search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடைக்காலத் தடை"

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்டு இருந்த இடைக்காலத்தடை அக்டோபர் 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. #PChidambaram #INXMediaCase #DelhiHighCourt
    புதுடெல்லி:

    ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு விதிமுறைகளை மீறி, அந்நிய முதலீடு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்தது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரமும் இணைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

    இதையடுத்து, ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை விதிக்கக்கோரிய மனுவை ஏற்ற டெல்லி நீதீமன்றம், இடைக்கால தடை விதித்து இருந்தது. பல கட்டங்களாக நீட்டிக்கப்பட்ட இந்த இடைக்காலத்தடை கடைசியாக செப்டம்பர் 28 வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், ப.சிதம்பரம் மீதான இடைக்கால தடை மீது இன்று மீண்டும் விசாரணை நடைபெற்ற நிலையில், அவரை கைது செய்ய விதிக்கப்பட்டு இருந்த இடைக்கால தடையை அக்டோபர் 25 வரை நீட்டித்து டெல்லி உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. #PChidambaram #INXMediaCase #DelhiHighCourt
    டெல்லியில் விமான பணிப்பெண் தனது வீட்டின் மாடியில் இருந்து தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அவரது கணவரின் பெற்றோரை கைது செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. #DelhiHC
    புதுடெல்லி:

    டெல்லியில் விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தவர் அனிசா பத்ரா. இவர் தனது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அனிசாவை அவரது கணவர் மாயங் சிங்வி கொடுமை படுத்தியதாக அனிசாவின் பெற்றோர் போலீசாரிடம் தெரிவித்தனர்.

    இதையடுத்து, மாயங் சிங்வியை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், நீதிமன்ற காவலில் வைக்குமாறு தீர்ப்பளித்தது.



    இந்நிலையில், அனிசாவின் தற்கொலை தொடர்பாக எங்களுக்கு எந்த வித தொடர்பும் இல்லை என மாயங் சிங்வியின் பெற்றோர் சுஷ்மா சிங்வி, ஆர்.எஸ் சிங்வி ஆகியோர் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர்.

    இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், மாயங் சிங்வியின் பெற்றோரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், அவர்கள் ஜாமீன் கோரியது குறித்து டெல்லி போலீசார் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்றம், விசாரணையை ஆகஸ்ட் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்து தீர்ப்பளித்தனர். #DelhiHC
    ×