search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு"

    உத்தரபிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட மகனுக்கு அசாம் குடியுரிமை கிடைக்காததால் அதிர்ச்சியில் தாய் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #AssamNRC

    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தில் அண்டை நாடான வங்காள தேசத்தில் இருந்து லட்சக்கணக்கானோர் குடியேறி இருக்கிறார்கள். இதனால் யார் உண்மையான இந்தியர்கள், யார் வங்காள தேசத்தினர் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

    எனவே இதை உறுதி செய்வதற்காக தேசிய குடியுரிமை பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதன் இறுதி பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் 40 லட்சம் பேருடைய பெயர் இடம்பெறவில்லை. அதாவது அந்த 40 லட்சம் பேரும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டு உள்ளது.

    ஆனால் இதில் உண்மையான இந்தியர்கள் பலருடைய பெயரும் உள்ளது. கணக்கெடுப்பில் நடந்த குளறுபடி காரணமாக அவர்களும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்று அடையாளம் கண்டுள்ளனர்.

    அவர்களை தற்போது தடுப்பு முகாமில் தங்க வைத்துள்ளனர். இவ்வாறு தின்சுகியா மாவட்டத்தில் தினேஷ் என்பவரையும், அவரது மனைவியையும் இந்தியர்கள் அல்ல எனக்கூறி தடுப்பு முகாமில் தங்க வைத்துள்ளனர்.

    ஆனால் இவர்களுடைய பூர்வீகம் உத்தரபிரதேச மாநிலம் ஆகும். 1945-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் இருந்து தினேசின் தந்தை பரசுராமன், அவரது தாயார் ஜோத்கிதேவி ஆகியோர் அசாமுக்கு குடிபெயர்ந்துள்ளனர். அங்கு தும்சிகா மாவட்டத்தில் விவசாய தொழில் செய்து பிழைத்து வந்தனர். அவர்களுக்கு தினேஷ், ராஜேஷ் என்ற 2 மகன்களும், 3 பெண் குழந்தைகளும் பிறந்தன.

    தற்போது கணக்கெடுப்பு நடந்தபோது தினேசும், அவரது மனைவியும் இதற்கான தீர்ப்பாயத்தில் பங்கேற்று தங்களை பதிவு செய்யவில்லை. இதனால் அவர்களை வெளிநாட்டவராக கருதி தடுப்பு முகாமில் தங்க வைத்தனர்.

    மகனை தடுப்பு முகாமில் தங்க வைத்ததால் தாயார் ஜோத்கிதேவி அதிர்ச்சி அடைந்தார். தினேசுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். அவர்களை இவர் தான் கவனித்து வந்தார். மகனும், மருமகளும் தடுப்பு முகாமுக்கு சென்றதால் மன வேதனையில் அவருக்கு நோய் ஏற்பட்டது. இதனால் அவர் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் அசாமில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கணக்கெடுப்பு குளறுபடியால் உண்மையான இந்திய குடும்பத்தினர் பாதிக்கப்பட்டிருப்பதாக பலரும் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.

    அசாமை சேர்ந்த போஜ்பூரி மாணவர் இயக்கமும் ஜோத்கிதேவி மரணத்தை மேற்கோள் காட்டி அரசுக்கு கண்டனத்தை தெரிவித்து உள்ளது. #AssamNRC

    அசாம் சென்றிருந்த திரிணாமுல் காங்கிரஸ் குழு மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக அம்மாநில முதல்-மந்திரி மீது மம்தா பானர்ஜி அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது. #AssamNRC
    கொல்கத்தா:

    அசாம் மாநிலத்தில் தேசிய குடியுரிமை பட்டியலில் இருந்து 40 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். அது குறித்து விசாரணை நடத்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 8 பேர் கொண்ட குழுவினர் மேற்கு வங்காளத்தில் இருந்து அசாம் சென்றனர்.

    அங்கு சில்கார் விமான நிலையத்தில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். தாக்கியதாகவும் தெரிகிறது. அவர்கள் மீதும், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதற்கு பதிலடியாக மேற்கு வங்காள மாநிலத்தில் அசாம் மாநில முதல்- மந்திரி சர்பானந்தா சோனோவால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் குழுவில் இடம் பெற்றிருந்த 2 பெண் எம்.பி.க்கள், ஒரு பெண் எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்களை தாக்குதல் நடத்த உத்தரவிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


    இ.பி.கோ. 354 (பெண்கள் மீது தாக்குதல் நடத்தி மானபங்கம் செய்தல்), இ.பி.கோ 341 (தவறான முறையில் தண்டித்தல்), இ.பி.கோ. 12பி (குற்ற நோக்கத்தில் தண்டித்தல்), ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை ஜாமீனில் வெளியே வர முடியாத சட்டப்பிரிவுகளாகும்.

    அலிப்பூர் போலீஸ் நிலையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், கரிம்பூர் எம்.எல்.ஏ.வுமான மகுயா மொய்த்ரா சார்பிலும், எம்.பி.க்கள் ககோலி சோஸ் தஸ்திதார் மற்றும் மம்தா தாகூர் சார்பில் சுபாங் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலைய போலீசிலும் புகார் செய்யப்பட்டுள்ளன. அதில் அசாம் முதல்-மந்திரி சர்பானந்தா சோனோவால் உத்தரவின் பேரில் பெண் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ. மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டுள்ளது.

    இதற்கிடையே அசாமில் திரிணாமுல் காங்கிரஸ் குழுவினர் தாக்கப்பட்டதை கண்டித்து நேற்று மேற்கு வங்காளம் முழுவதும் கருப்பு நாள் கடை பிடிக்கப்பட்டது. அதில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், தர்ணாக்கள், ரெயில் மறியல், சாலை மறியல், கருப்பு உடை அணிதல், உருவ பொம்மை எரிப்பு உள்ளிட்ட பலவி தமான போராட்டங்களை நடத்தினர். #AssamNRC #MamataBanerjee  #SarbanandaSonowal
    அசாம் மாநிலத்தில் குடிமக்கள் பதிவேட்டில் 40 லட்சம் பேர் விடுபட்டது தொடர்பாக டெல்லியில் இன்று தொடங்கிய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. #Congress #RahulGandhi
    புதுடெல்லி:

    டெல்லியில் காங்கிரஸ் காரியகமிட்டி கூட்டம் இன்று காலை நடந்தது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மூத்த தலைவர்கள் மன்மோகன்சிங், குலாம்நபி ஆசாத், அசோக்கெலாட் மற்றும் காரிய கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.


    அசாம் மாநிலத்தில் சமீபத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதி வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளன. இவர்கள் நீண்டகாலமாக அசாமில் குடியிருந்து வருகிறார்கள். எனவே அவர்கள் அசாம் மாநிலத்தவர்கள் தான். வெளியில் இருந்து வந்தவர்கள் அல்ல என காங்கிரஸ் கூறிவருகிறது. இந்தப் பிரச்சனை குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    தொடர்ந்து பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்தும் ராஜஸ்தன், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. #Congress #RahulGandhi #SoniaGandhi
    ×