search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "workshop worker"

    • 2 பேர் உமர் முத்தாரிடம், உனது கடை உரிமையாளர் எங்கே என கேட்டு தகராறு செய்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    கோவை:

    கோவை போத்தனூர் அருகே உள்ள மேட்டூரை சேர்ந்தவர் உமர் முத்தார் (வயது 19). மட்டன் கடை ஊழியர். இவர் நேற்று போத்தனூர் சாரதாமில் ரோட்டில் தனது நண்பர் ஒருவருடன் நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் உமர் முத்தாரிடம், உனது கடை உரிமையாளர் எங்கே, அவரை இங்கு வரசொல் என கேட்டு தகராறு செய்தனர்.

    அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த 2 பேரும் சேர்ந்து உமர் முத்தாரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி மிரட்டி விட்டு சென்றனர். இது குறித்து அவர் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    அதில் முன்விரோதம் காரணமாக உமர் முத்தாரை தாக்கியது போத்தனூர் நூராபாத்தை சேர்ந்த நிஷாம் (31) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.

    கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த ஒர்க்‌ஷாப் தொழிலாளிக்கு லாட்டரி சீட்டில் முதல் பரிசான ரூ.4 கோடி கிடைத்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் மாநில அரசே லாட்டரி சீட்டுகளை அச்சடித்து விற்பனை செய்து வருகிறது. காருண்யா பாக்கிய லெட்சுமி, பாக்கியஸ்ரீ, ஸ்ரீசக்தி ஆகிய பெயர்களில் லாட்டரி குலுக்கல் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டு வருகிறது.

    ஓணம் போன்ற பண்டிகை காலங்களில் பம்பர் பரிசுகளுடன் லாட்டரி குலுக்கல்கள் நடத்தப்படுகிறது. தற்போது பாக்கியலெட்சுமி லாட்டரி குலுக்கலில் கேரள மாநிலம் மலப்புரம் மேலாற்றூர் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 58) என்பவருக்கு முதல் பரிசான ரூ.4 கோடி கிடைத்துள்ளது.

    இவர், அந்த பகுதியில் உள்ள ஒரு ஒர்க்‌ஷாப்பில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். தொடர்ந்து லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் உள்ள பாலகிருஷ்ணனுக்கு தற்போதுதான் பெரிய பரிசு கிடைத்துள்ளது.

    இதுபற்றி அவர் கூறும் போது, ஒர்க்‌ஷாப்பில் வேலை செய்து வரும் நான், இனி சொந்தமாக ஒர்க்‌ஷாப் தொடங்குவேன். எனது குடும்பத்தினருக்கும் மற்றும் ஏழைகளுக்கும் லாட்டரி பணத்தை செலவு செய்வேன் என்றார். #Tamilnews
    ×