search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கத்தியால் குத்திய வாலிபர்"

    • கணவரை பிரிந்து கடந்த 4 வருடங்களாக வசித்து வந்தார்.
    • ஆத்திரமடைந்த ருத்ரன் அங்கு சென்று ருத்ரம்மாவை கத்தியால் குத்தியுள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனி கோட்டை அருகேயுள்ள கொட்டையூர்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ருத்ரம்மா (வயது 40).

    இவர் அதே பகுதியை சேர்ந்த தனது உறவினர் ருத்ரன் என்பவருடன் கள்ள தொடர்பு ஏற்பட்டு கணவரை பிரிந்து கடந்த 4 வருடங்களாக வசித்து வந்தார்.

    இந்நிலையில் சமீபத்தில் ருத்ரம்மா மனம் திருந்தி தனது கணவன் வீட்டுக்கு திரும்பிவிட்டாராம்.இதில் ஆத்திரமடைந்த ருத்ரன் அங்கு சென்று ருத்ரம்மாவை கத்தியால் குத்தியுள்ளார்.

    இதில் படுகாயம் அடைந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ருத்ரம்மா கொடுத்த புகாரின் பேரில் தேன்கனி கோட்டை போலீசார் ருத்ரன் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • ஆத்திரமடைந்த ராகுல், பூங்கொடி மற்றும் அவரது கணவர் சரவணனை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
    • இதில் காயமடைந்த 3 பேரும் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே பள்ளக்காட்டுப்புதூரை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி பூங்கொடி (வயது 36). பூங்கொடியின் அண்ணன் சாமிநாதன் (38).

    இவர் திருப்பூரில் உள்ள ஒரு லாரி கம்பெனியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு ஏற்கனவே திரும ணமாகி 2 மகன்களுடன் இருந்த வளர்மதி என்ற பெண்ணை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இவர்கள் சென்னிமலை- ஊத்துக்குளி ரோடு காந்தி நகரில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் வளர்மதி மற்றும் அவருடைய மூத்த மகன் ராகுல் (24). ஆகியோர் சம்பவத்தன்று சென்னி மலை அருகே காந்தி நகர் வீட்டுக்கு வந்து சாமிநாத னிடம், அவருடைய பெயரில் உள்ள சொத்தை எங்கள் பெயருக்கு எழுதி தாருங்கள் என கேட்டு தகராறு செய்த தாக கூறப்படுகிறது.

    இது பற்றிய தகவல் அறிந்ததும் சாமிநாதனின் தங்கை பூங்கொடி, அவருடைய கணவர் சரவணன், சாமிநாதன் வீட்டுக்கு சென்று தகராறு குறித்து கேட்டனர்.

    இதில் அவர்களு க்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திர மடைந்த ராகுல், பூங்கொடி மற்றும் அவரது கணவர் சரவணனை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க வந்த சாமி நாதனை ராகுல் சரமாரி யாக கத்தியால் குத்தினார்.

    இதில் காயமடைந்த 3 பேரும் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ராகுலை கைது செய்தனர்.

    • கமலேஸ்வரன், கார்த்திக்கு போன் செய்தார். அப்போது அவரை போடா, வாடா என்று பேசி உள்ளார்.
    • 4 பேரும் மாறி மாறி பீர் பாட்டில், கற்களால் தாக்கி கொண்டனர்

    கோவை:

    கோவை வேலாண்டிப்பாளையம் கோவில்மேடை சேர்ந்தவர் கணேஷ்பாபு (வயது 24). டிரைவர். இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (22). தொழிலாளி.

    இந்த நிலையில் கணேஷ்பாபுவின் தம்பி கமலேஸ்வரன் (19) என்பவர் அண்ணனின் நண்பர் கார்த்திக்கை மரியாதை இல்லாமல் பேசி வந்தார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று கமலேஸ்வரன், கார்த்திக்கு போன் செய்தார். அப்போது அவரை போடா, வாட ா என்று பேசி உள்ளார். இதனால் மீண்டும் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த கார்த்தி தனது நண்பர் மணிகண்டன் (22) என்பவரை அழைத்து கொண்டு கோவில்மேடு அருகே உள்ள மைதானத்திற்கு சென்றார். அப்போது அங்கு இருந்த கணேஷ்பாபு மற்றும் அவரது தம்பி கமலேஸ்வரனிடம், கார்த்தி தகராறில் ஈடுபட்டார்.

    இது அவர்களுக்கு இடையே கைகலப்பாக மாறியது. 4 பேரும் மாறி மாறி பீர் பாட்டில், கற்களால் தாக்கி கொண்டனர். அப்போது கார்த்தி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கமலேஸ்வரனை குத்தினார். இந்த தகராறை பார்த்து அக்கம் பக்கத்தினர் துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பலத்த காயம் அடைந்த கார்த்தி மற்றும் கணேஷ்பாபுவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    அதில் கமலேஸ்வரன் மற்றும் மணிகண்டனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்த அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×