search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரண்டாவது டெஸ்ட் போட்டி"

    வங்காள தேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே அணி 304 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. #BANvZIM
    வங்காள தேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் டாக்காவில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற வங்காள தேசம் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்கள் லிட்டோன் தாஸ், இம்ருல் கெய்ஸ் விரைவில் அவுட்டாகினர். 4-வது வீரராக களம் இறங்கிய முகமது மிதுன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
     
    4-வது விக்கெட்டுக்கு மொமினுல் ஹக்யூ உடன் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் 4வது விக்கெட்டுக்கு 266 ரன்கள் குவித்தனர். மொமினுல் ஹக்யூ 161 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். முஷ்பிகுர் ரஹிம் சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்தார்.

    இறுதியில், வங்காள தேசம் 160 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 522 ரன்கள் குவித்த நிலையில் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    முஷ்பிகுர் ரஹிம் 219 ரன்களுடனும், மெஹிது  ஹசன் மிராஸ் 68 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ஜிம்பாப்வே அணி சார்பில் ஜார்விஸ் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    இதையடுத்து, ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரியன் சாரி 54 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.



    பிரெண்டன் டெய்லர் நிதானமாகவும் பொறுப்புடனும் விளையாடி சதமடித்தார். அவர் 110 ரன்களில் அவுட்டானார். அவரை தொடர்ந்து, பீட்டர் மூர் 83 ரன்னில் வெளியேறினார். இவர்களது ஆட்டத்தால் ஜிம்பாப்வே அணி 300 ரன்களை எட்டியது.

    இறுதியில், மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஜிம்பாப்வே அணி 304 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    வங்காள தேசம் சார்பில் தைஜுல் இஸ்லாம் 5 விக்கெட்டும், மெஹிதி ஹாசன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். #BANvZIM
    ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் நாள் ஆட்ட முடிவில் வங்காள தேசம் அணி 5 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்துள்ளது. #BANvZIM
    ஜிம்பாப்வே அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் வங்காளதேசம் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றுள்ளது.

    இந்நிலையில், ஜிம்பாப்வே - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டாக்கவில் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற வங்காள தேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக லித்தன் தாஸ், இம்ருல் கயஸ் ஆகியோர் களமிறங்கினர்.

    ஜிம்பாப்வே பந்து வீச்சாளர்கள் தொடக்க ஆட்டக்காரர்களை விரைவில் வெளியேற்றினர். லித்தன் தாஸ் 9 ரன்னிலும், இம்ருல் கயஸ் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகினர்.

    அதன்பின் இறங்கிய மொமினுல் ஹக் நிதானமாக ஆடினார். தொடர்ந்து இறங்கிய மொகமது மிதுன் டக் அவுட்டானார்.



    அவரை அடுத்து இறங்கிய விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் மொமினுல் ஹக்குக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.
    இதனால் இருவரும் நின்று நிதானமாக ஆடியதால் வங்காள தேசத்தின் ரன்கள் உயர்ந்தது. இருவரும் பொறுப்புடன் ஆடி சதமடித்தனர்.

    நிதானமாக ஆடிக் கொண்டிருந்த மொமினுல் ஹக் 161 ரன்னில் அவுட்டானார். இந்த ஜோடி 266 ரன்கள் குவித்தது. அடுத்து இறங்கிய தைஜுல் இஸ்லாம் 4 ரன்னில் வெளியேறினார். 

    இறுதியில், முதல் நாள் ஆட்ட முடிவில் வங்காள தேசம் அணி 90 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்துள்ளது. முஷ்பிகுர் ரஹிம் 111 ரன்களுடனும், மகமதுல்லா ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் உள்ளனர்.

    ஜிம்பாப்வே அணி சார்பில் கைல் ஜார்விஸ் 3 விக்கெட்டும், சதாரா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். #BANvZIM
    இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்கிறது. #INDvsWI #TeamIndia
    ஐதராபாத்:

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.



    இந்திய அணியில் முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஷர்துல் அறிமுக வீரராக களமிறங்குகிறார். இந்த ஆண்டில் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆகும் 5-வது வீரர் இவர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேமர் ரோச் இடம்பெறவில்லை. கீமோ பால் செர்மன் லெவிசுக்கு பதில் ஜேசன் ஹோல்டர், ஜோமல் வாரிகன் ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளார்.

    அணிகள் விவரம்:

    இந்தியா: கோலி (கேப்டன்), ராகுல், பிருத்வி, புஜாரா, ரகானே, ரிஷப் பன்ட், ஜடேஜா, அஷ்வின், உமேஷ் யாதவ், குல்தீப், ஷர்துல் தாக்கூர்.

    வெஸ்ட் இண்டீஸ்:  ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), பிராத்வைட், பாவெல், ஹோப், ஹெட்மையர், அம்ப்ரிஸ், சேஸ், டவ்ரிச், வாரிகன், தேவேந்திர பிஷூ, கேப்ரியேல். #INDvsWI #TeamIndia
    ×