search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்டல் உணவு"

    • பணம் தர மறுத்து ஓட்டல் உரிமையாளரிடம் தகராறு செய்துள்ளார்.
    • ஓட்டல் உரிமையாளரை தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் எழுகோன் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு ஓட்டலுக்கு ஆனந்த் என்ற வாலிபர் சென்றார். அவர் 10 பரோட்டா பார்சல் கேட்டுள்ளார். அதனை ஓட்டல் ஊழியர் கொடுத்து அதற்கான பணத்தை கேட்டுள்ளார். ஆனால் பணம் தர மறுத்து ஓட்டல் உரிமையாளரிடம் தகராறு செய்துள்ளார். மேலும் ஓட்டலில் சமைக்க வைத்திருந்த உணவு பொருளில் சாலையில் கிடந்த சேற்றை எடுத்து ஊற்றினார். அதுமட்டுமின்றி ஓட்டல் உரிமையாளரை தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார்.

    இது குறித்து அந்த ஓட்டலின் உரிமையாளர் போலீசில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ஆனந்த்தை கைது செய்தனர்.

    • உடல்நலம் பாதிக்கப்பட்ட 4 பேரும் கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
    • இந்த ஓட்டலில் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே பிரபல தனியார் ஓட்டலில் கடந்த 13-ஆம் தேதி மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த மோகன் (வயது 27) தனது குடும்பத்துடன் கோழி இறைச்சியில் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களை சாப்பிட்டு விட்டு இரவு வீட்டுக்கு சென்றார். நள்ளிரவில் ஓட்டலில் சாப்பிட்ட 4 பேரும் வாந்தி வயிற்றுப்போக்கால் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். உடனடியாக 4 பேரும் கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இது குறித்து மோகன் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்தில் உள்ள ஓட்டலுக்கு நேரில் சென்று விசாரித்துவிட்டு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். இந்த சம்பவம் ஊரப்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஓட்டலில் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:-

    ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் சைவம் மற்றும் அசைவ ஓட்டல்கள் உள்ளன பெரும்பாலான ஓட்டல்களில் தரமான உணவுகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறதா? என்பது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அடிக்கடி வந்து நேரில் ஆய்வு செய்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • கட்டண உயர்வு, வரிகள் போன்றவற்றால் ஓட்டல் தொழிலை நடத்த முடியாத நிலையில் உள்ளோம்.
    • நிலைமை இப்படியே சென்றால் ஓட்டல் உணவு வகைகளின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயமே ஏற்படும்.

    காய்கறி விலை... மளிகை பொருட்களின் விலை உயர்வோடு வணிக பயன்பாட்டுக்கான மின்சார கட்டணமும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதால் ஓட்டல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் கடும் சுமையை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    மின் கட்டணத்துக்காக 40 சதவீதம் அளவுக்கு கூடுதலாக செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஓட்டல்களில் பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டர்களின் விலை 8 ரூபாய் அதிகரித்துள்ளதால் சமையல் செய்வதற்கான செலவு அதிகரித்துள்ளது. 1500 பேருக்கு சமையல் செய்ய 10 சிலிண்டர்கள் தேவைப்படுவதாக ஓட்டல் உரிமையாளர்கள் கூறுகிறார்கள்.

    விலை உயர்வால் ஒரு நாளைக்கு ரூ.80 கூடுதல் செலவு ஆகிறது என்று கூறும் அவர்கள் மாதத்துக்கு 2500 ரூபாய் வரை சமையல் செலவு அதிகரித்து இருப்பதால் இது பெரும் சுமை என்றே தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக சென்னை ஓட்டல்கள் சங்க தலைவர் எம்.ரவி கூறியதாவது:-

    ஓட்டல் உரிமையாளர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்து ரத்து செய்ய வேண்டும். காய்கறி விலை உயர்வு, சமையல் சிலிண்டர் விலை உயர்வு ஆகியவற்றின் காரணமாக ஓட்டல் தொழில் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் இருப்பது போன்ற நிலை தான் தற்போதும் ஏற்பட்டிருக்கிறது.

    கட்டண உயர்வு, வரிகள் போன்றவற்றால் ஓட்டல் தொழிலை நடத்த முடியாத நிலையில் உள்ளோம். தற்போது மதிய சாப்பாட்டின் விலை 100 ரூபாயில் இருந்து 150 ரூபாய் வரையில் இருக்கிறது. காய்கறி விலை, பருப்பு விலை, சிலிண்டர் விலை, மின் கட்டண உயர்வு போன்றவற்றின் காரணமாக இதே விலைக்கு சாப்பாட்டை கொடுக்க முடியுமா? என்பது கேள்விக்குறியாக மாறி இருக்கிறது.

    அதே நேரத்தில் தற்போது பொதுமக்களின் தலையில் விலை உயர்வை சுமத்த நாங்கள் தயாராக இல்லை. விலைவாசி குறையுமா? என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அப்போதுதான் ஓட்டல் தொழிலை நாங்கள் நடத்த முடியும். இல்லையென்றால் பல ஓட்டல் உரிமையாளர்கள் ஓட்டலை மூடிவிட்டு வேறு தொழிலுக்கு சென்று விடக் கூடிய சூழ்நிலை உள்ளது.

    இது போன்ற விலை உயர்வு காரணமாக 100 சதவீதம் அளவுக்கு ஓட்டல் உரிமையாளர்கள் முதலீட்டை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் ஏற்படும் சுமை எங்களை மட்டுமே பாதிக்காது, பொதுமக்களையும் கண்டிப்பாக பாதிக்கும். நிலைமை இப்படியே சென்றால் ஓட்டல் உணவு வகைகளின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயமே ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×