search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Worker family"

    • நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் அருகே உள்ள கரையிருப்பு நாடார் தெருவை சேர்ந்தவர் மாயாண்டி நாடார் கூலி தொழிலாளி.
    • கணவர் இறந்து விட்டதால் குடும்பம் மிகவும் கஷ்டப்படுவதாகவும், வறுமையில் வாடுவதாகவும் கூறி நெல்லை தட்சணமாற நாடார் சங்கத்திடம் உதவி கேட்டு மனு கொடுத்திருந்தார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் அருகே உள்ள கரையிருப்பு நாடார் தெருவை சேர்ந்தவர் மாயாண்டி நாடார் (வயது 58). கூலி தொழிலாளி. இவர் கடந்த 26-6-2022 அன்று கரையிருப்பு காட்டுப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் அவரது மனைவி புஷ்பம் தனது கணவர் இறந்து விட்டதால் குடும்பம் மிகவும் கஷ்டப்படுவதாகவும், வறுமையில் வாடுவதாகவும் கூறி நெல்லை தட்சணமாற நாடார் சங்கத்திடம் உதவி கேட்டு மனு கொடுத்திருந்தார். அந்த மனுவை சங்க நிர்வாக சபை கூட்டத்தில் வைத்து பரிசீலனை செய்து உதவித்தொகை வழங்க முடிவு செய்து, புஷ்பத்திடம் சங்கத்தில் இருந்து ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார், செயலாளர் ராஜகுமார் நாடார், பொருளாளர் செல்வராஜ் நாடார் மற்றும் சங்க காரிய கமிட்டி, நிர்வாக சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • சூரிய சேகர் என்பவர் குடிபோதையில் போர்வையுடன் வந்து முருகனின் வீட்டிற்குள் நுழைய முயன்றுள்ளார்.
    • சாந்து கரண்டியை எடுத்துக்காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி பாரதிநகர் 5-வது தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 60). பெயிண்டர். இவரது மனைவி கன்னீஸ்வரி, மகன் பாஸ்கர், மகள் பவானி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு தங்கள் வீட்டின் முன்பு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த சூரிய சேகர் (38) என்பவர் குடிபோதையில் போர்வையுடன் வந்து முருகனின் வீட்டிற்குள் நுழைய முயன்றுள்ளார். இதனை கன்னீஸ்வரியும், அவரது மகன் மற்றும் மகளும் சேர்ந்து கண்டித்து தடுத்துள்ளனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த சூரிய சேகர் ஆபாசமாக பேசி தகராறு செய்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் அவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சிங்கமுத்து, ஐகோர்ட் ஆகியோரையும் அழைத்துக் கொண்டு வந்து மீண்டும் தகராறு செய்துள்ளார். அப்போது அவர்கள் சாந்து கரண்டியை எடுத்துக்காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர்.

    இதனை கேள்விப்பட்டு முருகன் அங்கு வருவதற்குள் சூரிய சேகர் உள்ளிட்ட 3 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர். பின்னர் இது குறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சூரிய சேகரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

    ×