என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Teacher qualification examination"

    • பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியில் தொடர ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும்.
    • நடப்பு ஆண்டுக்கான ‘டெட்' தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த மாதம் (ஆகஸ்டு) 11-ந்தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

    சென்னை:

    இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியில் தொடர ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி, 2012-ம் ஆண்டு முதல் இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்களே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

    அதன்படி, நடப்பு ஆண்டுக்கான 'டெட்' தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த மாதம் (ஆகஸ்டு) 11-ந்தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இந்த தேர்வை எழுத விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க நேற்று முன்தினம் அவகாசம் முடிந்த நிலையில், இன்று (புதன்கிழமை) வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர்.

    முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமானோர் விண்ணப்பிப்பதாக சொல்லப்படுகிறது. என்ன திடீரென்று இவ்வளவு பேர் விண்ணப்பிக்கிறார்கள் என்று பார்த்தால், சமீபத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு ஒன்றை வழங்கியதன் எதிரொலியாக, அதனால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே பணியில் இருக்கும் 'டெட்' தேர்வை எழுதாத ஆசிரியர்களும் இதற்கு விண்ணப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில், டெட் தேர்வு நடைமுறைக்கு வருவதற்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களும், அந்த தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும், தேர்வை எழுத விரும்பாதவர்கள் விருப்ப ஓய்வு பெறலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. இதனால் தமிழ்நாட்டில் மட்டும் அரசு பள்ளி ஆசிரியர்கள் 1,38,000 பேரும், அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் 38 ஆயிரம் பேரும் என மொத்தம் 1,76,000 ஆசிரியர்கள் பாதிப்படைகிறார்கள்.

    அந்தவகையில் அடுத்தக்கட்டமாக இந்த ஆசிரியர்கள் விவகாரத்தில் என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது பற்றி தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது. அரசு அவர்களுக்கு இதுவரை தேர்வு நடத்த முடிவெடுக்காத சூழலில், டெட் தேர்வை எழுதாமல் பணியில் இருந்துவரும் ஆசிரியர்கள், கடந்த மாதம் வெளியிடப்பட்ட டெட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவில் முண்டியடித்து போட்டிப் போட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.

    இதுபற்றி அதிகாரிகள் சிலரிடம் கேட்டபோது, 'சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களில் சிலர் இந்த தேர்வை எழுதிதான் பார்ப்போமே என்ற மனநிலையில் விண்ணப்பித்து இருக்கின்றனர். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு தொடர்பாக தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. பெரும்பாலும் இந்த ஆசிரியர்களுக்கு சிறப்பு டெட் தேர்வு நடத்துவதற்கே வாய்ப்பு அதிகம் உள்ளது' என்றனர்.

    • ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1, தாள்-2 ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க நேற்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.
    • விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1, தாள்-2 ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க 8-ந் தேதி (நேற்று) வரை கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.

    விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 10-ந் தேதி (நாளை) வரை நீட்டிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு இன்று தொடங்கியது.
    • இந்த தேர்வு முதல் முறையாக கணினி வழியில் நடத்தப்பட்டது.

    ஈரோடு, அக். 14-

    தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு சேர்வதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறுவது கட்டாய மாக்கப்பட்டுள்ளது. இதன்படி நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு இன்று தொடங்கியது.

    ஈரோடு மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வானது ஈரோடு அடுத்த கருந்தேவன்பாளையம் அல்-அமீன் பொறியியல் கல்லூரி, துடுப்பதி செங்குந்தர் பொறியியல் கல்லூரி, டி.என்.பாளையம் ஜே.கே.கே.பொறியியல் கல்லூரி, பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி, ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரி, கோபி பி.கே.ஆர்., கலை கல்லூரி, தாசம்பாளையம் வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி, திண்டல் வி.இ.டி. கலை கல்லூரி என 8 மையங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடங்கியது.

    இந்த தேர்வினை மாவட்டம் முழுவதும் 12,660 பேர் எழுத உள்ளனர். ஒவ்வொரு மையங்களிலும் கண்காணிப்பாளர்கள், கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 68 பேர் உதவியாளர் (ஸ்கிரைப்) மூலம் தேர்வு எழுதினர். காலை முதலே தேர்வர்கள் அந்தந்த தேர்வு மையத்திற்கு ஆர்வத்துடன் வந்தனர்.

    இந்த தேர்வு முதல் முறையாக கணினி வழியில் நடத்தப்பட்டது. இதற்காக என்ஜினீயர் கல்லூரியில் உள்ள கணினி வகுப்புகள் தேர்வு மையங்களாக மாற்றப்பட்டிருந்தன. காலை, பிற்பகல் என 2 பிரிவுகளாக தேர்வுகள் நடத்தப்படுகிறது.

    இன்று தொடங்கி வரும் 20-ந் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகிறது. முறைகேடுயின்றி தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. 

    ×