search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உறுதி மொழி"

    • தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதி மொழி எடுக்கப்பட்டது
    • வன்முறைகளை எதிர்க்கும் வகையிலும், அகிம்சை, சகிப்புத்தன்மை ஆகியவற்றை கடைபிடிக்கும் பொருட்டும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன வளாகத்தில் உறுதிமொழி ஏற்புக் கூட்டம் நடைபெற்றது

    கரூர்,

    கரூர் மாவட்டம், காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. வன்முறைகளை எதிர்க்கும் வகையிலும், அகிம்சை, சகிப்புத்தன்மை ஆகியவற்றை கடைபிடிக்கும் பொருட்டும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன வளாகத்தில் உறுதிமொழி ஏற்புக் கூட்டம் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் துணைப் பொது மேலாளர் ராதாகிருஷ்ணன், முதுநிலை மேலாளர்கள் அசோகன், முத்துராமன், மேலாளர் வெங்கடேசன், காவல் ஆய்வாளர் வைத்தியநாதன் மற்றும் விழிப்புணர்வு அதிகாரி, மாதேஸ்வரன், துணை மேலாளர் (பாதுகாப்பு), சங்கிலிராஜன், துணை மேலாளர் (பாதுகாப்பு) ஆகியோர் தலைமையில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டு கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியை சமூக இடைவெளியை கடைபிடித்து எடுத்துக் கொண்டனர்.

    • உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு தூய்மை நடை பயணம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • தூய்மை பணி யாளர்களின் பணியை போற்றும் விதமாக பொன்னாடை அணிவிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே அரியபெருமானூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு தூய்மை நடை பயணம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய குழு சேர்மேன் அலமேலு ஆறுமுகம் முன்னிலை வகித்தார். அரியபெருமானூர் ஊராட்சி மன்றத்தலைவர் சிவக்குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

    கிராமபுறங்களிலுள்ள பொதுமக்கள் அனைவரும் கழிவறையை பயன்படுத்தி கிராமத்தையும், சுற்றுபுறத்தை யும் தூய்மையாக பராமரிக்க வேண்டும் என கூறினார். மேலும் தூய்மை நடைபயணம் குறித்த உறுதி மொழி ஏற்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவி யர்கள், பொதுமக்களின் தூய்மை நடைபயணம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வந்து பின்னர் பள்ளியை அடைந்தனர். முன்னதாக அரிய பெருமானூர் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணி யாளர்களின் பணியை போற்றும் விதமாக பொன்னாடை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ரத்தின மாலா, உதவி திட்ட அலுவலர் (வீடுகள் மற்றும் சுகாதாரம்) ராஜசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், நாகராஜன் மற்றும் கிராம பொதுமக்கள், பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • மாரியம்மன்கோவில் ஊராட்சி ஒன்றியநடுநிலைப் பள்ளியில் சுமார் 560க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்
    • இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் மாணவ, மாணவிகள் எனது குப்பை எனது பொறுப்பு என்ற உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள மாரியம்மன்கோவில் ஊராட்சி ஒன்றியநடுநிலைப் பள்ளியில் சுமார் 560க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    தூய்மையான நகராட்சியாக உருவாக்க வேண்டும் என்று தமிழக அரசின் ஆணைக்கிணங்க தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் எனது குப்பை எனது பொறுப்பு தீவிர தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு குறித்து நகராட்சி ஆணையர் சுப்புராம் தலைமையில் இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்

    விழாவில் நகராட்சி பொறியாளர் ராதா, நகராட்சி சுகாதார ஆய்வாளர் இஸ்மாயில், கோவிந்தராஜ், மாசி மற்றும் ஆசிரியர்கள் நகராட்சி பணியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ×