search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு கல்லூரியில்"

    • அறிவியல் கல்லூரியில் நூல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
    • ல்லூரி முதல்வர் பிரகாசி அருள் ேஜாதி தலைமை தாங்கினார்

    நாகர்கோவில் : நாகர்கோவில் கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நூல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் பிரகாசி அருள் ேஜாதி தலைமை தாங்கினார். நூல் வெளியீட்டு விழாவில் ஜோதி ரவீந்திரன் எழுதிய " சிறகு முளைத்து பறக்கும் சமகாலக் கவிதைகள்" மற்றும் அழுதன் எழுதிய "வானத்தை குறி வையுங்கள்" ஆகிய 2 நூல்களை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜாண் ஜெகத் பிரைட் வெளியிட கல்லூரி முதல்வர் பிரகாசி அருள் ஜோதி பெற்றுக்கொண்டார்.நிகழ்ச்சியில் கல்லூரி தமிழ்த்துறை முதல்வர் அலெக்சாண்டர், ஹோலி கிராஸ் கல்லூரி தமிழ்துறை உதவி பேராசிரியர் டெல்பின், ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி தமிழ்துறை உதவி பேராசிரியர் டி.பி.மோள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • ஈரோடு மாவட்டத்திலேயே முதல் முறையாக பி.எஸ்.சி தாவரவியல் பாடப்பிரிவு புதிதாக தொடக்கப்பட்டுள்ளது.
    • இந்த பாடப்பிரிவில் சேர விரும்பும் மாணவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை தாவரவியல் பாடப்பிரிவு 2023-2024-ம் கல்வி ஆண்டு முதல் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் விநியோகம் கடந்த 8-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து கல்லூரி முதல்வர் ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகிற 2023-2024-ம் கல்வியாண்டு முதல் ஈரோடு மாவட்டத்திலேயே முதல் முறையாக இளங்கலை பி.எஸ்.சி தாவரவியல் பாடப்பிரிவு புதிதாக தொடக்கப்பட்டுள்ளது.

    மேல்நிலை கல்வியில் (பிளஸ்-2) உயிரியல் அல்லது தாவரவியல் பயின்ற மாணவர்கள் இதற்கு தகுதியுடையவர்கள் ஆவர். இதற்கான ஆன்லைன் விண்ணப்ப விநியோகம் கடந்த 8-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த பாடப்பிரிவில் சேர விரும்பும் மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி நாள் வரும் 19-ந் தேதி ஆகும்.

    மாணவர்கள் தங்களின் சந்தேகங்களை 9363462099 என்ற கல்லூரி கல்வி இயக்க அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    மேலும் சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இதற்கான உதவி மையம் செயல்பட்டு வருகிறது. இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் கல்லூரியில் செயல்படும் சேர்க்கை உதவி மையத்திற்கு நேரடியாக வந்திருந்து தங்களது சுய விவரங்களை தெரிவித்து விண்ணப்பித்து கொள்ளலாம்.

    எனவே ஈரோடு, கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்களை சேர்ந்த மேல்நிலை கல்வி முடித்த மாணவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பித்து சேர்க்கை பெற்று பயனடையுமாறு கல்லூரி முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    ×