search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சரிடம் மனு"

    • தென்காசி மாவட்டத்தின் ராமநதி மேல்மட்ட கால்வாய் திட்டப் பணிக்கு கடந்த ஆட்சி காலத்தில் நிதி ஒதுக்கப்பட்டு வனத்துறை அதிகாரிகள் முறையாக அனுமதி வாங்கவில்லை என்றும் திட்டம் நிறுத்தப்பட்டது.
    • மத்திய, மாநில வனக்குழு சார்பில் விரைந்து அனுமதி வழங்க அமைச்சர் துரைமுருகனிடம் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன் கோரிக்கை மனு வழங்கினார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தின் ராமநதி மேல்மட்ட கால்வாய் திட்டப் பணிக்கு கடந்த ஆட்சி காலத்தில் நிதி ஒதுக்கப்பட்டு முறையாக வனத்துறையில் அனுமதி பெறாமலும், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமலும், முறைப்படி இடம் கையகப்படுத்தாமல் திட்டத்தை தொடங்கி இருந்தனர் என்றும், வனத்துறை அதிகாரிகள் முறையாக அனுமதி வாங்கவில்லை என்றும் திட்டம் நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு தமிழக முதல்-அமைச்சரிடமும், நீர் பாசன துறை அமைச்சர் துரைமுருகனிடமும் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தொடர்ந்து கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டு வந்தது.

    வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் வனத்துறை அதிகாரி களிடம் இருந்து திரும்ப அனுப்பப்பட்ட மனுக்கள் மீண்டும் சரிசெய்யப்பட்டு அந்தந்த துறைகளுக்கு அனுப்பப்பட்டது.

    தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள தமிழ்நாடு வனக் குழுவின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது. எனவே மத்திய, மாநில வனக்குழு சார்பில் விரைந்து அனுமதி வழங்க அமைச்சர் துரைமுருகனிடம் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன் கோரிக்கை மனு வழங்கினார்.

    அதில் அரியபுரம், திப்பனம்பட்டி, ஆவுடை யானூர், வெங்கடாம் பட்டி,தெற்கு மடத்தூர், பெத்தநாடார்பட்டி, பூலாங்குளம், ஆண்டிப்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகள் மற்றும் ஆலங்குளம் பேரூராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட விவசாயிகள் பயன் பெறக்கூடிய வகையில் திட்டத்தை விரைவு படுத்திட வேண்டும் என்று கூறியிருந்தார். அதற்கு அமைச்சர் துரைமுருகன் இத்திட்டத்தை முதல்-அமைச்ச–ரிடம் பேசி விரைவுப்படுத்துவதாக உறுதி அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அப்போது கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரை, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜேசு ராஜன், மாவட்ட பொருளாளர் சரவணன், மாவட்ட உதயநிதி நற்பணி மன்ற துணைச் செயலாளர் அருணன் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • 7000 மக்கள் தொகை கொண்ட மேல்வைலாமூர் ஊராட்சியை 2 ஆக பிரிக்க அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது.
    • 100 நாள் வேலை திட்டம் உள்ளிட்ட பணிகளில் பொது மக்களை ஈடுபடுத்துவதில், மிகவும் சிரமம் உள்ளது

    விழுப்புரம்:

    மேல்வைலாமூர் ஊராட்சியை 2ஆக பிரிக்க வேண்டும் என்று அவ்வூர் ஊராட்சி மன்ற தலைவர் எல்லம்மாள் சம்பத் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சிமஸ்தானிடம் மனு ஒன்று அளித்துள்ளார்:-

    அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: மேல்மலையனூர் தாலுக்கா மேல் வைலா மூர் ஊராட்சியில் மேல் வைலாமூர், மேட்டுவைலாமூர், கல்லேரி, காட்டுப்பாக்கம், ஆலபட்டறை தாங்கள், அடுக்குபாசி, ஆதி திராவிடர் காலனி ஆகிய கிராமங்கள் உள்ளன இவைகளில் மொத்தம் 7,000 மக்கள் தொகை உள்ளனர். 100 நாள் வேலை திட்டம் உள்ளிட்ட பணிகளில் பொது மக்களை ஈடுபடுத்துவதில், மிகவும் சிரமம் உள்ளது எனவே மேற்படி ஊராட்சியை இரண்டாக பிரித்து மேல் வைலமூர், அடுக்கு பாசி, ஆதிதிராவிடர் காலனி ஆகியவைகளை ஒரு ஊராட்சியாகவும் மேட்டு வைலா மூர், கல்லேரி, காட்டுப்பாக்கம், ஆலபட்டறை தாங்கள் ஆகியவைகளை ஒரு ஊராட்சியாகவும் அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    ×