

பல்லடம்,
பல்லடம் அரசு போக்குவரத்து கழக டிப்போ முன்பு அ.தி.மு.க. போக்குவரத்து தொழிற்சங்கத்தின் சார்பில்வாயிற் கூட்டம் நடைபெற்றது. போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்த 54 கோரிக்கைகள் அடங்கிய ஒப்பந்தத்தை அ.தி.மு.க. போக்குவரத்து சங்கம் சார்பில் ஏற்கனவே தமிழக அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்றக்கோரி அ.தி.மு.க. போக்குவரத்து சங்கம் சார்பில் போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்த வாயிற் கூட்டம் பல்லடம் அரசு போக்குவரத்து கழக டிப்போ முன்பு நடைபெற்றது.இதில் மண்டல தலைவர் ரவிந்திரன். மண்டல செயலாளர் தங்கவேல்,பல்லடம் கிளை தலைவர் சரவணன்,செயலாளர் ரவிபிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.