search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "transport union"

    • வேலை நிறுத்தம் என ஏஐடியூசி, சிஐடியு உள்ளிட்ட சங்கங்கள் ஒருமனதாக முடிவு.
    • வேலை நிறுத்த போராட்டத்தை அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னின்று நடத்தும்.

    பழைய ஓய்வூதிய திட்டம், 15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்வது உள்ளிட்ட தொழிலாளர்கள் கோரிக்கைகள் தொடர்பாக இரு முறை நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, வரும் ஜனவரி 9ம் தேதி முதல் வேலை நிறுத்தம் என ஏஐடியூசி, சிஐடியு உள்ளிட்ட சங்கங்கள் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளன.

    வேலை நிறுத்த போராட்டத்தை அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னின்று நடத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சிஐடியூ தொழிற்சங்கத்தை சேர்ந்த சவுந்தரராஜன் கூறுகையில், "8 வருட கோரிக்கை தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் இருந்து உரிய பதில் வராததால் வரும் 9ம் தேதி முதல் ஸ்டிரைக்" என என்றார்.

    • வாயிற் கூட்டம் பல்லடம் அரசு போக்குவரத்து கழக டிப்போ முன்பு நடைபெற்றது.
    • 54 கோரிக்கைகள் அடங்கிய ஒப்பந்தத்தை அ.தி.மு.க. போக்குவரத்து சங்கம் சார்பில் ஏற்கனவே தமிழக அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது.

    பல்லடம்,

    பல்லடம் அரசு போக்குவரத்து கழக டிப்போ முன்பு அ.தி.மு.க. போக்குவரத்து தொழிற்சங்கத்தின் சார்பில்வாயிற் கூட்டம் நடைபெற்றது. போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்த 54 கோரிக்கைகள் அடங்கிய ஒப்பந்தத்தை அ.தி.மு.க. போக்குவரத்து சங்கம் சார்பில் ஏற்கனவே தமிழக அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்றக்கோரி அ.தி.மு.க. போக்குவரத்து சங்கம் சார்பில் போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்த வாயிற் கூட்டம் பல்லடம் அரசு போக்குவரத்து கழக டிப்போ முன்பு நடைபெற்றது.இதில் மண்டல தலைவர் ரவிந்திரன். மண்டல செயலாளர் தங்கவேல்,பல்லடம் கிளை தலைவர் சரவணன்,செயலாளர் ரவிபிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×