உடுமலையில் கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 20 கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் நடைபெற்ற காட்சி. 
ஆர்ப்பாட்டம் நடைபெற்ற காட்சி. 
Published on

உடுமலை :

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம், மாநில மையத்தின் வழிகாட்டுதலின்படி உடுமலைப்பேட்டை வட்டக்கிளை சார்பாக உடுமலை வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழைய ஓய்வூதிய திட்டம், பதவி உயர்வில் முன்னுரிமை, பயணப்படி உயர்த்தி வழங்கவும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளை பணியில் சேர்ந்த உரிய காலத்திற்குள் வழங்க கோரியும், ஈட்டிய விடுப்பு, அகவிலைப்படி ஆகியவற்றை மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக வழங்குவது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் உடுமலைப்பேட்டை வட்டத்தைச் சேர்ந்த 20 கிராம நிர்வாக அலுவ லர்கள் திருப்பூர் மாவட்ட கிராம நிர்வாக அலுவல ர்கள் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் முத்துக்குமார் தலைமையில் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com