குடிசை வீட்டில் தீ விபத்து நகை-ஆவணங்கள் எரிந்து சேதம்

கெங்கவல்லி அருகே குடிசை வீட்டில் தீ விபத்து நகை-ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தது.
குடிசை வீட்டில் தீ விபத்து நகை-ஆவணங்கள் எரிந்து சேதம்
Published on

ஆத்தூர்:

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே நடுவலூர் ஊராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டு பகுதியில் வசிப்பவர் கந்தசாமி (வயது 70). கூலித் தொழிலாளி. விவசாய தோட்டத்துக்கு கூலி வேலைக்கு சென்று உள்ளனர். வீட்டை பூட்டி விட்டு சென்றனர்.

இந்த நிலையில் கந்தசாமியின் குடிசை வீட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி அக்கம்பக்கத்தினர் உடனடியாக கெங்கவல்லி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் வீட்டின் அருகில் தீ பரவாமல் தீயை அணைத்தனர். மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்த தீ விபத்தில் வீட்டின் பீரோவில் இருந்த 2 லட்சம் ரொக்கப் பணம், 2 பவுன் தங்க நகை, வீட்டின் பத்திரம், பட்டுப் புடவை, துணிமணிகள், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள், மிக்ஸி, கிரைண்டர், ஒரு மூட்டை நெல், வீட்டின் உபயோகப் பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி எரிந்தன. இந்த தீ விபத்து குறித்து கெங்கவல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com