search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியர் தகுதித்தேர்வு"

    • ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
    • நேரடியாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மட்டும் தகுதித்தேர்வு கட்டாயம் என்ற அரசின் விதியை ரத்து செய்தனர்.

    சென்னை:

    2011-ம் ஆண்டுக்கு முன் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறவில்லை எனக் கூறி, அவர்களின் வருடாந்திர ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து ஆசிரியர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவித்து 12 ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை எனக் கூறி, வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை எனவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

    இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு, கடந்த 2011ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்காவிட்டாலும் பணியில் நீடிக்கலாம்.

    ஊதிய உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியமில்லை. ஆனால், பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் என்று உத்தரவிட்டனர்.

    மேலும், நேரடியாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மட்டும் தகுதித்தேர்வு கட்டாயம் என்ற அரசின் விதியை ரத்து செய்தனர்.

    • கடந்த சில வருடங்களாக ஆசிரியர் தகுதித்தேர்வில் பங்கேற்கும் ஆசிரியர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது.
    • குறைந்தபட்ச மதிப்பெண் 90 பெற்றால்தான் தகுதியாக தேர்வில் வெற்றி பெற்றதாக கணக்கிடப்படுகிறது.

    சென்னை:

    அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

    1 முதல் 5-ம் வகுப்பு உள்ள பள்ளிகளுக்கு தாள்-1 தேர்வும் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளியில் பணியாற்றுவதற்கு தாள்-2 தேர்வும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படுகிறது.

    ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1-க்கான தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நடத்தப்பட்டது. இத்தேர்வை 1 லட்சத்து 53 ஆயிரத்து 233 பேர் எழுதினார்கள். தேர்வு முடிவுகள் டிசம்பர் 7-ந் தேதி வெளியானது. அதில் 21,543 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

    இந்தநிலையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள்-2 தகுதித்தேர்வு கணினி வழியில் கடந்த மாதம் நடத்தப்பட்டது. இந்த தேர்வை எழுத 4 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் 2 லட்சத்து 54 ஆயிரத்து 224 பேர் தேர்வில் பங்கேற்றனர்.

    1½ லட்சம் பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு எழுதியவர்களில் தேர்ச்சி பெற்றவர்கள் சதவிகிதம் மிகவும் குறைவாக உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 98 சதவீதம் பட்டதாரிகள் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர்.

    தகுதித்தேர்வு 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டது. அதில் குறைந்தபட்ச மதிப்பெண் 90 பெற்றால்தான் தகுதியாக தேர்வில் வெற்றி பெற்றதாக கணக்கிடப்படுகிறது.

    அந்த வகையில் 2-ம் தாள் தேர்வு எழுதிய பட்டதாரிகளில் 2 ஆயிரத்துக்கும் குறைவாகவே தேர்ச்சி பெற்று இருக்க வாய்ப்பு இருப்பதாக தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று மாலையில் தேர்வு முடிவை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளன.

    கடந்த சில வருடங்களாக ஆசிரியர் தகுதித்தேர்வில் பங்கேற்கும் ஆசிரியர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது. தகுதித்தேர்வில் வெற்றி பெற்றாலும் மற்றொரு தேர்வை அரசு நடத்தி அதன் பிறகுதான் ஆசிரியர்கள் பணியில் நியமிக்கும் நிலை உள்ளது.

    அதனால் டெட் தேர்வுக்கு முறையாக தயார் ஆகாமல் எழுதுகின்றனர். அரசு வேலைவாய்ப்பும் குறைந்து விட்டதால் ஆசிரியர்கள் மத்தியில் ஆர்வம் இல்லை என்றே தெரிகிறது.

    ×