search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எரிந்து"

    • மைதானத்தில் நாகை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
    • குப்பைகள் நிறைந்து நெருக்கடியாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை காடம்பாடி பகுதி யில் பழைய ஆயுதப்படை மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் நாகை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் குப்பைகள் நிறைந்து நெருக்கடியாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வானுயர பறந்த கரும்புகை மண்டலத்தை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து விரைந்து வந்த 10-க்கும் மேற்பட்ட நாகை தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    தீ விபத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், ஒரு கார் கருகி நாசமானது. தீ விபத்து குறித்து வருவாய்த்துறை மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மணல்மேல்குடி அரசு பள்ளி வளாகத்தில் குப்பைகளை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்

    புதுக்கோட்டை:

    அந்தாங்கி அருகே மணமேல்குடி அரசுப்பள்ளி பழைய கட்டிடத்தில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மணமேல்குடியில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 80க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இதே பள்ளி வளாகத்தில் 20 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கட்டிடம் ஒன்று உள்ளது, இக்கட்டிடம் விரிசலடைந்து கானப்படுவதால் கட்டிடத்தை அகற்றுவதற்காக அரசின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, ஒப்பந்ததாரர்களிடம் பணி ஒப்படைக்கப்பட்டிருந்தது.

    அதனை தொடர்ந்து பழை கட்டிடத்தில் ஏதேனும் பொருட்கள் இருந்தால் அகற்றும்படி ஒப்பந்ததாரர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, வட்டாரக் கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ் ஆகியோர் ஆட்களுடன் சென்று குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவருடன் சென்றவர்கள் குப்பைகளை கூட்டி கட்டிடத்திற்குள்ளேயே தீ வைத்துள்ளனர். இதில் கட்டிடத்திலிருந்து புகை வெளியேறியுள்ளது. இதனை அறிந்த அக்கம் பக்கத்திலுள்ள பொதுமக்கள், பள்ளி வளாகத்திலிருந்து புகை வருகிறதே என்ற அச்சத்தில் தீயணைப்புத்துறை யினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் உள்ளே சென்று பார்க்கையில் குப்பைகள் எரிந்து கொண்டிருந்துள்ளது.அதனை தொடர்ந்து தீயை அணைத்த அவர்கள் குப்பைகளை கூட்டி வெளியே தள்ளியுள்ளனர். பள்ளி வளாகத்திற்குள் தீ விபத்து என்ற பொது மக்களின் அச்சத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




    கெங்கவல்லி அருகே குடிசை வீட்டில் தீ விபத்து நகை-ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே நடுவலூர் ஊராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டு பகுதியில் வசிப்பவர் கந்தசாமி (வயது 70). கூலித் தொழிலாளி. விவசாய தோட்டத்துக்கு கூலி வேலைக்கு சென்று உள்ளனர். வீட்டை பூட்டி விட்டு சென்றனர்.

    இந்த நிலையில் கந்தசாமியின் குடிசை வீட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி அக்கம்பக்கத்தினர் உடனடியாக கெங்கவல்லி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் வீட்டின் அருகில் தீ பரவாமல் தீயை அணைத்தனர். மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

    இந்த தீ விபத்தில் வீட்டின் பீரோவில் இருந்த 2 லட்சம் ரொக்கப் பணம், 2 பவுன் தங்க நகை, வீட்டின் பத்திரம், பட்டுப் புடவை, துணிமணிகள், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள், மிக்ஸி, கிரைண்டர், ஒரு மூட்டை நெல், வீட்டின் உபயோகப் பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி எரிந்தன. இந்த தீ விபத்து குறித்து கெங்கவல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×