search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓமந்தூரார் அரசு மருத்துவமனை"

    • அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அனஸ்தீசியா எனப்படும் மயக்க மருந்து வழங்கப்பட்டது.
    • அறுவை சிகிச்சை குறைந்தது இரண்டரை மணி முதல் அதிகபட்சமாக 4 மணி நேரம் வரை நடைபெறும் என தகவல்.

    போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு முறைகேடு விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த 13-ந்தேதி நள்ளிரவில் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

    நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 3 ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இருதய அறுவை சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையின் ஏழாவது தளத்தில் ஸ்கை வியூ அறையில் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடைபெறுகிறது.

    இன்று அதிகாலை 5.30 மணியளவில் அறுவை சிகிச்சை தொடங்கியது. 

    மருத்துவர் ரகுராமன் தலைமையிலான குழு அறுவை சிகிச்சை மேற்கொண்டு வருகிறது.

    முன்னதாக, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அனஸ்தீசியா எனப்படும் மயக்க மருந்து வழங்கப்பட்டது.

    செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து மயக்கவியல் துறை மூத்த மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    இந்த அறுவை சிகிச்சை குறைந்தது இரண்டரை மணி முதல் அதிகபட்சமாக 4 மணி நேரம் வரை நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.

    அறுவை சிகிச்சைக்கு பிறகு செந்தில் பாலாஜி மூன்று நாட்களுக்கு ஐசியூவில் மருத்துவரின் தீவிர கண்காணிப்பில் இருப்பார் என்றும் பிறகு 10 நாட்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜி தொடர்ந்து அங்கேயே சிகிச்சை பெற்று வருகிறார்.
    • காவேரி மருத்துவமனை டாக்டர்கள் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான முன்னேற்பாடுகளை தொடங்கி இருக்கிறார்கள்.

    சென்னை:

    போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு முறைகேடு விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த 13-ந்தேதி நள்ளிரவில் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

    நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 3 ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இருதய அறுவை சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    செந்தில் பாலாஜிக்கு நாளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்த தகவலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் இன்று அளித்த பேட்டி வருமாறு:-

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள் தொடர்பாக ஓமந்தூரார் மருத்துவமனையில் பிளட் தின்னர் என்கிற சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அந்த சிகிச்சை முடிந்து 4 அல்லது 5 நாட்கள் கழித்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

    காவேரி மருத்துவமனையுடன் நாங்கள் தொடர்ச்சியாக தொடர்பில் இருக்கிறோம். அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டியதற்கான உடல் தகுதியை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று இரவு பெற்று இருக்கிறார்.

    எனவே செந்தில் பாலாஜிக்கு ரத்தப்போக்கு சிக்கல் இருக்காது என்று கண்டறியப்பட்டுள்ளது. அதனால் நாளை அதிகாலை அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. அறுவை சிகிச்சைக்கும் அமலாக்கத்துறை விசாரணைக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.

    செந்தில் பாலாஜி உடல்நிலை விஷயத்தை பொறுத்தவரையில் மனிதாபிமான முறையோடு அணுக வேண்டும். தனக்கு ரத்த நாளங்களில் அடைப்பு உள்ளது என்பதை பற்றி தெரியாமலே அமைச்சர் இவ்வளவு காலம் வாழ்ந்திருக்கிறார்.

    அரசு மருத்துவமனை சிகிச்சையைத் தவிர அவரது சொந்த குடும்ப உறுப்பினர்களும் தனிப்பட்ட முறையில் கேட்டு கொண்டதன் பெயரில் அப்பல்லோ மருத்துவமனையில் பிரபல மருத்துவர்கள் செங்கோட்டுவேல் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என உறுதிப்படுத்தி உள்ளார். ஒன்றிய அரசின் இ.எஸ்.ஐ. மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என உறுதி செய்துள்ளனர். இதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. அமைச்சர் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    செந்தில் பாலாஜி போலியாக மருத்துவ சிகிச்சை பெறுவதாக அமலாக்கத்துறை தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது குறித்து கேட்டபோது, 'தமிழகத்தில் 20 ஆயிரம் அரசு மருத்துவர்கள் உள்ளனர். இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான மருத்துவர்கள் உள்ளனர்.

    இந்நிலையில் ஒட்டுமொத்த மருத்துவர்களின் நேர்மை தன்மையும் மருத்துவ குணத்தையும் சந்தேகப்படுகிறார்கள். இந்நிலையில் நாளை அறுவை சிகிச்சை செய்த பின் என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை.

    ஒருவர் தனக்கு என்ன பாதிப்பு இருந்தாலும் இது போன்று இதய அறுவை சிகிச்சை செய்து கொள்வார்களா? என்பதை அமலாக்கத்துறை தான் விளக்க வேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    இதையடுத்து காவேரி மருத்துவமனை டாக்டர்கள் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான முன்னேற்பாடுகளை தொடங்கி இருக்கிறார்கள்.

    இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட பின்னர் செந்தில் பாலாஜியை சில நாட்கள் நன்றாக ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுறுத்த உள்ளனர். இதன்படி செந்தில் பாலாஜியை காவேரி ஆஸ்பத்திரியிலேயே சில நாட்கள் வரையில் முழுமையாக ஓய்வெடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதனால் அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியிடம் இனி காவலில் விசாரணை நடத்துவது என்பது சாத்தியமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

    இதற்கிடையே செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றியதை எதிர்த்து அமலாக்கத்துறையினர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது. சுப்ரீம் கோர்ட்டில் காலை 10 மணிக்கு பிறகே இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதற்கு முன்பாக நாளை அதிகாலையிலேயே செந்தில்பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுவிடும். இதனால் செந்தில்பாலாஜியை காவேரி ஆஸ்பத்திரிக்கு மாற்றிய விவகாரத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள மனு மீது சுப்ரீம் கோர்ட்டு எந்த மாதிரியான தீர்ப்பை வழங்கப்போகிறது என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    செந்தில் பாலாஜியை கடந்த 16-ந்தேதி மாலையில் இருந்து அமலாக்கத்துறையினர் காவலில் எடுத்திருந்தனர். இன்றுடன் 5 நாட்கள் ஆகியும் ஒரு நாள் கூட அவரிடம் விசாரணை நடத்தப்படவில்லை. வருகிற 23-ந்தேதி மாலை 3 மணிக்கு செந்தில் பாலாஜியை காணொலி வாயிலாக ஆஜர்படுத்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    அமலாக்கத்துறை காவல் முடிவடைய இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் செந்தில் பாலாஜிக்கு நாளை காலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதால் விசாரணையை தொடங்காமலேயே காவலை முடிக்கும் நிலைக்கு அமலாக்கத்துறை தள்ளப்பட்டு தவிக்கும் நிலை ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×