search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tourist arrivals"

    • காவிரி ஆற்றில் நீராடிவிட்டு அணை பூங்காவில் பொழுதை கழித்து செல்வது வழக்கம்.
    • இந்த நிலையில் விடுமுறை தினமான நேற்று மேட்டூர் அணை பூங்காவிற்கு 7,699 சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சேலம், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவர்.

    மேட்டூர் அணை பூங்கா

    அவர்கள் இங்குள்ள காவிரி ஆற்றில் நீராடிவிட்டு அணை பூங்காவில் பொழுதை கழித்து செல்வது வழக்கம். இந்த பூங்காவில் பொதுபணித் துறை சார்பில் நுழைவு கட்டணமாக ரூ.5 வசூல் செய்யபடுகிறது.

    இந்த நிலையில் விடுமுறை தினமான நேற்று மேட்டூர் அணை பூங்காவிற்கு 7,699 சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்களிடம் நுழைவு கட்டணமாக ரூ.38.495 வசூல் செய்யப்பட்டது. சுற்றுலா பயணிகள் பூங்காவில் இருந்த பாம்பு, முயல் பண்ணைகளை கண்டு ரசித்தனர்.

    மேலும் பூங்காவில் இருந்த ஊஞ்சல், ராட்டினம் உள்ளிட்டவற்றை சிறுவர், சிறுமிகள் விளையாடி மகிழ்ந்தனர்.

    • புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
    • ஏராளமான சுற்றுலாபயணிகள் வந்து செல்கின்றனர்.

    ஊட்டி,

    மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் லட்சக்க ணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    குறிப்பாக ஊட்டி படகு இல்லம், அரசினர் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வடமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாபயணிகள் வந்து செல்கின்றனர்.

    வார விடுமுறையான நேற்று ஊட்டி படகு இல்லத்தில் ஏராளமான சுற்றுலாபயணிகள் படகு சவாரி செய்தும், குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனர். இதேபோல தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா காட்சி முனை, மலை ரெயிலில் பயணம் செய்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.

    கடந்த ஆண்டு மட்டும் ஊட்டி படகு இல்லத்துக்கு சுமார் 17 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்தநிலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஊட்டி படகு இல்லத்தில் ரூ.11 லட்சம் மதிப்பில் மிதவை மேடை அமைக்கப்பட்டுள்ளது. புளோட்டிங் ஜெட்டி எனப்படும் மிதவை மேடை, செவ்வக வடிவில் சிறு, சிறு அமைப்பாக சேர்த்து ஒரு சேர உருவாக்கப்பட்டு உள்ளது.

    சுற்றுலாபயணிகள் இதில் நடந்து சென்று செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். 

    ×