 50 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 ஏக்கருக்கு 14 ஆயிரம் முதல் 15 ஆயிரம் நாற்றுகள் வரை நடவு செய்யலாம். காலிபிளவர் சாகுபடியில் பூச்சி தாக்குதல்களுக்கு 2 முறை மருந்து தெளித்து, குறிப்பிட்டநாள் இடைவெளியில், நீரில் கரையும் உரங்களை காலிபிளவர் செடியின் வளர்ச்சிக்காக உபயோக்கின்றனர். காலிபிளவர் செடிநட்ட 80-வது நாளில் இருந்து காலிபிளவர் பூ அறுவடை செய்யலாம். தற்போது மார்க்கெட்டில் காலிபிளவர் 1 கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையாகிறது.

    ×