search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊராட்சிகள்"

    • தொழிலாளர் தினத்தன்று காலை 11 மணிக்கு கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது.
    • கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளில் நாளை (திங்கட்கிழமை) தொழிலாளர் தினத்தன்று காலை 11 மணிக்கு கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் அனைத்துத்துறை அலுவலர்களும் பங்கேற்று விவாதிக்க உள்ளனர்.

    எனவே கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று கிராமசபை கூட்டத்தை சிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒவ்வொரு ஊராட்சிகளும், புதிதாக கம்ப்யூட்டர் வாங்க ஊரக வளர்ச்சி முகமை அனுமதியளித்துள்ளது.
    • கம்ப்யூட்டர் பழுதானால், திரும்ப மாற்றிக் கொள்ளவும், வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    அவிநாசி:

    தமிழகத்தில், 12, 500க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சி அலுவலக பணிகள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு வரும் நிலையில் ஆன்லைன் வரி வசூல் திட்டமும் விரைவில் அமலுக்கு வரவுள்ளது.ஒவ்வொரு ஊராட்சிகளும், புதிதாக கம்ப்யூட்டர் வாங்க ஊரக வளர்ச்சி முகமை அனுமதியளித்துள்ளது.

    கம்ப்யூட்டர், பிரின்டர், யு.பி.எஸ்., உள்ளிட்ட உபகரணங்கள் சேர்த்து1.50 லட்சம் ரூபாய் வரையிலான நிதியை ஊராட்சி பொதுநிதி அல்லது மாநில நிதிக்குழு மானிய நிதியில் செலவிட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசின்இ-சந்தை (GeM) இணைய தளம் வாயிலாக, கம்ப்யூட்டர்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. செயலியை பதிவிறக்கம் செய்து, விரும்பும் நிறுவனத்தின் கம்ப்யூட்டரின் பெயரை குறிப்பிட்டால், இ-சந்தையில் இணைந்துள்ள வர்த்தகர்கள், தங்கள் விலையை குறிப்பிடுவர்.இதில், குறைந்த விலைப்புள்ளியை குறிப்பிட்டு ஊராட்சி தலைவர்கள் கம்ப்யூட்டரை கொள்முதல் செய்து கொள்ளலாம்.அந்த கம்ப்யூட்டர் பழுதானால், திரும்ப மாற்றிக் கொள்ளவும், வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூர் ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் சிலர் கூறுகையில், 'இ- மார்க்கெட்டிங் மூலம் கம்ப்யூட்டர் கொள்முதல் செய்யப்படுவதன் மூலம், அதன் தரம், விலை உறுதி செய்யப்படுகிறது என்றனர்.

    • நகர்ப்புறத்தில் பெரும்பாலான உடல்கள் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகின்றன.
    • நடமாடும் எரிவாயு தகனமேடை வாகனத்தின் சாவிகளை ஊராட்சி தலைவர்களிடம் ஒப்படைத்தனர்.

    திருப்பூர்:

    இறந்தவர்களை அடக்கம் செய்ய மயானத்தை தேடி சென்ற நிலை மாறிவிட்டது. நகர்ப்புறத்தில் பெரும்பாலான உடல்கள் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகின்றன. இந்நிலையில் கிராமப்புற மக்கள் பயன்படுத்த வசதியாக, நடமாடும் எரிவாயு தகனமேடை வாகனம், மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நமக்கு நாமே திட்டத்தில் தனியார் நிறுவனம் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன், மங்கலம், சின்ன மருதூர் ஆகிய இரண்டு ஊராட்சிகளிலும், 32.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடமாடும் எரிவாயு தகன மேடை வாகனம் பயன்பாட்டுக்கு வருகிறது.கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகியோர் நடமாடும் எரிவாயு தகனமேடை வாகனத்தின் சாவிகளை ஊராட்சி தலைவர்களிடம் ஒப்படைத்தனர்.

    ×