search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு போக்குவரத்து ஊழியர்"

    • ஓய்வு பெற்ற தொழிலாளிகளுக்கு ஓய்வு பெற்ற பணம் முறையாக வழங்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கிட வேண்டும்.
    • ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சிஐடியு கடலூர் மண்டலம் சார்பாக அறிவித்து இருந்தனர். அதன்படி அவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்

    கடலூர்:

    ஓய்வு பெற்ற தொழிலாளிகளுக்கு ஓய்வு பெற்ற பணம் முறையாக வழங்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கிட வேண்டும். அனைத்து பிரிவுகளிலும் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சிஐடியு கடலூர் மண்டலம் சார்பாக அறிவித்து இருந்தனர். அதன்படி அவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு மண்டல தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். முருகன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டன. இதில் பாஸ்கரன் ஜான் விக்டர் முத்துக்குமரன் நடராஜன் பழனிவேல் பூங்குன்றன் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பிக்கள் இடைநீக்கம் செய்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
    • மத்திய பாஜக. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்முன்னேற்ற சங்கம் சார்பில், மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பிக்கள் இடைநீக்கம் செய்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் பல்லடம் அரசு போக்குவரத்து டிப்போ முன்பு நடைபெற்றது.இதில் மத்திய பாஜக. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில், தொ.மு.ச.பல்லடம் கிளை தலைவர் ஆனந்தன், செயலாளர் சிவசுப்பிரமணியம், திருப்பூர் மண்டல பொருளாளர் சின்னக்கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×