என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TNPSC GROUP-4 EXAM"

    • குரூப் -4 பணிகளில் 645 காலிப்பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.
    • 2026 குரூப் 4 தேர்வு அடுத்தாண்டு டிசம்பரில் நடைபெறுகிறது

    2024, 25ஐ தொடர்ந்து 2026ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு உத்தேச அட்டவணையை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதன்விவரம் பின்வருமாறு;

    • ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு (நேர்காணல் அல்லாத பதவிகள்) -  அறிவிக்கை வெளியிடப்படும் நாள் ; 20.5.2026 - தேர்வு நடைபெறும் நாள் ; 03.08.2026
    • ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு I (குரூப் I சேவைகள்) - அறிவிக்கை வெளியிடப்படும் நாள்; 23.06.2026 - தேர்வு நடைபெறும் நாள்; 06.09.2026
    • ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு (பட்டயம் / தொழிற்பயிற்சி தரம்) அறிவிக்கை வெளியிடப்படும் நாள்: 07.07.2026 -தேர்வு நடைபெறும் நாள்; 20.09.2026
    • ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு II (தொகுதி II மற்றும் IIA பணிகள்): தேர்வு அறிவிக்கை நாள்; 11.08.2026-தேர்வு நடைபெறும் நாள்; 25.10.2026
    • ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள்) - தேர்வு அறிவிக்கை நாள்- 31.08.2026 - தேர்வு நடைபெறும் நாள்; 14.11.2026
    • ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – IV (குரூப் IV பணிகள்) - தேர்வு அறிவிக்கை நாள்- 06.10.2026- - தேர்வு நடைபெறும் நாள்; 20.12. 2026

    மேலும் தேர்வர்கள் தங்களை தேர்வுக்கு தயார்படுத்தி கொள்ளவே இந்த ஆண்டுத்திட்டம் வெளியிடப்படுகிறது. ஆண்டுத் திட்டத்தில் தேர்வுகள் சேர்க்கவோ அல்லது நீக்கவோ செய்யப்படலாம். காலியிடங்கள் அறிவிக்கையில் வெளியிடப்படும். பாடத்திட்டம் மற்றும் தேர்வுத் திட்டம் ஆணையத்தின் வலைத்தளமான www.tnpsc.gov.in இல் வெளியிடப்பட்டுள்ளன. இவை அறிவிப்பு வெளியிடப்படும் தேதி வரை மாற்றங்களுக்கு உட்பட்டவை. அறிவிக்கை தொடர்பான விவரங்களுக்கு தேர்வாணைய இணையதளத்தினை தொடர்ந்து கவனித்து வரவும். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த அறிவிப்பை தொடர்ந்து இந்தாண்டுக்கான குரூப் -4 பணிகளில் 645 காலிப்பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

    "கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர், மற்றும் வனக்காவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 3935 காலிப்பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி IV பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் 25.04.2025 அன்று வெளியிடப்பட்டது. கூடுதலாக 727 காலிப்பணியிடங்களுக்கான பிற்சேர்க்கை (26.09.2025) அன்று வெளியிடப்பட்டது. தற்போது மேலும் 645 காலிப்பணியிடங்களுக்கான பிற்சேர்க்கை இன்று (03.12.2025) வெளியிடப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 5307 ஆகும்.

    2025-ம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி IV பணிகள்) மூலம், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளில் (வனக்காப்பாளர், மற்றும் வனக்காவலர் பதவிகள் நீங்கலாக), ஒரு நிதியாண்டிற்கு (2025. 26) 5101 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கை மற்றும் பிற்சேர்க்கை வெளியிடப்பட்டுள்ளன. 2022 மற்றும் 2024 ஆண்டிற்கான அறிவிக்கைகளில் (வனக்காப்பாளர், மற்றும் வனக்காவலர் பதவிகள் நீங்கலாக) சராசரியாக ஒரு நிதியாண்டிற்கு நிரப்பப்பட்ட காலிப்பணியிடங்களுடன் (3560) ஒப்பிடும்போது, 2025-ம்ஆண்டில் கூடுதலாக 1541 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது." என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • குரூப்-4 பணியிடங்களில் கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • 10 ஆயிரம் வரை காலிப்பணியிடங்களை அதிகரிக்க தேர்வர்கள் கோரிக்கை வைத்தனர்.

    டி.என்.பி.எஸ்.சி. சார்பில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், வனப்பாதுகாவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் அடங்கிய குரூப் - 4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.

    இந்த அறிவிப்பின் மூலம் 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. இத்தேர்வை சுமார் 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர். இத்தேர்வுக்கான முடிவு அக்டோபர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குரூப்-4 பணியிடங்களில் கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    கடந்த மாதம் 11ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையில் 480 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு அறிவிப்பு வெளியானது.

    இதற்கு 10 ஆயிரம் வரை காலிப்பணியிடங்களை அதிகரிக்க தேர்வர்கள் கோரிக்கை வைத்தனர்.

    இந்நிலையில், தற்போது கூடுதலாக 2208 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், மொத்த எண்ணிக்கை 8,932-ஆக அதிகரித்துள்ளது.

    • டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் சுமார் 20 லட்சம் பேர் எழுதினர்.
    • தேர்வாணையத்தின் கூட்டம் முடிந்த நிலையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

    டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு கடந்த ஜூன் மாதம் 7ம் தேதி நடைபெற்றது.

    VAO பில் கலெக்டர் உள்ளிட்ட 6,224 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு ஜூன் 9ம் தேதி நடைபெற்றது. 20 லட்சம் பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்த நிலையில், 7:247 மையங்களில் 15.8 லட்சம் தோவர்கள் தேர்வு எழுதி இருந்தனர்

    இந்நிலையில், குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

    இன்று காலை தேர்வாணையத்தின் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்த சில மணி நேரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

    தேர்வு முடிவுகளை tnpscresults.tn.gov.in, tnpscexams.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • திருச்சி மாவட்டத்தில் 320 மையங்களில் இன்று டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நடைபெற்றது
    • தேர்வு மையங்களில் 9 மணிக்கு மேல் அனுமதிக்கப்படாததால் மையங்களில் தேர்வு எழுத வந்தவர்களில் சிலர் தேர்வு எழுத முடியாமல் திரும்பினர்

    திருச்சி:

    தமிழக அரசுத்துறைகளில் உள்ள ஜூனியர் அசிஸ்டென்ட், வி.ஏ.ஓ., பில் கலெக்டர் உள்ளிட்ட 7ஆயிரத்து 301 காலி பணியிடங்களை நிரப்புதற்கான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப்-4 தேர்வு இன்று காலை தொடங்கியது.

    9.30 மணிக்குத் தொடங்கி 12.30 மணி வரை தேர்வு நடைபெறும் என்பதால் 9 மணிக்கு மேல் தேர்வுமையத்திற்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்படவில்லை. தேர்வு மையங்களில் 9 மணிக்கு மேல் அனுமதிக்கப்படாததால் மையங்களில் தேர்வு எழுத வந்தவர்களில் சிலர் தேர்வு எழுத முடியாமல் திரும்பினர்.

    பல நாட்கள் தேர்வுக்கு தயாராகி தேர்வு எழுத முடியாமல் போனதால் வருத்தத்துடன் அவர்கள் திரும்பி சென்றனர்.

    திருச்சி மாவட்டத்தில் 320 தேர்வு மையங்களில் 94 ஆயிரத்து 140 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து தேர்வினை எழுதினர்.

    தேர்வுமையங்களில் தேர்வில் முறைகேடுகளை தவிர்க்க 320 தேர்வறை கண்காணிப்பாளர்கள், கண்காணிப்பு அலுவலர்கள், சப்கலெக்டர் தலைமையில் 12 பறக்கும்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்வர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    அதேநேரம் தேர்வுமையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு எவ்வித வசதியும் செய்துதரப்படாததால் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் கன்டோன்மென்ட் வெஸ்ட்ரி பள்ளியில் தேர்வு எழுத வந்த மணப்பாறையை சேர்ந்த சரஸ்வதி என்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு வீல்சேர் வழங்கப்படாததால் சிரமப்பட்டு முட்டிக்காலில் வந்த பெண்ணை காவல் உதவிஆய்வாளர் அகிலா மற்றும் ஊர்க்காவல்படை பெண் போலீஸ் இணைந்து தூக்கிச்சென்று தேர்வு மையத்தில் இறக்கிவிட்டதை பலரும் பாராட்டினர்.

    இதுபோன்ற தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிய வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டுமெனவும் பெற்றோர்கள் கேட்டுக்கொண்டனர்.

    முன்னதாக திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் கலெக்டர் மா.பிரதீப்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    ×