search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Udumali"

    • அமராவதி நகர் சைனிக் பள்ளியின் வைர விழா வருகிற 15 ,16 ஆகிய தேதியில் நடைபெற உள்ளது.
    • அரசுத்துறை அதிகாரிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    உடுமலை :

    உடுமலை அடுத்துள்ள அமராவதி நகர் சைனிக் பள்ளியின் வைர விழா வருகிற 15 ,16 ஆகிய தேதியில் நடைபெற உள்ளது. இதில் 16ந் தேதி நடைபெற உள்ள விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்கிறார் . 15-ந்தேதி பொள்ளாச்சி தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்று விட்டு அன்று இரவு உடுமலை வழியாக திருமூர்த்தி மலைக்கு வருகிறார். அன்று இரவு விருந்தினர் மாளிகையில் தங்கும் அவர் 16 ந் தேதி காலை அமராவதி சைனிக் பள்ளியில்நடைபெற உள்ள வைரவிழாவில் கலந்து கொள்கிறார்.

    முதல்-அமைச்சர் கலந்துகொள்ளும் வைரவிழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகிகள் செய்து வரும் நிலையில் முதலமைச்சர் உடுமலை வழியாக திருமூர்த்தி மலை மற்றும் அமராவதி நகர் செல்லும் பகுதிகளில் அரசுத்துறை அதிகாரிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் உடுமலை ஆர்.டி.ஓ.அலுவலகத்தில் நடந்தது.

    ஆர்டிஓ., ஜஸ்வந்த் கண்ணன் தலைமை தாங்கி நடத்தினார் .கூட்டத்தில் உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர். தேன்மொழி வேல் ,சைனிக் பள்ளி முதல்வர் கேப்டன் நிர்மல் ரகு, நீர்வள ஆதார அமைப்பு ,பொதுப்பணித்துறை ,வருவாய்த்துறை, நெடுஞ்சாலை துறை, மின்சார வாரியம் ,நகராட்சி, உணவு பாதுகாப்பு துறை ,மருத்துவ துறை ,ஊரக வளர்ச்சி துறை ,போக்குவரத்து துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் துறை அதிகாரிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை நடத்தப்பட்டுஅதன்படி பணிகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.

    • உடுமலை சட்டமன்ற உறுப்பினர் கருணை இல்லம் பெயர் பலகையை திறந்து வைத்து இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
    • இல்லத்தை சேர்ந்த முதியவர்களுக்கு வேஷ்டி, சேலை வழங்கினர்.

    உடுமலை : 

    திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை டி.வி.பட்டிணம் யூனியன் ஆபீஸ் அருகில் ஸ்ரீ வள்ளலார் ஜி.டி.கருணை இல்லம் திறப்பு விழா நடைபெற்றது.

    கருணை இல்லத்தின் நிறுவனரும், கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவருமான தனலட்சுமி முன்னிலையில், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டஅ.தி.மு.க.செயலாளரும், உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கருணை இல்லம் பெயர் பலகையை திறந்து வைத்து இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு அன்னதானம் வழங்கினார். பின்னர் கருணை இல்லம் நிறுவனர்தனலட்சுமி ,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் உதயகுமார், சசி ஆகியோர் இல்லத்தை சேர்ந்த முதியவர்களுக்கு வேஷ்டி, சேலை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பொதுமக்களும், அரசுத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.  

    • உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    உடுமலை:

    தமிழ்நாடு மின்சார வாரியம் உடுமலை மின் பகிர்மான வட்ட பொறியாளர் அறம் வளர்த்தான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உடுமலையை அடுத்துள்ள இந்திரா நகர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நாளை( புதன்கிழமை) நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உடுமலை மின் நகர், இந்திரா நகர் ,சின்னப்பன் புதூர், ராசா வூர் ,ஆவல் குட்டை,சேரன் நகர், குமாரமங்கலம், தாந்தோணி,வெங்கிட்டாபுரம், துங்காவி,ராமேகவுண்டன்புதூர் மற்றும் மெட்ராத்தி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×