search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரூர் கலெக்டர் அன்பழகன்"

    கரூருக்கு வருகிற 7-ந்தேதி வரும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார். #GovernorBanwarilalPurohit
    கரூர்:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று தூய்மை பணிகள் குறித்து  ஆய்வு செய்கிறார். மேலும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கரூருக்கு வருகிற 7-ந்தேதி வரும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார். 

    இதற்காக சென்னையில் இருந்து புறப்பட்டு மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம்  வருகிற 7-ந் தேதி கரூர் ரெயில் நிலையத்திற்கு  வருகிறார். அங்கு  அவரை அதிகாரிகள் வரவேற்கின்றனர். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு , கரூர் அருகே தரகம்பட்டி பகுதியிலுள்ள இன்ப சேவா சங்கம் என்கிற தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பின் 50-வது ஆண்டு பொன் விழாவில் கலந்து கொண்டு பேசுகிறார். 

    பின்னர் அன்று மதியம் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே அமைந்துள்ள அரசு சுற்றுலா மாளிகையில் அவர் தங்கி ஓய்வெடுக்கிறார். மேலும் பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரிடமிருந்து கோரிக்கை மனுக்களை  பெறுகிறார். அன்றைய தினம் மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை மனுக்களை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார். 

    கவர்னர் வருகையையொட்டி கரூர் மாவட்ட போலீஸ் துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. #GovernorBanwarilalPurohit 
    கரூர் மாவட்டத்தில் சிறுபான்மையின மக்களுக்கு ரூ.3 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
    கரூர்:

    கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் கடன் வழங்கும் முகாம் நடந்தது.

    முகாமிற்கு கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி சிறுபான்மையின மக்களுக்கு பொருளாதார கடன் வழங்குவதற்கான விண்ணப்பங்களை வழங்கினார்.

    தமிழகத்தில் வாழும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் சமூகங்களை சேர்ந்த சிறுபான்மையின மக்கள் இந்த கடன் உதவிகளை பெற்று பயனடையலாம். இதன்மூலம், தனி நபர் கடன், சுயஉதவிக்குழுக்களுக்கான கடன், கல்வி கடன், கறவை மாடு, ஆட்டோ, தையல் எந்திரம் வாங்க கடன், மளிகை கடை, ஜவுளி வியாபாரம் உள்பட அனைத்து வகை கடன்களும் வழங்கப்படும். இக்கடன் உதவிகளை பெறுவதற்கு 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் உதவி வழங்கப்படும். கடன் உதவி திட்டங்கள் மத்திய, நகர தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

    கரூர் மாவட்டத்தில் 2017-18 -ம் நிதி ஆண்டில் 228 பேருக்கு ரூ.1 கோடியே 5 லட்சத்து 75 ஆயிரம் பரிந்துரை செய்து அதில் முதற்கட்டமாக 113 நபர்களுக்கு ரூ.70 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. 2018-19-ம் நிதியாண்டில் ரூ.3 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    அதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. ஒரு வாரம் இம்முகாம் நடைபெறும். இதனை சிறுபான்மையின மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகனின் உத்தரவின் பேரில் வேலாயுதம் பாளையத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகனின் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை மாவட்ட துணை இயக்குநர் ஆலோசனையின் படி வேலாயுதம் பாளையத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் நடமாடும் மருத்துவ குழு மருத்துவர் சக்தியேந்திரன் கலந்துக் கொண்டு மருத்துவ முகாமில் பொதுமக்கள் பங்கு பெற்று பயன் பெறுவது குறித்து திட்ட விளக்க உரையாற்றினர். அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் கூறப்பட்டது. 

    நடமாடும் மருத்துவ குழு மருத்துவர் சத்தியேந்திரன் தலைமையில் செவிலியர்கள் ஜெயந்தி, பாப்பாத்தி, உதவியாளர்கள் ராஜமாணிக்கம், குமார் கொண்ட மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். இதில் கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகளை வழங்கினார்கள். மேலும் சர்க்கரை, ரத்தக் கொதிப்பு, காய்ச்சல், சளி,வயிற்றுப் போக்கு,தோல் வியாதிகள், ரத்த சோகை, வயிற்று வலி, குடற்புழு நீக்க மாத்திரை கள் வழங்கப்பட்டது. இதில் வேலாயுதம்பாளையம், சுற்றுவட்டார பகுதிகளைசேர்ந்த சுமார் 300-க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். முகாமில் கலந்து கொண்டவர்களுக்குநில வேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
    கரூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு இலவச பயிற்சிக்கு பார்வையற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் இளநிலை கல்வியியல் ஆசிரியர் பயிற்சி பட்டம் பயின்ற பார்வையற்றவர்களுக்கு கல்வித்துறை மூலமாக ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. 

    இதில் சேர விருப்பமுள்ள பார்வையற்றவர்கள் தங்களது விண்ணப்பத்தை வருகிற 29-ந்தேதிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக முகவரிக்கு விண்ணப்பித்து அனைத்து பார்வையற்ற ஆசிரியர்கள் பயனடையலாம். 

    இந்த தகவலை மாவட்ட கலெக்டர் அன்பழகன் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளார்.
    ×