search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "trichy rain"

    • புதுக்கோட்டை மாவட்டத்தில் 208.20 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
    • அதிகபட்சமாக பொன்னமராவதியில் 100 மி.மீ. மழை பெய்துள்ளது.

    கரூரில் கடந்த 2 நாட்களாக பகலில் வெயிலின் தாக்கம் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. கரூர் மாவட்டம் மாயனூர் பகுதியில் அதிகபட்சமா க 50 மி.மீ. மழை பெய்துள்ளது. கிருஷ்ணராயபுரத்தில் 45 மி.மீ., பஞ்சபட்டியில் 47 மி.மீ., மயிலம்பட்டியில் 23 மி.மீ .மழையும், கடவூரில் 12 மி.மீ., குளித்தலையில் 16 மி.மீ. , அணைப்பாளையம் பகுதியில் 16 மி.மீ. மழையும், குறைந்தபட்சமாக கரூரில் 11.2 மி.மீ. மழையும் பெய்துள்ளது.

    இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் பெய்த மழையினால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் 94 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக வேப்பந்தட்டையில் 26 மி.மீ. மழை பெய்துள்ளது. அரியலூர் மாவட்டத்தில் 36 மி.மீ. மழை பெய்துள்ளது. நள்ளிரவில் பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 208.20 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக பொன்னமராவதியில் 100 மி.மீ. மழை பெய்துள்ளது. இதேபோல் புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, மீமிசல், திருமயம் உள்ளிட்ட பகுதிகளிலும் நள்ளிரவில் நல்ல மழை பெய்துள்ளது.

    திருச்சி மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக அக்னி நட்சத்திரத்தை மிஞ்சும் அளவுக்கு வெயிலின் தாக்கம் பகல் நேரங்களில் அதிகமாக இருந்தது. இதனால் இரவில் மக்கள் புழுக்கத்தில் தவித்தனர். மேலும் அவ்வப்போது மாலை மற்றும் இரவு நேரத்தில் பெய்யும் சாரல் மழை உஷ்ணத்தை அதிகரித்தே வந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்தது. நள்ளிரவு சுமார் 12.15 மணிக்கு சாரலுடன் தொடங்கிய மழை சிறிது நேரத்தில் வெளுத்து வாங்கியது. மாவட்டம் முழுவதும் 487.70 மி.மீ. மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக பொன்னணியாறு அணை பகுதியில் 74.80 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

    இதற்கு அடுத்தபடியாக வாத்தலை அணைக்கட்டு பகுதியில் 73.60, திருச்சி டவுனில் 51.30, தா.பேட்டையில் 35, மருங்காபுரியில் 24 மி.மீ. மழை பெய்துள்ளது. இந்த பலத்த மழையால் மாவட்டம் முழுவதும் குளிர்ந்தது.

    திருச்சியில் இன்று காலை திடீரென லேசான தூரலுடன் சாரல் மழை பெய்தது. பெண்கள் மழையில் நனையாமல் இருக்க சேலையாலும் சுடிதார் துப்பட்டாவாலும் தலையை மூடியபடி சென்றனர்.
    திருச்சி:

    திருச்சியில் தினமும்  காலையில் பனிமூட்டம் நிலவி வருகிறது. பகலில் வெயில் அடித்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை  திடீரென லேசான தூரலுடன் சாரல் மழை பெய்தது.  

    மேலும் வானமும் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் பகல் 12  மணியளவில் வெயில் அடிக்க ஆரம்பித்தது. திடீரென பெய்த மழையின் காரணமாக குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். திடீரென்று பெய்த மழையால் பொதுமக்கள் மழையில் நனைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பெண்கள் மழையில் நனையாமல் இருக்க  சேலையாலும் சுடிதார் துப்பட்டாவாலும் தலையை மூடியபடி சென்றனர். 
    திருச்சியில் நேற்று மழை பெய்ததால் வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
    திருச்சி:

    திருச்சியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. வெப்பத்தின் தாக்கத்தினால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 

    இந்த நிலையில் நேற்று காலை வெயில் அடித்த நிலையில்  பகலில் கருமேகங்கள் திரண்டு திடீரென மழை பெய்தது.  சுமார் 3 மணி நேரத்திற்கும் மேல் இடைவிடாமல் லேசான தூறலுடன் மழை பெய்தது. இதனால் வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியதால்  பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.  நேற்று போல் இன்று பகலிலும் மழை பெய்தது. இதனால் சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் குடைபி டித்தப்படி சென்றனர். வாகன ஓட்டிகள் மழையில் நனைந்து செல்லும் நிலை ஏற்பட்டது.  

    2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்ததன் மூலம் திருச்சியில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
    ×