என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    `நான் சபதம் செய்கிறேன்' - War 2 படத்தின் டிரெய்லர் ரிலீஸ்!

    • தெலுங்கு சினிமாவின் நட்சத்திர நடிகரான ஜூனியர் என் டி ஆர் இந்தி திரையுலகில் அவரது முதல் படத்தை நடித்துள்ளார்.
    • திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

    தெலுங்கு சினிமாவின் நட்சத்திர நடிகரான ஜூனியர் என் டி ஆர் இந்தி திரையுலகில் அவரது முதல் படத்தை நடித்துள்ளார். ஹ்ரித்திக் ரோஷன் நடித்த வார் 2 திரைப்படத்தில் ஜூனியர் என் டி ஆர் நடித்துள்ளார். கியாரா அத்வானி மிகவும் கவர்ச்சியான கதாநாயகியாக நடித்துள்ளார்.

    திரைப்படம் மிகவும் ஆக்ஷன் நிறைந்த காட்சிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. மிகவும் பிரம்மாண்டமான பொருட் செலவில் திரைப்படம் உருவாகியுள்ளது. இரண்டு ராணுவ வீரர்கள் வெவ்வேறு இலக்கை நோக்கி பயனிக்கின்றனர், இந்த இருவரும் மனநிலை மற்றும் கோட்பாடுகள் வேறாக இருக்கிறது. டிரெய்லர் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

    இப்படத்தை அயன் முகர்ஜி இயக்க யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

    Next Story
    ×