search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது டெஸ்ட் - முதல் நாள் ஆட்ட முடிவில் வங்காள தேசம் 303/5
    X

    ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது டெஸ்ட் - முதல் நாள் ஆட்ட முடிவில் வங்காள தேசம் 303/5

    ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் நாள் ஆட்ட முடிவில் வங்காள தேசம் அணி 5 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்துள்ளது. #BANvZIM
    ஜிம்பாப்வே அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் வங்காளதேசம் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றுள்ளது.

    இந்நிலையில், ஜிம்பாப்வே - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டாக்கவில் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற வங்காள தேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக லித்தன் தாஸ், இம்ருல் கயஸ் ஆகியோர் களமிறங்கினர்.

    ஜிம்பாப்வே பந்து வீச்சாளர்கள் தொடக்க ஆட்டக்காரர்களை விரைவில் வெளியேற்றினர். லித்தன் தாஸ் 9 ரன்னிலும், இம்ருல் கயஸ் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகினர்.

    அதன்பின் இறங்கிய மொமினுல் ஹக் நிதானமாக ஆடினார். தொடர்ந்து இறங்கிய மொகமது மிதுன் டக் அவுட்டானார்.



    அவரை அடுத்து இறங்கிய விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் மொமினுல் ஹக்குக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.
    இதனால் இருவரும் நின்று நிதானமாக ஆடியதால் வங்காள தேசத்தின் ரன்கள் உயர்ந்தது. இருவரும் பொறுப்புடன் ஆடி சதமடித்தனர்.

    நிதானமாக ஆடிக் கொண்டிருந்த மொமினுல் ஹக் 161 ரன்னில் அவுட்டானார். இந்த ஜோடி 266 ரன்கள் குவித்தது. அடுத்து இறங்கிய தைஜுல் இஸ்லாம் 4 ரன்னில் வெளியேறினார். 

    இறுதியில், முதல் நாள் ஆட்ட முடிவில் வங்காள தேசம் அணி 90 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்துள்ளது. முஷ்பிகுர் ரஹிம் 111 ரன்களுடனும், மகமதுல்லா ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் உள்ளனர்.

    ஜிம்பாப்வே அணி சார்பில் கைல் ஜார்விஸ் 3 விக்கெட்டும், சதாரா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். #BANvZIM
    Next Story
    ×