என் மலர்
நீங்கள் தேடியது "Vellakoil suicide"
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே காதல் திருமணம் செய்த பெண் பாட்டியுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் மு. பழனிசாமி நகரை சேர்ந்தவர் பூபதி. மில் தொழிலாளி. இவரும் ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த பி.எஸ்.சி. பட்டதாரி சத்யா (வயது 24) என்பவரும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 5 மாத ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பூபதி வேலைக்கு செல்லவில்லை. சத்யாவின் நகைகளை விற்று செலவு செய்தார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்றும் தகராறு ஏற்பட்டது. இதனால் சத்யா கோபித்துக்கொண்டு கைக்குழந்தையை எடுத்துக்கொண்டு கருங்கல்பாளையத்தில் உள்ள பாட்டி தங்கம்மாள் என்ற தங்காயி வீட்டிற்கு சென்றார்.
அங்கு ஞாயிற்றுக்கிழமை வரை தங்கினார். பாட்டி தங்காயி சத்யாவை சமாதானம் செய்து கணவருடன் சேர்த்து வைக்க முயன்றார். அதன்படி ஞாயிறு இரவு சத்யாவுடன் பாட்டி தங்காயியும் வெள்ளகோவில் வந்தார். வீட்டில் இருந்த பூபதியை சமாதானம் செய்ய பாட்டி முயன்றார். ஆனால் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த பூபதி, சத்யாவிடம் இருந்த கைக்குழந்தையை எடுத்துக்கொண்டு அவரது பெற்றோர் இருக்கும் கச்சேரிவலசுக்கு சென்றார். இதனால் சத்யாவும், அவரது பாட்டியும் விரக்தியடைந்தனர்.
இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டை அக்கம் பக்கத்தினர் பார்த்தபோது சத்யாவும், அவரது பாட்டி தங்காயியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து வெள்ளகோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் உடலை மீட்டு காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் பூபதியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமாகி ஒரு வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.