search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அர்ஜென்டினா அணி"

    • அர்ஜென்டினா கேப்டன் லயோனல் மெஸ்சியின் சிலையும் அவரது வீட்டை அலங்கரிக்கிறது.
    • உலக கோப்பை கால்பந்து நடக்கும் இந்த தருணத்தில் அவர் தனது வீட்டையும், 30 ஆண்டாக நடத்தும் டீ கடையையும் நீலநிறமாக மாற்றி விட்டார்.

    கொல்கத்தா:

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடும் அர்ஜென்டினா அணிக்கு அந்த நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலும் நிறைய ரசிகர்கள் உண்டு. அப்படிப்பட்ட ஒரு தீவிர ரசிகர் தனது வீடு, டீ கடை முழுவதையும் அர்ஜென்டினா அணியின் தேசிய கொடிக்குரிய நிறத்தில் வர்ணம் தீட்டி கவனத்தை ஈர்த்துள்ளார். மேற்கு வங்காள மாநிலம் நார்த் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள இச்சாபுர் என்ற ஊரை சேர்ந்தவர் ஷிப் ஷங்கர் பத்ரா (வயது 54). கிளப் அளவிலான கால்பந்து போட்டிகளில் விளையாடியவர். 1986-ம் ஆண்டு அர்ஜென்டினா அணி உலக கோப்பையை வென்றதில் இருந்து அந்த அணியின் தீவிரமான ரசிகராக மாறி விட்டார்.

    உலக கோப்பை கால்பந்து நடக்கும் இந்த தருணத்தில் அவர் தனது வீட்டையும், 30 ஆண்டாக நடத்தும் டீ கடையையும் நீலநிறமாக மாற்றி விட்டார். சுற்றி அர்ஜென்டினா கொடிகள் கட்டப்பட்டு உள்ளன. நீல, வெள்ளை நிறத்தில் காட்சி அளிக்கும் அவரது வீட்டில் எங்கு பார்த்தாலும் அர்ஜென்டினா அணி வீரர்களின் புகைப்படங்களே தென்படுகின்றன. அர்ஜென்டினா கேப்டன் லயோனல் மெஸ்சியின் சிலையும் அவரது வீட்டை அலங்கரிக்கிறது.

    இதை பார்க்கவே அவரது டீ கடைக்கு பலரும் படையெடுத்து வருகிறார்கள். 'அர்ஜென்டினா அணி என்றால் எனக்கு உயிர். மெஸ்சிக்கு இதுவே கடைசி உலக கோப்பை போட்டி. அவர் கோப்பையை வென்றால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். அதற்காக தினமும் பிரார்த்திக்கிறேன். அவரது 35-வது பிறந்த நாளை கேக் வெட்டி பெரிய அளவில் கொண்டாட இருக்கிறோம்' என்று பத்ரா குறிப்பிட்டார்.

    ×