என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Village administration officers"

    • 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • 20 கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    உடுமலை :

    தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம், மாநில மையத்தின் வழிகாட்டுதலின்படி உடுமலைப்பேட்டை வட்டக்கிளை சார்பாக உடுமலை வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழைய ஓய்வூதிய திட்டம், பதவி உயர்வில் முன்னுரிமை, பயணப்படி உயர்த்தி வழங்கவும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளை பணியில் சேர்ந்த உரிய காலத்திற்குள் வழங்க கோரியும், ஈட்டிய விடுப்பு, அகவிலைப்படி ஆகியவற்றை மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக வழங்குவது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் உடுமலைப்பேட்டை வட்டத்தைச் சேர்ந்த 20 கிராம நிர்வாக அலுவ லர்கள் திருப்பூர் மாவட்ட கிராம நிர்வாக அலுவல ர்கள் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் முத்துக்குமார் தலைமையில் கலந்து கொண்டனர்.

    பெரம்பலூரில் கிராம நிர்வாக அதிகாரிகள் ஊர்வலம் சென்று மாவட்ட கலெக்டர் சாந்தாவிடம் மனுவை அளித்தனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் கிராம நிர்வாக அதிகாரிகள் அனைவருக்கும், ஒரே அரசாணை மூலம் மாவட்ட மாறுதலை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும். பணியிடங்களை மறு சீரமைப்பு செய்ய வேண்டும். தங்களது அலுவலகங்களில் அடிப்படை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். கணினி வழிச்சான்றிதழ்கள், இணையதள பணிகளுக்கான செலவின தொகை மற்றும் வசதிகள் செய்து தர வேண்டும். அடங்கல் சான்றிதழை கிராம நிர்வாக அதிகாரி டிஜிட்டல் கையொப்பமிட்டு வழங்க அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 21 கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தினர் கடந்த மாதம் ( நவம்பர்) 28-ந் தேதி முதல் ஆன்லைன் சான்றிதழ் பதிவு செய்யும் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் கடந்த 10-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம நிர்வாக அதிகாரிகள் தர்ணா, காத்திருப்பு போராட்டம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட தலைவர் ராஜா தலைமையில் நேற்று கோரிக்கை விளக்க ஊர்வலம் நடைபெற்றது. பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் புறநகர் பஸ் நிலையம், பாலக்கரை வழியாக சென்று கலெக்டர் அலுவலகத்தில் முடிவடைந்தது. அதன் பிறகு மனுவை மாவட்ட கலெக்டர் சாந்தாவிடம் அளித்தனர்.
    பெரம்பலூரில் கிராம நிர்வாக அதிகாரிகள் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினர்
    பெரம்பலூர்:

    கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு அலுவலகங்களில் கணினி, இணையதள வசதி போன்ற அடிப்படை வசதிகளை அரசு நிறைவேற்றி தர வேண்டும். கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும். மாவட்ட அளவிலான பணிமாறுதல், கிராம நிர்வாக அதிகாரிகளின் பரிந்துரையை ஏற்று உட்பிரிவுகளில் பட்டா வழங்குதல் உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அதிகாரிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அதிகாரிகள் கடந்த 28-ந் தேதி முதல் பட்டா உள்ளிட்ட சான்றிதழ்களை இணையதள வாயிலாக கணினியில் பதிவேற்றம் செய்யும் பணியை புறக்கணித்தும், கடந்த 5-ந் தேதி தாலுகா அலுவலகங்களில் இரவு நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து பெரம்பலூர் மாவட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் கடந்த 7-ந் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வரவில்லை. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் பொருளாளர் கார்த்திகேயன் தலைமையில் பெரம்பலூர் தாலுகாவில் பணிபுரியும் கிராம நிர்வாக அதிகாரிகள் நேற்று பணியை புறக்கணித்து தாலுகா அலுவலக வளாகத்தில் சாமியானா பந்தல் போட்டு, அதன் கீழ் அமர்ந்து காலவரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். 
    ×