search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆட்டம் டிரா"

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி, கேரளா பிளாஸ்டர்சை அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது. #ISL2018 #ChennaiFC #KeralaBlaster
    சென்னை:

    10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 43-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, கேரளா பிளாஸ்டர்சை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சென்னை அணியினர் 14 முறை எதிரணியின் கோல் எல்லையை நோக்கி ஷாட் அடித்த போதிலும் அது ஏமாற்றத்திலேயே முடிந்தது. கோல் அடிக்க கிடைத்த பல நல்ல வாய்ப்புகளில், சென்னை அணியினர் அவசர கோலத்தில் செயல்பட்டு பந்தை கோல் கம்பத்துக்கு வெளியில் அடித்து வீணடித்தனர். முடிவில் இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி (0-0) டிராவில் முடிந்தது. இந்த சீசனில் கோலின்றி டிரா ஆன 4-வது ஆட்டம் இதுவாகும்.



    உள்ளூரில் 4-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி இந்த சீசனில் சொந்த மண்ணில் வெற்றி கணக்கை தொடங்காத சோகம் தொடருகிறது. மொத்தத்தில் சென்னை அணி இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 2 டிரா, 6 தோல்வி கண்டுள்ளது. இதனால் சென்னை அணி அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறுவது சிக்கலாகி இருக்கிறது. 9-வது ஆட்டத்தில் ஆடிய கேரளா அணி ஒரு வெற்றி, 5 டிரா, 3 தோல்வியை பெற்றுள்ளது.

    பெங்களூருவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.-எப்.சி.புனே சிட்டி அணிகள் மோதுகின்றன.  #ISL2018 #ChennaiFC #KeralaBlaster
    ×