சேலம் மார்க்கெட்டுக்கு காலிபிளவர் வரத்து அதிகரிப்பு

கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து காலிபிளவர் அதிக விளைச்சலை தந்துள்ளது. 20 டன் வரை காலிபிளவர் விற்பனைக்கு வருகிறது. இதன் காரணமாக ரூ.30 முதல் ரூ.40 வரை விற்ற 1 காலிபிளவர் பூ , தற்போது ரூ.15 , ரூ.20, ரூ.25, ரூ.30 வரை என அளவைப் பொறுத்து விற்கப்படுகிறது.
சேலம் மார்க்கெட்டுக்கு காலிபிளவர் வரத்து அதிகரிப்பு
Published on

சேலம்:

தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல், குன்னூர், கோத்தகிரி, ஓசூர் , ராயக்கோட்டை, கெலமங்கலம், கர்நாடகா மாநிலம் மைசூரு, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் காலிபிளவர் விளைவிக்கப்படுகிறது. இந்த பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து காலிபிளவர் அதிக விளைச்சலை தந்துள்ளது.

இதன் காரணமாக சேலம் மார்க்கெட்டுக்கு வழக்கத்தை விட காலிபிளவர் வரத்து அதிகரித்துள்ளது. சேலம் மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு வழக்கமாக சுமார் 10 டன் வரை காலிபிளவர் பூ விற்பனைக்கு வரும்.

கடந்த சில நாட்களாக வரத்து அதிகரித்து 20 டன் வரை காலிபிளவர் விற்பனைக்கு வருகிறது. இதன் காரணமாக ரூ.30 முதல் ரூ.40 வரை விற்ற 1 காலிபிளவர் பூ , தற்போது ரூ.15 , ரூ.20, ரூ.25, ரூ.30 வரை என அளவைப் பொறுத்து விற்கப்படுகிறது.

குழம்பு, பொரியல், மற்றும் காலிபிளவர் சில்லி போட அதிகளவில் விற்பனை ஆகிறது . இன்னும் சில மாதங்களுக்கு அதிகளவில் வரத்து இருக்கும் என தெரிவித்தனர். காலிபிளவரில் நார்ச்சத்து, வைட்டமின்கள் சத்துக்கள், அதிகம் உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதால் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர் என வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com