search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கன"

    • சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கலந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
    • இதனால் பகல் நேரங்களில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டாலும், இரவில் வெப்பம் தணிந்து இதமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ஏற்காடு:

    தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிரறது. சில பகுதிகளில் அவ்வப்போது கோடை மழை பெய்து வெப்பத்தை தணித்தாலும் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாகவே உள்ளது.

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கலந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டாலும், இரவில் வெப்பம் தணிந்து இதமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இந்த நிலையில், நேற்று திடீரென மழை பெய்ய தொடங்கியது. சூறைக்கற்றுடன் சுமார் அரை மணி நேரம் பெய்த இந்த மழையின் காரணமாக, ஏற்காடு - நாகலூர் சாலையில் ராட்சச சவுக்கு மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது.

    இதன் காரணமாக ஏற்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பள்ளி மட்டும் வேலை முடிந்து பொதுமக்கள் வீட்டுக்கு செல்லும் நேரம் என்பதால், சாலையின் இருபுறமும் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    மின்கம்பி மீது மரம் விழுந்ததால், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்துறை ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வீட்டிற்கு செல்ல முடியாமல், அங்கே காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.

    • தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வழி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
    • தொடர் மழையால் எடப்பாடி மேட்டுத்தெருவில் வீடு இடிந்து மூதாட்டி பலி.

    சேலம்:

    தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வழி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதையொட்டி சேலம் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    கன மழை

    இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் பல பகுதிகளில் நேற்றிரவும் கன மழை பெய்தது. குறிப்பாக பெத்த நாயக்கன்பாளையம், ஏற்காடு, வீரகனூர், கரிய கோவில், மேட்டூர் உள்பட பல பகுதிகளில் மீண்டும் கன மழை பெய்தது. நேற்றிரவு 9 மணியளவில் தொடங்கிய மழை விடிய விடிய கன மழையாக கொட்டியது.

    இந்த மழையால் அந்த பகுதிகளில் உள்ள ஓடைகள், ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் எங்கு பார்த்தாலும் தண்ணீர் காடாக காட்சி அளித்தது. மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் 35-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பிய நிலை யில் மேலும் பல ஏரிகளுக்கு நீ ர்வரத்து அதிகரித்துள்ளது.

    ஏற்காட்டில் நேற்றிரவு தொடங்கிய மழை இன்று காலை வரை கன மழையாக கொட்டியது. இதனால் மலைப்பாதையில் புதிது புதிதாக அருவிகள் உருவாகி உள்ளன. இதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து வருகிறார்கள். ஏற்காட்டில் பெய்த கன மழையால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

    சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்ட லாம்பட்டி, ஜங்சன் என அனைத்து பகுதிகளிலும் நேற்றிரவு மழை தூறலாக நீடித்தது. இந்த தூறல் விடிய, விடிய நீடித்தது.

    சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் எடப்பாடி மேட்டுத்தெருவில் உள்ள ராணி (வயது 65 )என்பவரது வீடு இன்று காலை இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் தனியாக வசிக்கும் ராணி இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்த

    னர். தகவல் அறிந்த எடப்பாடி போலீசார் மற்றும் தீய ணைப்பு துறையினர் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    578.20 மி.மீ. மழை

    சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக பெத்த நாயக்கன் பாளையத்தில் 90 மி.மீ. பதிவாகி உள்ளது. ஏற்காடு 75.2, வீரகனூர் 74, கரியகோவில் 58, மேட்டூர் 48, ஆத்தூர் 46, ஆனைமடுவு 41, கெங்கவல்லி 35, எடப்பாடி 24, தம்மம்பட்டி 23, சங்ககிரி 20, ஓமலூர் 18.6, காடையாம்பட்டி 15.6, சேலம் 9.6, மி.மீ என மாவட்டம் முழுவ தும் 578.20 மி.மீ. மழை பெய்துள்ளது.

    • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
    • சேலம் மாவட்டத்தில் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 88 ஏரி–களில் 29 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.

    கன மழை

    குறிப்பாக சேலம் மாவட்டம் மேட்டூர், வீரக–னூர், எடப்பாடி, சங்ககிரி உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகள், வயல் வெளிகளில் தண்ணீர் தேங்கியது. சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி, ஜங்சன் உள்பட அனைத்து பகுதிகளிலும் இன்று அதிகாலை லேசான மழை பெய்தது.

    மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் ஏரி, குளங்களுக்கு நீர்வ–ரத்து அதிகரித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 88 ஏரி–களில் 29 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

    29 ஏரிகள் நிரம்பின

    குறிப்பாக கன்னங்கு–றிச்சி, மூக்கனேரி, பைரோஜி ஏரி, கமலாபுரம் பெரிய ஏரி, சின்ன ஏரி, கொண்டலாம்பட்டி ஏரி, ஆத்தூர் புது ஏரி, முட்டல் ஏரி, மணி விழுந்தான் ஏரி, தேவியாக்குறிச்சி ஏரி, செந்தாரப்பட்டி ஏரி, பனை ஏரி உள்பட 29 ஏரிகள் முழுமையாக

    நிரம்பின.

    மேலும் கொட்டவாடி ஏரி, சார்வாய் பெரிய ஏரி, ஆறகளூர் ஏரி, தியாகனூர் ஏரி உள்பட 8 ஏரிகள் நிரம்பும் தருவாயில் உள்ளன. தொடவூர் ஏரி, வலசக்கல்பட்டி ஏரி, தலைவாசல் ஏரி உள்பட 16 ஏரிகள் 25 சதவீதத்திற்கும் மேல் நிரம்பி உள்ளன. 18 ஏரிகள் 25 சதவீதத்திற்கும் குறைவாகவே தண்ணீர் உள்ளது. 15 ஏரிகள் வறண்ட நிலையில் உள்ளன.

    122 மி.மீ. மழை

    மாவட்டத்தில் அதிக பட்சமாக மேட்டூரில் 23.8 மி.மீ. மழை பெய்துள்ளது. வீரகனூர் 20, எடப்பாடி 17.6, சங்ககிரி 13.1, காடையாம்பட்டி 12, சேலம் 10, பெத்தநாயக்கன் பாளையம் 5.5, ஏற்காடு 5, தம்மம்பட்டி 5, ஓமலூர் 4.6, ஆனைமடுவு 3, கரியகோவில் 2 மி.மீ. என என மாவட்டம் முழுவதும் 112 மி.மீ. மழை பெய்துள்ளது.

    ஆட்டையாம்பட்டி

    ஆட்டையாம்பட்டி அடுத்துள்ள எஸ்.பாலம் வளைவு பகுதியில் விபத்துகளை தடுக்கும் பொருட்டு கடந்த 2 ஆண்டுக்கு முன்பு சாலை தடுப்பும், சிக்னல் கம்பமும் அமைக்கப்பட்டது.

    இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக இரவில் கனமழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலையில் ஆட்டையாம்பட்டி பகுதி–யில் கனமழை பெய்தது.

    இதில், ஏற்கனவே அடிப்பகு–தியில் துருபிடித்து இருந்த சிக்னல் கம்பம் சாலையின் நடுவே உடைந்து விழுந்தது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக ஒருவழிப் பாதையில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பணியாளர்கள் உடைந்த சிக்னல் கம்பத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

    தம்மம்பட்டி

    தம்மம்பட்டி வனச்சரக அலுவலகம் வழியாக கொல்லிமலை, செங்காடு பகுதிகளுக்கு செல்ல சாலை வசதி உள்ளது. இந்நிலையில் தம்மம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் கன–மழை பெய்ததால், கொல்லிமலை, செங்காடு செல்லும் சாலையில் மழை நீர் தேங்கியது. இதில் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இத–னால் அப்பகுதி மக்கள், கொல்லிமலை சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

    சேலம் மாநகர பகுதியில் பெய்த கனமழையால் திருமணிமுத்தாற்றை நோக்கி காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இதனால் ஏ.டி.சி. நகரில் உள்ள பாலத்துக்கு மேலே தண்ணீர் செல்வ–தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலை–களுக்கும் தண்ணீர் வரத்து அதகரித்துள்ளது.

    • சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக வருகிற 10-ந் தேதி வரை கன மழை பெய்யும்.
    • வானிலை ஆய்வு அமையம் தகவல்

    சேலம்:

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தெற்கு வங்க கடலில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வருகிற 10-ந் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    அதன் தொடர்ச்சியாக சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று (8-ந் தேதி) முதல் வருகிற 10-ந் தேதி வரை இடி, மின்னலுடன் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. இதனா ல்பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
    • வானிலை ஆய்வு மையம் தகவல்

    சேலம்:

    ஆந்திர பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானியைஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள்ளது.

    அதன் தொடர்ச்சியாக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்றும்( 8-ந் தேதி), நாளையும் (9-ந் தேதி)கனமழை பெய்யவாய்ப்புள்ளது.இந்த தகவலை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • சேலம் மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்று பரவலாக மழை பெய்தது.
    • அதிக பட்சமாக 40 மி.மீ. பதிவு

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்று பரவலாக மழை பெய்தது. குறிப்பாக மேட்டூரில் நள்ளிரவில் தொடங்கிய மழை 2 மணி நேரத்திற்கும் மேலாக கன மழையாக நீடித்தது.

    இதே போல ஏற்காட்டில் 12.30 மணிக்கு தொடங்கிய மழை 2 மணி நேரம் கன மழையாக கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது . மழையை தொடர்ந்து ஏற்காட்டில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. மழையை தொடர்ந்து ஏற்காட்டில் 2 மணி நேரம் மின் தடை எற்பட்டது. இதனால் மக்கள்கடும் அவதிப்பட்டனர்.

    சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, ஜங்சன், கொண்டலாம்பட்டி என பெரும்பாலான பகுதிகளில் இன்று அதிகாலை 2 மணியளவில் பரவலாக மழை பெய்தது . இந்த மழையால் மாநகரின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக மேட்டூரில் 40.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது . ஏற்காடு 30.4, சேலம் 16.5, காடையாம்பட்டி 10, எடப்பாடி 8 , ஓமலூர் 8, ஆனை மடுவு 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 114.10 மி.மீ.மழை பெய்துள்ளது.

    • சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
    • வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தகவல்.

    சேலம்:

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நீர் நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் நாளை மற்றும் வருகிற 2-ந் தேதியும் மிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது-

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் நாளை (31-ந் தேதி) மற்றும் 2-ந் தேதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்கள் கன மழை பெய்யும் என வானிைல ஆய்வு மைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார்.
    • இன்று (28-ந் தேதி) முதல் வருகிற 31-ந் தேதி வரை இடி, மின்னலுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சேலம்:

    சேலம், நாமக்கல் மாவட்டங்க ளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது . அதன் தொடர்ச்சியாக நீர் நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் இன்று முதல் மேலும் 4 நாட்களுக்கு சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது .

    இது குறித்து வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது- சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இன்று (28-ந் தேதி) முதல் வருகிற 31-ந் தேதி வரை இடி, மின்னலுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.
    • மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.

    குறிப்பாக தம்மம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை பெய்தது . இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. கோடை காலத்தில் பெய்த இந்த மழை விவசாய பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக தம்மம்பட்டியில் 17மி.மீ. மழை பெய்துள்ளது. சேலம் 1.4, ஏற்காடு 1.4, ஆத்தூர்1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 20.8 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்றும் காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது. 

    சேலம் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கன மழை பெய்ததது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காலையில் கடும் வெயில் நிலவுகிறது. மாலையில் கன மழை பெய்து வருகிறது. நேற்று வழக்கம்போல காலையில் வெயில் வாட்டியது.

    மாலையில் வானில் கரு மேகங்கள் சூழ்ந்தன. பின்னர் கன மழை கொட்டியது. சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. குறிப்பாக பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், எடப்பாடி, ஏற்காடு ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது.

    அதிகபட்சமாக 45.5 மி.மீ பதிவு

    மாவட்டத்தில் அதிகபட்சமாக பெத்த–நாயக்கன்–பாளையத்தில் 45.5 மி.மீ. மழையும், ஏற்காட்டில் 45.2 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

    எடப்பாடி- 35.4, கரியகோவில்-18, ஆத்தூர்-10.8, தம்மம்பட்டி-10, வீரகனூர்-5, மேட்டூர்-4.2, காடையாம்பட்டி-2.5, சேலம்-1.

    மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 181.6 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதன் சராசரி 12.10 ஆகும்.

    தொடர் மழை காரணமாக வாழப்பாடி தாலுகாவில் அமைந்துள்ள ஆனைமடுவு அணை நீர்மட்டம் 44.52 அடியாகவும், பெத்தநாயக்–கன்பாளையம் தாலுகாவில் உள்ள கரியகோவில் அணை நீர்மட்டம் 44.75 அடியாகவும் உயர்ந்து உள்ளது.

    • பவானி சாகர் நீர் பிடிப்பு பகுதி களான தெங்குமரகடா, பில்லூர், குந்தா, அப்பர் பவானி பகுதிகளில் மழை பெய்ததால் மாயாற்றில் தண்ணீர் அதிகளவில் சென்றது. இதனால் பவானிசாகர் அணைக்கு 1600 கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
    • பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 82.66 அடியாக இருந்தது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    இதையடுத்து மதியம் 3 மணிக்கு மேக மூட்டமாக காணப்பட்டது. தொடர்ந்து சத்தியமங்கலம், பண்ணாரி, அரியப்பம் பாளையம், ஓட்டை குட்டை, புளியம் கோம்பை, வட வள்ளி, பண்ணாரி, சிக்கரசம் பாளையம், ராஜன் நகர் உள்பட பல்வேறு இடங்களில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து இரவு வரை மழை தூறி கொண்டே இருந்தது.

    இதனால் ரோடுகளில் மழை தண்ணீர் பெருக் கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றன. பரவலாக மழை பெய்ததால் விவசாய நிலங்கள் பசுமையாக காட்சி அளித்தது.

    இதே போல் திம்பம், தாளவாடி, ஆசனூர், தொட்டகாஜனூர் உள்பட வனப்பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    மேலும் பவானிசாகர், புளியம்பட்டி, புங்கர்பள்ளி, நல்லூர், காவிலிபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் இடி- மின்னலுடன் பரவ லாக மழை பெய்தது.

    பவானி சாகர் நீர் பிடிப்பு பகுதி களான தெங்குமரகடா, பில்லூர், குந்தா, அப்பர் பவானி பகுதிகளில் மழை பெய்ததால் மாயாற்றில் தண்ணீர் அதிகளவில் சென்றது. இதனால் பவானிசாகர் அணைக்கு 1600 கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.

    பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 82.66 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1667 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    அணையில் இருந்து அரக்கன்கோட்டை- தடப்பள்ளி வாய்க்காலுக்கு 950 கனஅடியும், ஆற்றுக்கு குடிநீருக்கு 100 கனஅடியும், எல்.பி.பி. வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1055 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. 

    ×