குளித்தலை அரசு பள்ளியில் தூய்மை தொடர்பாக உறுதிமொழி ஏற்பு

மாரியம்மன்கோவில் ஊராட்சி ஒன்றியநடுநிலைப் பள்ளியில் சுமார் 560க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் மாணவ, மாணவிகள் எனது குப்பை எனது பொறுப்பு என்ற உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
குளித்தலை அரசு பள்ளியில் தூய்மை தொடர்பாக உறுதிமொழி ஏற்பு
Published on

கரூர்:

கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள மாரியம்மன்கோவில் ஊராட்சி ஒன்றியநடுநிலைப் பள்ளியில் சுமார் 560க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

தூய்மையான நகராட்சியாக உருவாக்க வேண்டும் என்று தமிழக அரசின் ஆணைக்கிணங்க தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் எனது குப்பை எனது பொறுப்பு தீவிர தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு குறித்து நகராட்சி ஆணையர் சுப்புராம் தலைமையில் இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்

விழாவில் நகராட்சி பொறியாளர் ராதா, நகராட்சி சுகாதார ஆய்வாளர் இஸ்மாயில், கோவிந்தராஜ், மாசி மற்றும் ஆசிரியர்கள் நகராட்சி பணியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com