என் மலர்
சினிமா செய்திகள்

Coolie Vs War 2 Collection: 4 நாட்கள் முடிவில் வசூலில் வெற்றி பெற்றது எது?
- நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி.
- 4- வது நாள் மட்டும் இந்தியாவில் 35 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் உலகம் முழுவதும் கூலி திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் வெளியாகி 4 நாட்களில் 194.25 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. 4- வது நாள் மட்டும் இந்தியாவில் 35 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
கூலி திரைப்படம் வெளியான் அதே நாளில் ஜுனியர் என்.டி ஆர் மற்றும் ஹ்ரித்திக் ரோஷன் நடித்த வார் 2 திரைப்படமும் வெளியானது. அப்படம் 4 நாட்கள் முடிவில் 173.60 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. நேற்று மட்டும் 31 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
இரண்டு திரைப்படமுமே நேற்று வசூலில் சறுக்கலை சந்தித்துள்ளது. இரண்டு படங்களின் விமர்சனங்களும் சற்று நெகட்டிவாக வருவதால் மக்கள் படத்தை பார்க்க யோசிக்கின்றனர். இதனால் வரும் நாட்களில் திரைப்படத்தில் வசூல் வெகுவாக குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.






