என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "train route"

    • நான்காவது ரெயில் பாதை திட்டம் 757.18 கோடி ரூபாய் மதிப்பில் அமைய உள்ளது.
    • பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

    தாம்பரம்-செங்கல்பட்டு இடையிலான நான்காவது ரெயில் பாதை திட்டத்துக்கு மத்திய ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் 757.18 கோடி ரூபாய் மதிப்பில் அமைய உள்ளது.

    மத்திய அரசின் இந்த ஒப்புதலுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைத்து புறநகர் ரெயில் இணைப்பை வலுப்படுத்தும் வகையில் ரூ.757.18 கோடி மதிப்பீட்டில் தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான 4-வது ரெயில் வழித்தடத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இப்புதிய தடத்தால், ஆண்டுக்கு 1.344 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டு, ரூ.157 கோடி கூடுதல் வருவாய் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு தொடர்ந்து தமிழகத்தின் இரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்தி வளர்ச்சிக்குத் தொடர்ந்து வித்திடும் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், மத்திய ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கும் தமிழக மக்கள் சார்பாக எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ரெயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை ரெயில் போக்குவரத்து 1-ந் தேதி முதல் மாற்றம் செய்யப்படுகிறது.
    மதுரை:

    மதுரை ரெயில்வே கோட்ட செய்தி தொடர்பு அதிகாரி வீராசுவாமி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை கோட்டத்தில் ரெயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக, வருகிற 1-ந் தேதி முதல் 30-ந்தேதி வரை கீழ்க்கண்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.

    அதன்படி நெல்லை-மயிலாடுதுறை (வண்டி எண்:56822) ரெயில் ஏப்ரல் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை திண்டுக்கல்-திருச்சி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    நாகர்கோவில்- மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:-16352) 7-ந்தேதி திருச்சிக்கு 1 மணி நேரம் தாமதமாக செல்லும்.

    குருவாயூர்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16128) ஏப்ரல் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை திருச்சிக்கு அரை மணி நேரம் தாமதமாக செல்லும்.

    நாகர்கோவில்- மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16352) ஏப்ரல் 14, 21, 28 ஆகிய தேதிகளில் திருச்சிக்கு 1 மணி நேரம் தாமதமாக செல்லும்.

    மதுரை- கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 17616) ஏப்ரல் 14, 21, 28 ஆகிய தேதிகளில் திருச்சிக்கு அரைமணி நேரம் தாமதமாக செல்லும்.

    நாகர்கோவில்- கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16354) ஏப்ரல் 16, 23, 30 ஆகிய தேதிகளில் திருச்சிக்கு அரைமணி நேரம் தாமதமாக செல்லும்.

    கன்னியாகுமரி- ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 12666) ஏப்ரல் 14, 21, 28 ஆகிய தேதிகளில் திருச்சிக்கு அரைமணி நேரம் தாமதமாக செல்லும்.

    மதுரை- பழனி பயணிகள் ரெயில் (வண்டி எண்:56710) ஏப்ரல் 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை புதன்கிழமை தவிர மற்ற நாட்களில் அரைமணி நேரம் முன்பாக காலை 7.15 மணிக்கு புறப்படும்.

    நெல்லை- ஈரோடு பயணிகள் ரெயில் (வண்டி எண்: 56826) ஏப்ரல் 1 -ந் தேதி முதல் 30-ந்தேதி வரை புதன்கிழமை தவிர மற்ற நாட்களில் சேலத்துக்கு 2 மணி நேரம் தாமதமாக செல்லும்.

    நாகர்கோவில்- மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16340) ஏப்ரல் 1 -ந் தேதி முதல் 30-ந்தேதி வரை திங்கள், செவ்வாய், புதன்கிழமைகளில் சேலத்துக்கு அரைமணி நேரம் தாமதமாக செல்லும்.

    மதுரை- பிகானீர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:22631) ஏப்ரல் 1 -ந் தேதி முதல் 30-ந்தேதி வரை வியாழன் தோறும் திருச்சிக்கு அரைமணி நேரம் தாமதமாக செல்லும்.

    பாலக்காடு- திருச்செந்தூர் பயணிகள் ரெயில் (வண்டி எண்: 56769) ஏப்ரல் 1 -ந்தேதி முதல் 17-ந்தேதி வரை மற்றும் 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை புதன், சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் விருதுநகர்- நெல்லை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    திருச்செந்தூர்- பாலக்காடு பயணிகள் ரெயில் (வண்டி எண்: 56770) ஏப்ரல் 1 -ந்தேதி முதல் 17-ந்தேதி வரை மற்றும் 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை புதன், சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் நெல்லை-விருதுநகர் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    குருவாயூர்- புனலூர் பயணிகள் ரெயில் (வண்டி எண்: 56365) நாளையும், நாளை மறுநாளும் அரை மணி நேரம் தாமதமாக புனலூர் செல்லும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    ×