என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊட்டி படகு இல்லத்துக்கு 17 லட்சம் சுற்றுலாபயணிகள் வருகை
- புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
- ஏராளமான சுற்றுலாபயணிகள் வந்து செல்கின்றனர்.
ஊட்டி,
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் லட்சக்க ணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக ஊட்டி படகு இல்லம், அரசினர் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வடமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாபயணிகள் வந்து செல்கின்றனர்.
வார விடுமுறையான நேற்று ஊட்டி படகு இல்லத்தில் ஏராளமான சுற்றுலாபயணிகள் படகு சவாரி செய்தும், குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனர். இதேபோல தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா காட்சி முனை, மலை ரெயிலில் பயணம் செய்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.
கடந்த ஆண்டு மட்டும் ஊட்டி படகு இல்லத்துக்கு சுமார் 17 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஊட்டி படகு இல்லத்தில் ரூ.11 லட்சம் மதிப்பில் மிதவை மேடை அமைக்கப்பட்டுள்ளது. புளோட்டிங் ஜெட்டி எனப்படும் மிதவை மேடை, செவ்வக வடிவில் சிறு, சிறு அமைப்பாக சேர்த்து ஒரு சேர உருவாக்கப்பட்டு உள்ளது.
சுற்றுலாபயணிகள் இதில் நடந்து சென்று செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.






