search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு நிதி உதவி"

    • கணவரால் கைவிடப்பட்டவருக்கான அரசு நிதி உதவியை பெற்று வந்துள்ளார்.
    • சப்-இன்ஸ்பெ க்டர் ரமேஷ் மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    புதுச்சேரி:

    ரோட்டை சேர்ந்தவர் நிலா (வயது 44). இவர் முதல் கணவரால் கைவிடப்பட்டதால் புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் கீழ் கணவரால் கைவிடப்பட்டோருக்கான நிதி உதவியை கடந்த 2013-ம் ஆண்டு முதல் பெற்று வந்தார்.

    இதற்கிடையே நிலா, 2-வதாக ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதை மறைத்து கணவரால் கைவிடப்பட்டவருக்கான அரசு நிதி உதவியை அவர் பெற்று வந்துள்ளார்.

    இதற்கிடையே நிலா வுக்கு 2-வதாக திருமணம் ஆகி கணவர் இருப்பது தெரிய வந்ததால் அவருக்கு வழங்கப்பட்டு வந்த நிதி உதவியை அரசு நிறுத்தியது.

    அதைத்தொடர்ந்து கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை நிலா அரசிடம் இருந்து பெற்ற ரூ.82 ஆயிரத்து 200-யை திரும்ப செலுத்தும்படி துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வந்தனர். ஆனால் அவர் பணத்தை திருப்பி கொடுக்காமல் இருந்து வந்தார்.

    இந்நிலையில் கோரிமேடு போலீஸ் நிலையத்தில் நிலா மீது புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் இயக்குனர் முத்து மீனா புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெ க்டர் ரமேஷ் மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×