search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "transport employee"

    • தீபாவளி பண்டிகையையொட்டி வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் ராம் ஜவகர் வெளியூர் சென்றுவிட்டார்
    • 3 பவுன் தங்க நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் உள்ளிட்டவை திருட்டு

    நெல்லை:

    பாளை கே.டி.சி. நகர் அருகே உள்ள சீனிவாச நகரை சேர்ந்தவர் ராம் ஜவகர்(வயது 57). இவர் அரசு பஸ் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார்.

    நகை திருட்டு

    தீபாவளி பண்டிகை யையொட்டி வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் ராம் ஜவகர் வெளியூர் சென்றுவிட்டார். நேற்று மீண்டும் அவர்கள் வீடு திரும்பினர்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.உடனே அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 3 பவுன் தங்க நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் உள்ளிட்டவை திருட்டு போயிருந்தது.

    இதுதொடர்பாக ராம் ஜவகர் ஐகிரவுண்டு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    பாளை மகிழ்ச்சிநகரை சேர்ந்தவர் ராஜ் (55). இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன் வெளியூருக்கு சென்றுவிட்டார். இன்று காலை அவர் வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தது.

    வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும், அங்கு நகை, பணம் இல்லாததால் கொள்ளை சம்பவம் தவிர்க்கப்பட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    முருங்கப்பாக்கத்தில் மதுகுடிக்க மருமகள் பணம் கொடுக்க மறுத்ததால் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    முருங்கப்பாக்கம் சுதானா நகர் கோல்டன் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 60). தமிழக போக்குவரத்து கழகத்தில் ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சுப்பிரமணியனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று சுப்பிரமணியன் மது குடிக்க தனது மருமகள் ஜெயப்பிரதாவிடம் பணம் கேட்டார். ஆனால், மாத கடைசி என்பதால் தன்னிடம் பணம் இல்லை என்றும், கணவர் வந்தவுடன் பணம் வாங்கி தருவதாக ஜெயப்பிரதா கூறினார். இதனை ஏற்காமல் சுப்பிரமணியன் பணம் வைத்து கொண்டே மருமகள் பணம் தர மறுப்பதாக கருதினார்.

    இதனால் மனமுடைந்த சுப்பிரமணியன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த அவர், வீட்டின் அறைக்குள் உள்பக்கமாக பூட்டி கொண்டு சேலையால் மின் விசிறியில் தூக்குபோட்டு தொங்கினார்.

    வெகுநேரமாக அறை கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த ஜெயப் பிரதா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தார்.

    அப்போது மாமனார் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சுப்பிரமணியன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×