search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஇஅதிமுக"

    • நாளை நடைபெறவிருந்த அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் மாற்றப்பட்டு உள்ளது.
    • இந்தக் கூட்டம் வரும் 10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும்.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.ஜி.ஆர்.மாளிகையில் வருகிற 4-ம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறுவதாக இருந்த ஆலோசனை கூட்டம் தேதி மாற்றப்பட்டு 10-09-2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை கழகச் செயலாளர்கள், மாவட்ட கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டுக் குழுவினர்கள் ஆகிய அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அமலாக்கத் துறையினர் சோதனையில் இருந்து எவரும் தப்ப முடியாது.
    • தி.மு.க.விற்கு இனி ஒவ்வொரு மாதமும் கைது மாதம் தான் என்று ஜெயக்குமார் கூறினார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

    அரசியலைப் பொறுத்தவரை நிரந்தர நண்பரும் இல்லை, எதிரியும் இல்லை. பலரும் ஒன்று கூடி உள்ளார்கள். இது தொடருமா என்பதுதான் கேள்விக்குறி. கூடிவிட்டு எல்லோரும் கையைத் தூக்கிவிட்டதால் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்று மட்டும் எண்ணாதீர்கள். எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றதால் எந்த தாக்கமும் ஏற்படாது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் கடுமையான கெட்டப் பெயர் ஏற்பட்டுள்ளது. தேவையற்ற பெட்டிகளை கழற்றி விட்ட பின் அ.தி.மு.க. ரெயில் சென்று கொண்டிருக்கிறது.

    தி.மு.க.விற்கு இனி ஒவ்வொரு மாதமும் கைது மாதம் தான். அமலாக்கத்துறை சோதனையில் இருந்து எவரும் தப்ப முடியாது.

    தேர்தல் நெருங்கும்போது தி.மு.க. கூட்டணி கட்சிகள் அ.தி.மு.க.வுக்கு வர வாய்ப்பு உள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருப்பதால் எந்த மாற்றமும் ஏற்படலாம்.

    எங்களைப் பொறுத்தவரை யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்; வந்தால்தான் அதிலுள்ள நெளிவு சுளிவுகள் பற்றி தெரியும் என தெரிவித்தார்.

    • பெண்கள் கலந்து கொண்டு விளையாடி பரிசுகளை பெற்றனர்
    • கேக் வெட்டி வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    உலகம் முழுக்க மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கே.எஸ்.சி., ஸ்கூல் ரோட்டில்உள்ள அந்த கட்சி அலுவலகத்தில் மகளிர் தின கொண்டாட்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதிமுக கட்சியை சேர்ந்த மகளிரணி நிர்வாகிகள் உள்பட 300 க்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர்.. அதிமுக மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பழனிசாமி, திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார், திருப்பூர் தெற்கு முன்னாள் எம்.எல்.ஏ., சு.குணசேகரன் ஆகியோர் தலைமையில் கேக் வெட்டி வழங்கப்பட்டது. தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. கயிறு இழுத்தல், லெமன் ஸ்பூன், லக்கி கார்னர், பலூன் உடைக்கும் போட்டிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளையாடி பரிசுகளை பெற்றனர் . இந்த போட்டிகளை முன்னாள் எம்.எல்.ஏ., சு.குணசேகரன் நடத்தி வைத்தார். மாவட்ட இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர் வரவேற்றார்.

    இந்த நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர்கள் அன்பகம் திருப்பதி, கண்ணப்பன், பி.கே.எம்.முத்து, ஹரிஹரசுதன், வேலுமணி, பாசறை சந்திரசேகர், யுவராஜ், வக்கீல் முருகேசன், எம்.ஜி.ஆர்., மன்ற தேவராஜ், மோட்டார் பாலு, மதுரபாரதி உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    ×