என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "War 2"

    • ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வார் 2 திரைப்படம் உருவாகியுள்ளது.
    • மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

    ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வார் 2 திரைப்படம் உருவாகியுள்ளது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

    இப்படத்தில் கியாரா அத்வானி மிகவும் கவர்ச்சியான கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை அயன் முகர்ஜி இயக்க யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

    திரைப்படத்தின் வசூல் விவரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் திரைபடம் உலகளவில் 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதியாவில் மட்டும் 240 கோடி ரூபாய் வசூலித்தது. ஓவர்சீஸ்-ல் 60 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி.
    • 4- வது நாள் மட்டும் இந்தியாவில் 35 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

    நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

    இந்நிலையில் உலகம் முழுவதும் கூலி திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் வெளியாகி 4 நாட்களில் 194.25 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. 4- வது நாள் மட்டும் இந்தியாவில் 35 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

    கூலி திரைப்படம் வெளியான் அதே நாளில் ஜுனியர் என்.டி ஆர் மற்றும் ஹ்ரித்திக் ரோஷன் நடித்த வார் 2 திரைப்படமும் வெளியானது. அப்படம் 4 நாட்கள் முடிவில் 173.60 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. நேற்று மட்டும் 31 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

    இரண்டு திரைப்படமுமே நேற்று வசூலில் சறுக்கலை சந்தித்துள்ளது. இரண்டு படங்களின் விமர்சனங்களும் சற்று நெகட்டிவாக வருவதால் மக்கள் படத்தை பார்க்க யோசிக்கின்றனர். இதனால் வரும் நாட்களில் திரைப்படத்தில் வசூல் வெகுவாக குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • முன்னாள் ரா ஏஜென்ட்டான ஹிருத்திக் ரோஷன், ஃப்ரீலான்சர் வேலை பார்த்து வருகிறார்.
    • காலி கேங், இந்திய பிரதமரை கொலை செய்ய திட்டம் போடுகிறது.

    கதைக்களம்

    முன்னாள் ரா ஏஜென்ட்டான ஹிருத்திக் ரோஷன், ஃப்ரீலான்சர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் காலி என்னும் சீக்ரெட் கேங், ஹிருத்திக் ரோஷனை வேலைக்கு அழைக்கிறது. அழைப்பை ஏற்றுக் கொண்ட ஹிருத்திக் ரோஷன், தனக்கு குருவாக இருக்கும் அஸ்தோஷ் ராணாவை கொல்கிறார். இதை அறிந்த ரா ஏஜென்ட்டின் தலைமை அதிகாரி அனில் கபூர், ரா ஏஜென்ட் ஜூனியர் என் டி ஆரை மூலமாக ஹிருத்திக் ரோஷனை பிடிக்க முயற்சி செய்கிறார். இதற்கிடையில் காலி கேங், இந்திய பிரதமரை கொலை செய்ய திட்டம் போடுகிறது.

    இறுதியில் ஹிருத்திக் ரோஷனை, ஜூனியர் என் டி ஆர் பிடித்தாரா? இந்திய பிரதமரை கொலை செய்யும் திட்டம் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் ஹிருத்திக் ரோஷன், அலட்டல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அதிக வசனம் இல்லாமல் கண் பார்வை மற்றும் உடல் மொழியால் நடிப்பை கொடுத்து இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் பிரமிக்க வைத்து இருக்கிறார்.

    இவருக்கு இணையாக போட்டி போட்டு நடித்து இருக்கிறார் ஜூனியர் என் டி ஆர். இவரது பார்வை, ஆக்ஷன் காட்சிகளில் வெளுத்து வாங்கி இருக்கிறார். குறிப்பாக ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என் டி ஆர் நடனம் ஆடும் காட்சி அசர வைக்கிறது.

    ரா ஏஜென்ட் தலைமை அதிகாரி அனில் கபூர் அனுபவ நடிப்பையும், கியாரா அத்வானி கவர்ச்சியில் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார்கள். மற்ற கதாபாத்திரத்தில் வருபவர்களின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

    இயக்கம்

    ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அயன் முகர்ஜி. இதில் இந்தியாவை அழிக்க சதி திட்டம் போடும் வெளிநாட்டினர், அவர்களை எதிர்க்கும் சூப்பர் பவர் கொண்டவர்கள் என்று ஹாலிவுட் படங்களுக்கு நிகராக கொடுக்க நினைத்து இருக்கிறார். இது ஓரளவிற்கு ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. படம் ஆரம்பம் முதல் இறுதி வரை சண்டை காட்சிகளே அதிகம் இருக்கிறது. ரெயில், விமானம், கப்பல், கார் என்று சண்டை நீண்டு கொண்டே போகிறது. திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம். கிராபிக்ஸ் காட்சிகள் ஒரு சில இடங்களில் நன்றாகவும், ஒரு சில இடங்களில் சுமாராகவும் இருக்கிறது.

    இசை

    பிரிதம் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். சஞ்சித் பல்ஹாரா மற்றும் அங்கித் பல்ஹாராவின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.

    ஒளிப்பதிவு

    பெஞ்சமின் ஜாஸ்பரின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

    தயாரிப்பு

    ஆதித்யா சோப்ரா இப்படத்தை தயாரித்துள்ளார்.

    ரேட்டிங் - 3/5

    • ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வார் 2 திரைப்படம் உருவாகியுள்ளது.
    • திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

    ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வார் 2 திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் கியாரா அத்வானி மிகவும் கவர்ச்சியான கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை அயன் முகர்ஜி இயக்க யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

    திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. அண்மையில் படத்தின் டிரெய்லர் வெளியாகி மக்களின் எதிர்ப்பார்ப்பை இன்னும் அதிகரித்தது.

    இதனை தொடர்ந்து படத்தின் பாடலான ஜனாப் இ ஆலி பாடலின் டீசரை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் கியாரா அத்வானி, இந்த படத்தில் பிகினி உடையில் நடித்துள்ளார். அது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.




     


    இதுகுறித்து தணிக்கை குழு படத்தில் சில மாற்றங்களை செய்துள்ளனர். கியாரா நடித்துள்ள 9 வினாடி கவர்ச்சிகரமான பிகினி காட்சிகளை படத்தில் இருந்து நீக்கியுள்ளனர். அதன்படி இந்தி மொழியில் படத்தின் நேரளவு  2 மணி நேரம் 53 நிமிடங்களாக ஆகவும், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் படத்தின் நேரளவு 2 மணி நேரம் 51 நிமிடங்களாக முடிவு செய்யப்பட்டு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது.

    பிகினி காட்சிகளை நீக்கியதால் கியாரா ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

    • ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வார் 2 திரைப்படம் உருவாகியுள்ளது.
    • இப்படத்தில் கியாரா அத்வானி மிகவும் கவர்ச்சியான கதாநாயகியாக நடித்துள்ளார்.

    ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வார் 2 திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் கியாரா அத்வானி மிகவும் கவர்ச்சியான கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை அயன் முகர்ஜி இயக்க யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. 

    திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. அண்மையில் படத்தின் டிரெய்லர் வெளியாகி மக்களின் எதிர்ப்பார்ப்பை இன்னும் அதிகரித்தது.

    இதனை தொடர்ந்து படத்தின் பாடலான ஜனாப் இ ஆலி பாடலின் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அதில் ஹ்ரித்திக் மற்றும் ஜூஇயர் என்.டி.ஆர் இருவரும் மிகவும் அசத்தலான நடனாம் ஆடுகின்றனர். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இந்நிலையில் கியாரா அத்வானி, இந்த படத்தில் பிகினி உடையில் நடித்துள்ளார். அது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வார் 2 திரைப்படம் உருவாகியுள்ளது.
    • இப்படத்தை அயன் முகர்ஜி இயக்க யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

    தெலுங்கு சினிமாவின் நட்சத்திர நடிகரான ஜூனியர் என் டி ஆர் இந்தி திரையுலகில் தற்போது காலடி பதித்துள்ளார். ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வார் 2 திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் கியாரா அத்வானி மிகவும் கவர்ச்சியான கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை அயன் முகர்ஜி இயக்க யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

    திரைப்படம் மிகவும் ஆக்ஷன் நிறைந்த காட்சிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. அண்மையில் படத்தின் டிரெய்லர் வெளியாகி மக்களின் எதிர்ப்பார்ப்பை இன்னும் அதிகரித்தது.

    இரண்டு ராணுவ வீரர்கள் வெவ்வேறு இலக்கை நோக்கி பயனிக்கின்றனர், இந்த இருவருடைய மனநிலை மற்றும் கோட்பாடுகள் வெவ்வேறாக இருக்கிறது.

    இந்நிலையில் திரைப்படம் வெளியாக இன்னும் 1 வாரமே உள்ள நிலையில் படத்தின் பாடலான ஜனாப் இ ஆலி பாடலின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஹ்ரித்திக் மற்றும் ஜூஇயர் என்.டி.ஆர் இருவரும் மிகவும் அசத்தலான நடனாம் ஆடுகின்றனர். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • தெலுங்கு சினிமாவின் நட்சத்திர நடிகரான ஜூனியர் என் டி ஆர் இந்தி திரையுலகில் அவரது முதல் படத்தை நடித்துள்ளார்.
    • திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

    தெலுங்கு சினிமாவின் நட்சத்திர நடிகரான ஜூனியர் என் டி ஆர் இந்தி திரையுலகில் அவரது முதல் படத்தை நடித்துள்ளார். ஹ்ரித்திக் ரோஷன் நடித்த வார் 2 திரைப்படத்தில் ஜூனியர் என் டி ஆர் நடித்துள்ளார். கியாரா அத்வானி மிகவும் கவர்ச்சியான கதாநாயகியாக நடித்துள்ளார்.

    திரைப்படம் மிகவும் ஆக்ஷன் நிறைந்த காட்சிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. மிகவும் பிரம்மாண்டமான பொருட் செலவில் திரைப்படம் உருவாகியுள்ளது. இரண்டு ராணுவ வீரர்கள் வெவ்வேறு இலக்கை நோக்கி பயனிக்கின்றனர், இந்த இருவரும் மனநிலை மற்றும் கோட்பாடுகள் வேறாக இருக்கிறது. டிரெய்லர் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

    இப்படத்தை அயன் முகர்ஜி இயக்க யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. 

    • ஹ்ரித்திக் ரோஷன் நடித்த வார் 2 திரைப்படத்தில் ஜூனியர் என் டி ஆர் நடித்துள்ளார்.
    • திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

    தெலுங்கு சினிமாவின் நட்சத்திர நடிகரான ஜூனியர் என் டி ஆர் இந்தி திரையுலகில் அவரது முதல் படத்தை நடித்துள்ளார். ஹ்ரித்திக் ரோஷன் நடித்த வார் 2 திரைப்படத்தில் ஜூனியர் என் டி ஆர் நடித்துள்ளார். இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கியாரா அத்வானி மிகவும் கவர்ச்சியான கதாநாயகியாக நடித்துள்ளார்.

    திரைப்படம் மிகவும் ஆக்ஷன் நிறைந்த காட்சிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் டிரெய்லர் வரும் ஜூலை 25 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    இப்படத்தை அயன் முகர்ஜி இயக்க யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

    • ஹ்ரித்திக் ரோஷன் நடித்த வார் 2 திரைப்படத்தில் ஜூனியர் என் டி ஆர் நடித்துள்ளார்.
    • கியாரா அத்வானி மிகவும் கவர்ச்சியான கதாநாயகியாக நடித்துள்ளார்.

    தெலுங்கு சினிமாவின் நட்சத்திர நடிகரான ஜூனியர் என் டி ஆர் இந்தி திரையுலகில் அவரது முதல் படத்தை நடித்துள்ளார். ஹ்ரித்திக் ரோஷன் நடித்த வார் 2 திரைப்படத்தில் ஜூனியர் என் டி ஆர் நடித்துள்ளார். இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கியாரா அத்வானி மிகவும் கவர்ச்சியான கதாநாயகியாக நடித்துள்ளார்.

    படத்தின் டீசரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. திரைப்படம் மிகவும் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஜூனியர் என் டி ஆர் vs 2 ஹ்ரித்திக் ரோஷன் இர்வருக்கும் இடையே மோதல் காட்சிகள் டீசரின் ஹைலைட்டாக அமைந்துள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

    இப்படத்தை அயன் முகர்ஜி இயக்க யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

    • ஹிரித்திக் ரோஷன் கடந்த சில வாரங்களாக பயிற்சி எடுத்திருந்தார்.
    • ஜுனியர் என்.டி.ஆர். இணைவது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

    ஃபைட்டர் திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதம் கூட நிறைவு பெறாத நிலையில் ஹிரித்திக் ரோஷன் ஏஜெண்ட் கபீர் கதாபாத்திரத்தில் நடிக்க மீண்டும் ஆயத்தமாகி வருகிறார். கடந்த ஜனவரி 25-ம் தேதி ஃபைட்டர் வெளியான நிலையில் ஹிரித்திக் ரோஷன் வார் படத்திற்கு தயாராகி வருகிறார்.

    2019-ம் ஆண்டு ஹிரித்திக் ரோஷன் ஏற்று நடித்திருந்த ஏஜெண்ட் கபீர் கதாபாத்திரம் பேசு பொருளாக மாறியது. மேலும் இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் ஹிரித்திக் ரோஷன் வார் 2 படத்தை அடுத்த வாரத்திலேயே துவங்க இருக்கிறார்.

     


    வார் 2 மூலம் இந்த ஆக்ஷன் யூனிவர்சில் ஜுனியர் என்.டி.ஆர். இணைவது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. வை.ஆர்.எஃப். ஸ்பை யுனிவர்ஸ் மூலம் ஹிரித்திக் ரோஷனின் இதுவரை பார்த்திராத கோணத்தை இயக்குனர் அயன் முகர்ஜி வெளிக்கொண்டுவர ஆயத்தமாகி வருகிறார்.

    அந்த வகையில் வார் 2 படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 23-ந் தேதி துவங்குகிறது. தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக ஹிரித்திக் ரோஷன் கடந்த சில வாரங்களாக பயிற்சி எடுத்திருந்தார்.

    இந்த படம் குறித்து சமீபத்தில் பேசிய ஹிரித்திக் ரோஷன், "கபீர் குறிப்பிடத்தக்க தடத்தை பதித்துள்ளான். இதனால் மீண்டும் கபீராக மாறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் கபீரை இந்த முறை வித்தியாசமான தோற்றத்தில் வெளிப்படுத்து எனக்கு சவாலாக இருக்கும். அவனின் மற்றொரு கோணம் வித்தியாசமாக இருக்க போகிறது," என்று தெரிவித்தார். 

    ×