search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உக்ரைன் ரஷ்யா போர்"

    • ரஷியாவுடன் இணைக்கப்பட்ட நான்கு பிராந்தியங்களில் டொனெட்ஸ்க்கும் ஒன்றாகும்.
    • உக்ரைனின் கிழக்கில் உள்ள லைமன் நகரை ரஷிய படைகள் கைப்பற்றி இருந்தன.

    உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஏழரை மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இப்போரில் உக்ரைன் நாட்டு நகரங்களை ரஷியா படைகள் கைப்பற்றின. அதன்பின் சில பகுதிகள் ரஷியாவிடம் இருந்து உக்ரைன் ராணுவம் மீட்டது.

    இதற்கிடையே போரில் கைப்பற்றிய உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைப்பதாக அறிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் ரஷிய படையிடம் இருந்து உக்ரைனின் முக்கிய நகரை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது. உக்ரைனின் கிழக்கில் உள்ள லைமன் நகரை ரஷிய படைகள் கைப்பற்றி இருந்தன. அந்த நகரை மீட்க உக்ரைன் படையினர் தொடர்ந்து சண்டையிட்டனர். அந்த நகரை உக்ரைன் ராணுவத்தினர் சுற்றி வளைத்ததால் அங்கிருந்து ரஷிய படைகள் பின் வாங்கின.

    டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள லைமன் நகரை தளவாட மற்றும் போக்குவரத்து மையமாக ரஷியா பயன்படுத்தி வந்தது. ரஷியாவுடன் இணைக்கப்பட்ட நான்கு பிராந்தியங்களில் டொனெட்ஸ்க்கும் ஒன்றாகும். அங்குள்ள லைமனை உக்ரைன் படைமீட்டுள்ளது ரஷியாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

    இதற்கிடையே ரஷிய அதிபர் புதினின் ஆதரவாளரான செச்சினியா பிராந்திய தலைவர் கதிரோவ் கூறும்போது, "எனது தனிப்பட்ட கருத்துப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குறைந்த பாதிப்பு கொண்ட அணு ஆயுதத்தை உக்ரைனில் பயன்படுத்து வதை ரஷியா பரிசீலிக்க வேண்டும்" என்றார்.

    • ரஷியா விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐ.நா.சபை பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது.
    • ரஷியாவால் கொண்டு வரப்பட்ட எந்த மாற்றத்தையும் உலக நாடுகள் அங்கீகரிக்ககூடாது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    உக்ரைன் மீது ரஷியா கடந்த 8 மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இரு தரப்பிலும் ஏராளமான வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆனாலும் உக்ரைனுக்கு பல்வேறு நாடுகள் ஆயுத உதவி செய்து வருவதால் ரஷியாவை எதிர்த்து கடுமையாக போராட்டம் நடந்து வருகிறது. இதனால் போர் இன்னும் முடிவுக்கு வராமல் உள்ளது.

    இந்த நிலையில் உக்ரைனில் உள்ள டானட்ஸ்க், லுசன்ஸ்க், ஸ்பெரெசியா, கெர்சன் ஆகிய 4 பிராந்தியங்கள் ரஷியாவுடன் இணைக்கப்படுவதாக ரஷிய அதிபர் புதின் ரஷியாவின் இந்த நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    இந்த நிலையில் ரஷியா விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐ.நா.சபை பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் ரஷியாவின் இந்த நடவடிக்கை சட்ட விரோதமானது. உக்ரைனில் இருந்து ரஷிய படைகள் உடனே வெளியேற வேண்டும். ரஷியாவால் கொண்டு வரப்பட்ட எந்த மாற்றத்தையும் உலக நாடுகள் அங்கீகரிக்ககூடாது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ரஷியாவுக்கு எதிரான தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 10 நாடுகள் வாக்களித்தது. ஆனால் இந்த வாக்கெடுப்பை இந்தியா, சீனா உள்பட 4 நாடுகள் புறக்கணித்தது. ஐ.நா. சபை தீர்மானத்திற்கு ரஷியா கண்டனம் தெரிவித்து இருக்கிறது.

    • நடமாடும் வாக்குப்பதிவு மையத்துடன் வீடு வீடாக சென்று வாக்கெடுப்பு நடத்தினர்.
    • பொது வாக்கெடுப்பு ஒரு ஏமாற்று வேலை என்று உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. தலைநகர் கிவ், கார் கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

    துறைமுக நகரமான மரியு போலை ரஷிய படைகள் கைப்பற்றியது. அதேபோல் சில நகரங்களையும் ரஷியா தன்வசப்படுத்தியது. தற்போது கிழக்கு உக்ரைனில் ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதற்கிடையே போரில் உக்ரைனின் லுகான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய 4 நகரங்களை தங்கள் நாட்டுடன் இணைக்க திட்டமிட்ட ரஷியா, அதற்காக அப்பகுதிகளில் பொது வாக்கெடுப்பை நடத்தியது.

    நடமாடும் வாக்குப்பதிவு மையத்துடன் வீடு வீடாக சென்று வாக்கெடுப்பு நடத்தினர். நேற்று வரை 5 நாட்கள் வாக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டது. இதையடுத்து வாக்குகள் எண்ணப்பட்டன.

    இந்தநிலையில் உக்ரைனின் பகுதிகளை ரஷியாவுடன் இணைப்பதற்கான வாக்கெடுப்பில் வெற்றி கிடைத்துள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.

    ரஷிய கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு லுகான்ஸ்க் பகுதியில் 98.42 சதவீதம் பேர் ரஷியாவுடன் இணைப்புக்கு ஆதரவாக வாக்களித்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஜபோரி ஜியாவில் 93.11 சதவீதமும், தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சனில் 87.05 சதவீதமும், டொனெட்ஸ்கில் 99.23 சதவீதமும், ரஷியாவுடன் இணைவதற்கு ஆதரவாக வாக்களித்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வாக்கெடுப்பில் ரஷியாவுக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளதாக ரஷிய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தநிலையில் உக்ரைன் பகுதிகளை ரஷியாவிடன் இணைத்து கொள்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிபர் புதின் நாளை மறுநாள் (30-ந்தேதி) அறிவித்து உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    இதுதொடர்பாக இங்கிலாந்து உளவுத்துறை அதிகாரிகள் கூறும்போது, "ரஷிய பாராளுமன்றத்தின் இரு அவைகளும் அதிபர் புதின் 30-ந்தேதி உரையாற்றுகிறார். அப்போது உக்ரைன் பகுதிகளை ரஷியாவுடன் இணைத்து கொள்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை புதின் வெளியிட வாய்ப்பு உள்ளது" என்றனர்.

    இந்த பொது வாக்கெடுப்பு ஒரு ஏமாற்று வேலை என்று உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, "ரஷியா கைப்பற்றிய பகுதிகளில் உள்ள மக்களை உக்ரைன் பாதுகாக்கும். இந்த வாக்கெடுப்புகள் ஒரு கேலிக்கூத்தாக உள்ளது. வாக்கெடுப்புக்கு பிறகு ரஷியாவுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு ஏதும் இல்லை" என்றார்.

    • உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு மாணவர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
    • மாணவர்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ப்பது கடினம் என்று கருதினால், ஒரே நேரத்தில் கூடுதல் இடங்களை உருவாக்கி தனியார் கல்லூரிகளில் சேர அனுமதிக்கலாம்.

    உக்ரைனில் இருந்து திரும்பும் மருத்துவ மாணவர்களை இந்தியாவில் உள்ள தனியார் கல்லூரிகளில் கூடுதல் இடங்களை உருவாக்கி கல்வி பயில அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.

    உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்களை இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் கல்வி பயில இடம் ஒதுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

    இதை சுட்டிக்காட்டிய முதல்வர் ஸ்டாலின், இந்த நிலைப்பாடு மாணவர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் அந்த கடிதத்தில், "உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களை நாட்டிற்குள்ளேயே மருத்துவக் கல்லூரிகளில் படிக்க இடம் ஒதுக்கலாம் என வெளிவிவகார மக்களவைக் குழு பரிந்துரைத்தது மாணவர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

    ஆனால், மத்திய அரசு எடுத்துள்ள இதற்கு மாறான நிலைப்பாடு மாணவர்களின் நம்பிக்கையை சிதைத்துள்ளது. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    இதுபோன்ற மாணவர்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ப்பது கடினம் என்று கருதினால், ஒரே நேரத்தில் கூடுதல் இடங்களை உருவாக்கி தனியார் கல்லூரிகளில் சேர அனுமதிக்கலாம். இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அதே அளவிலான கட்டணத்தைச் செலுத்தி கல்வியைத் தொடர முடியும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    மேலும், வெளிநாடுகளில் படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்கள் தங்களுக்குப் பொருத்தமான வெளிநாட்டுக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை அடையாளம் காணுவதற்கு ஏதுவாக உரிய கட்டமைப்பினை ஏற்படுத்திட வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளார்.

    • சுதந்திர தினத்தன்று உக்ரைன் மீது பெரிய அளவில் ஏவுகணை தாக்குதலுக்கு பெலாரஸ் தயாராகி வருகிறது.
    • உக்ரைனுக்கு அமெரிக்கா மேலும் ரூ.6194 கோடி மதிப்புள்ள ராணுவ உதவிகளை வழங்கி உள்ளது.

    உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் நீடித்து வருகிறது. தற்போது கிழக்கு உக்ரைனில் ரஷிய படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றன.

    ரஷிய படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவத்தினரும் போரிட்டு வருகிறார்கள். இதற்கிடையே உக்ரைனில் சுதந்திர தின விழா வருகிற 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

    இந்தநிலையில் சுதந்திர தினத்தில் உக்ரைனில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, "இந்த வாரம் ரஷிய படைகள் தீய செயல்களை செய்ய முயற்சிக்கலாம் என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டும். எனவே பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்" என்று அறிவுறுத்தி உள்ளார்.

    சுதந்திர தினத்திற்கு முன்பாக ரஷியா மிகப்பெரிய கொடூரமான தாக்குதலை நடத்தலாம் என்று நாட்டு மக்களுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனின் ஆயுதப்படைகளின் அதிகாரி ஒருவர் கூறும்போது, "சுதந்திர தினத்தன்று உக்ரைன் மீது பெரிய அளவில் ஏவுகணை தாக்குதலுக்கு பெலாரஸ் (ரஷியாவின் ஆதரவு நாடு) தயாராகி வருகிறது.

    பெலாரசில் இருந்து மட்டுமல்ல, கருங்கடல் மற்றும் ரஷியாவில் இருந்தும் ஒரே நேரத்தில் மூன்று திசைகளிலும் இருந்து தாக்குதல் நடத்தலாம் என்றார்.

    இதற்கிடையே உக்ரைனுக்கு அமெரிக்கா மேலும் ரூ.6194 கோடி மதிப்புள்ள ராணுவ உதவிகளை வழங்கி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உக்ரைன் மீதான போருக்கு பிறகு புதின் முதல் முறையாக வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.
    • உலகில் இருந்து ரஷியாவை தனிமைப்படுத்த விரும்பும் மேற்கத்திய நாடுகளின் முயற்சி சாத்தியமற்றது.

    உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி போரை தொடங்கியது. தற்போது வரை அந்த நாடு மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

    உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள், ரஷியா மீது ஏராளமான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ரஷியாவின் தாக்குதலால் உக்ரைனில் உற்பத்தி செய்யப்படும் தானியங்களின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஷிய தானிய ஏற்றுமதிகளுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், சர்வதேச உணவு சந்தைகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    இந்தநிலையில் உணவு நெருக்கடியை தீர்க்க ரஷியா மீதான தடைகளை நீக்க வேண்டும் என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

    உக்ரைன் மீதான போருக்கு பிறகு புதின் முதல் முறையாக வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். அவர் ஈரான் தலைநகர் தெக்ரானுக்கு சென்றார். அங்கு ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி, துருக்கி அதிபர் எர்டோகன் ஆகியோரை சந்தித்து பேசினார்.

    பின்னர் புதின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    உக்ரைனிய தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கு நாங்கள் உதவுவோம். ஆனால் ரஷிய தானிய ஏற்றுமதிக்காக விமான விநியோகம் தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட வேண்டும்.

    உலக சந்தைகளுக்கு ரஷிய உரங்களை வழங்குவதற்கான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளனர். அது போன்று சர்வதேச உணவு சந்தைகளில் நிலைமையை மேம்படுத்த அவர்கள் உண்மையாக விரும்பினால் ரஷிய தானியங்களின் ஏற்றுமதி மீதான தடையை மேற்கத்திய நாடுகள் நீக்க வேண்டும்.

    உலகில் இருந்து ரஷியாவை தனிமைப்படுத்த விரும்பும் மேற்கத்திய நாடுகளின் முயற்சி, சிறிது அளவு கூட சாத்தியமற்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உக்ரைன் வீரர்கள் அசராமல் எதிர்த்துப் போரிட்டு வருவதால் இன்னும் சில நகரங்களைப் பிடிக்க முடியாமல் ரஷியா திணறி வருகிறது.
    • ஏவுகணைகள் டினிப்ரோ நகரில் உள்ள தொழில்துறை ஆலை மற்றும் அதற்கு அடுத்துள்ள பரபரப்பான தெரு மீது தாக்கியது.

    உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி 5 மாதத்தை நெருங்கினாலும் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ரஷியாவின் மும்முனை தாக்குதலுக்கு உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் சின்னாபின்னமாகிவிட்டது. ஆனாலும் உக்ரைன் வீரர்கள் அசராமல் எதிர்த்துப் போரிட்டு வருவதால் இன்னும் சில நகரங்களைப் பிடிக்க முடியாமல் ரஷியா திணறி வருகிறது.

    இந்நிலையில், உக்ரைனின் டினிப்ரோ நகரின் மீது நடந்த ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர் என அப்பிராந்திய ஆளுநர் வாலன்டின் ரெனிசென்கோ கூறினார்.

    இதுகுறித்து ஆளுநர் மேலும் கூறுகையில், " ஏவுகணைகள் டினிப்ரோ நகரில் உள்ள தொழில்துறை ஆலை மற்றும் அதற்கு அடுத்துள்ள பரபரப்பான தெரு மீது தாக்கியது. ரஷிய தாக்குதல் மூன்று பேரின் உயிரை பறித்தது. மேலும் 15 பேர் காயமடைந்தனர். அழிவின் அளவை நாங்கள் தீர்மானிக்கின்றோம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    • ஏவுகணை வீச்சில் 50-க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் வாகனங்கள் தீயில் கருகி சேதம் ஆனது.
    • பொதுமக்கள் மீது வேண்டுமென்றே குறிவைத்து இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

    உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்த தொடங்கி 5 மாதங்களை கடந்துவிட்டது. ஆனால் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ரஷியாவின் மும்முனை தாக்குதலுக்கு உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் சின்னாபின்னமாகிவிட்டது.

    இருந்தபோதிலும் உக்ரைன் வீரர்கள் அசராமல் எதிர்த்து போரிட்டு வருவதால் இன்னும் சில நகரங்களை பிடிக்க முடியாமல் ரஷியா திணறி வருகிறது.

    இந்தநிலையில், உக்ரைன் தலைநகர் கிவ்வில் இருந்து 268 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மத்திய பகுதியான வினிட்சியா நகரில் நேற்று ரஷியா தாக்குதலில் ஈடுபட்டது. அங்குள்ள முக்கிய அரசு அலுவலக கட்டிடம் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் அந்த கட்டிடம் மட்டும் அல்லாமல் அருகில் இருந்த குடியிருப்பு கட்டிடங்களும் கடுமையாக சேதம் அடைந்தது.

    இதில் கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்தது. இந்த தாக்குதலில் 3 குழந்தைகள் உள்பட 23 அப்பாவி பொதுமக்கள் இறந்தனர். 90-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    அடுத்தடுத்து 8 தடவை நடந்த ஏவுகணை வீச்சில் 50-க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் வாகனங்கள் தீயில் கருகி சேதம் ஆனது. நேற்று முன்தினம் நடந்த சண்டையில் 5 பேர் இறந்தனர்.

    ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். பொதுமக்கள் மீது வேண்டுமென்றே குறிவைத்து இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

    • உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஷ்யா பயன்படுத்திய முக்கிய தந்திரத்தில் ஒன்று பொருளாதார நெருக்கடி உருவாக்குவதாகும்.
    • உலகம் முழுவதும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

    உக்ரைன் படையெடுப்பின் போது உணவுப் பொருட்கள் தடைப்பட்டதால் இலங்கை மட்டுமின்றி உலகம் முழுவதும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

    உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஷ்யா பயன்படுத்திய முக்கிய தந்திரத்தில் ஒன்று பொருளாதார நெருக்கடி உருவாக்குவதாகும். விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட இடையூறு காரணமாக உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறையை அனுபவிக்கும் பல நாடுகள் ரஷியாவின் நிகழ்ச்சி நிரலை அனுபவித்துள்ளனர் என்று ஜெலென்ஸ்கி கூறினார்.

    சியோலில் நடைபெற்ற ஆசிய தலைமைத்துவ மாநாட்டில் அண்மையில் உரையாற்றியபோது, ​​இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை எடுத்துரைத்த அவர், "அதிர்ச்சியூட்டும் உணவு மற்றும் எரிபொருள் விலையேற்றம் ஒரு சமூக பிளவுக்கு வழிவகுத்தது. அது எப்படி முடிவடையும் என்பது இப்போது யாருக்கும் தெரியாது" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உக்ரைன் நாட்டுக்கு பல்வேறு நாடுகள் ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை செய்து வருகின்றன.
    • ஏற்கனவே நான்கு வெவ்வேறு சம்பவங்களில் இறப்புகள் மற்றும் காயங்கள் நிகழ்ந்தன.

    உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி ரஷியா தாக்குதலை தொடங்கியது. இந்த போர் தொடங்கி 5 மாதங்களை நெருங்கி விட்டது. ஆனாலும் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

    உக்ரைன் முக்கிய நகரங்களை ரஷியா கைப்பற்றிய போதும் மற்ற இடங்களை பிடிக்க கடுமையான சண்டை நடந்து வருகிறது. உக்ரைன் நாட்டுக்கு பல்வேறு நாடுகள் ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை செய்து வருகின்றன.

    இந்நிலையில், கிழக்கு கார்கிவ் பகுதியில் நேற்று ரஷிய ஷெல் நடத்திய தாக்குதலில், 8 வயது குழந்தை உள்பட 15 பேர் கொல்லப்பட்டதாக ஆளுநர் ஒலெக் சினெகுபோவ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஆளுநர் மேலும் கூறியதாவது:- ரஷிய ஷெல் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 16 பேர் காயமடைந்தனர். காங்கிவ் பகுதியில் ரஷியா பகர்நேர ஷெல் தாக்குதலின் பயங்கரமான விளைவுகள் இதுவாகும். இதுபோன்று ஏற்கனவே நான்கு வெவ்வேறு சம்பவங்களில் இறப்புகள் மற்றும் காயங்கள் நிகழ்ந்தன. இது பயங்கரவாதம். இவை மனிதகுலத்திற்கு எதிரான குற்றச் செயல்கள். அவை தண்டிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×