search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UN Peacekeepers"

    • கடந்த திங்கட்கிழமை போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதில் 3 அமைதி காப்பாளர்கள் கொல்லப்பட்டனர்.
    • இச்சம்பவத்திற்கு சர்வதேச அளவில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

    கின்ஷாசா:

    காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் பல ஆண்டுகளாக பயங்கரவாதிகளின் தொடர் வன்முறைக்கு மக்கள் இலக்காகி வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்தி மக்களைப் பாதுகாக்க ஐ.நா. அமைதி காப்பாளர்கள் குழு தவறிவிட்டது எனக்கூறி பெரும் போராட்டம் வெடித்தது.

    கடந்த திங்கட்கிழமை முதல் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதில் 3 அமைதி காப்பாளர்கள் உள்பட 20 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்திற்கு சர்வதேச அளவில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

    இந்நிலையில், கிழக்கு காங்கோ எல்லை பகுதியில் விடுமுறைக்கு சென்றுவிட்டு பணிக்குத் திரும்பிய ஐ.நா. அமைதி காப்பாளர்கள் குழுவை சேர்ந்த ராணுவ வீரர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர்.

    கசிந்தி என்ற இடத்தில் நடந்த தாக்குதலில் 2 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    சந்தேகத்திற்குரிய வீரர்கள் கைது செய்யப்பட்டு, எந்த நாட்டை சேர்ந்தவர்கள் அவர்கள் என விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என்று காங்கோவில் உள்ள ஐ.நா.வுக்கான பொது செயலாளரின் சிறப்பு பிரதிநிதி பின்டவ் கெய்டா கூறியுள்ளார்

    வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    ×