என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Yellow warning"
- அடுத்து வரக்கூடிய 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- அடுத்த 5 கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்து வரக்கூடிய 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்காக மஞ்சள் எச்சரிக்கை விட பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பகல் நேர வெப்பநிலை சற்றே அதிகரித்து காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் வலைகுடா பகுதிகளில் 55 கி.மீ வரை காற்றும் வீசும் என்பதால் மீனவர்கள் அடுத்த 5 கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
- பொதுமக்கள் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன.
- பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் நேற்று கனமழை கொட்டியது. இதனால் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் பல மணி நேரம் விடாமல் கனமழை கொட்டியதால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மேலும் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்தது. சில இடங்களில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியதால் மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்தனர்.
கஜக்கூட்டம் பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்ததால் குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. அங்கு துணை மின் நிலையத்திலும் மழை வெள்ளம் தேங்கியது. இதனால் பல இடங்களில் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்குவதற்காக நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டன. வெள்ளத்தில் சிக்கி தவித்த பொதுமக்களை பேரிடர் மீட்பு குழுவினர் ரப்பர் படகுகளில் சென்று மீட்டு நிவாரணை முகாம்களில் தங்க வைத்தனர்.
பொதுமக்களை தங்க வைப்பதற்காக திருவனந்தபுரம் மாவட்டம் முழுவதும் நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டன. திருவனந்தபுரம் தாலுகாவில் உள்ள 16 முகாம்களில் 580 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். சிராயின்கீழ் தாலுகாவில் அமைக்கப்பட்டிருக்கும் 4 முகாம்களில் 249 பேரும், வர்கலா தாலுகாவில் உள்ள நிவாரண முகாமில் 46 பேரும் தங்கியிருக்கின்றனர்.
மாவட்டம் முழுவதும் திறக்கப்பட்டுள்ள 21 நிவாரண முகாம்களில் மொத்தம் 900பேர் தஞ்சம் அடைந்துள்ளனர். முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் திருவனந்தபுரம், நெய்யாற்றின்கரை, கட்டக்கடா, நெடுமங்காடு, வர்க்கலா, சிராயன்கீழ் ஆகிய தாலுகாக்களில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. அவற்றை பொதுமக்கள் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன.
உதவி தேவைப்படுவோர் கட்டுப்பாட்டு மையங்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கனமழை காரணமாக திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி-கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டு இருக்கிறது.
கேரள மாநிலத்தில் பல மாவட்டங்களில் நாளை மறுநாள்(18-ந்தேதி) வரை கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.
பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்க ளுக்கு இன்றும், நாளையும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி, வயநாடு ஆகிய 5 மாவட்டங்களுக்கு 18-ந் தேதியும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதியை சேர்ந்த பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- மழையின் காரணமாக நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், உடல் நலனில் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டும்.
திருவனந்தபுரம்:
அரபிக்கடல் கொங்கன்-கோவா கடற்கரை மற்றும் வடகிழக்கு வங்கக்கடல் பகுதியில் 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக அரபிக்கடலில் கேரள கடற்கரையை ஓட்டிய மேற்கு திசையில் இருந்து காற்று வேகமாக வீசி வருகிறது. வருகிற 2-ந்தேதி வரை கன மழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ஆலப்புழா, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை அல்லது மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாவும், மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்க ளுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்ப ட்டுள்ளது.
இந்த ஆண்டு 122 நாள் பருவமழைக்கான காலம் முடிவதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் கேரளாவில் மழை நீடித்து வருகிறது. மழை தொடர்ந்து பெய்து வருவதால், மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழையின் காரணமாக நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், உடல் நலனில் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டும். ஏதேனும் சிறு அறிகுறிகள் தோன்றினாலும் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய ஆலப்புழாவின் குட்டநாடு பகுதியில் 3 நடமாடும் மிதக்கும் மருந்தகங்கள் மற்றும் நீர் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
- 64.5மில்லிமீட்டர் முதல் 115.5 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கேரள மீனவர்கள் வருகிற 21-ந்தேதி கடலுக்கு மீன்பிடிக் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு இருக்கிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியது. இருந்த போதிலும் கடந்த இரணடு வாரங்களுக்கு முன்பு அங்கு மழை பெய்தது.
பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்தது. இதன் காரணமாக கண்ணூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மலையோர பகுதிகளில் சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது.
குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்தனர். அவர்களை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர். மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்களில் ஆயிரக்கணக்கானோர் ஒரு வாரத்திற்கும் மேலாக தஞ்சம் அடைந்திருந்தனர்.
இந்நிலையில் ஒரு வாரத்திற்கும் மேலாக கேரள மாநிலத்தில் மழை இல்லை. இதனால் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கின. நிவாரண முகாம்களில் தங்கியிருந்த வர்கள் தங்களில் வீடுகளுக்கு திரும்பி செல்ல தொடங்கினர்.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் பலத்தமழை பெய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று முதல் 21-ந்தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்திற்கு இன்று மட்டும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த மாவட்டங்களில் 64.5மில்லிமீட்டர் முதல் 115.5 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேரள மீனவர்கள் இன்றுமுதல் வருகிற 21-ந்தேதி கடலுக்கு மீன்பிடிக் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு இருக்கிறது.
- தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது.
- அடுத்த 3 நாட்களுக்க கனமழை பெய்ய வாய்ப்பு.
திருவனந்தபுரம்:
கேரளாவில் தாமதமாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதையடுத்து அடுத்த 3 நாட்களுக்கு கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக ஆலப்புழா, கண்ணூர், கோழிக்கோடு மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இந்த மாவட்டங்களில் 64.5 மில்லி மீட்டர் முதல் 115.5 மில்லி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்