என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tn pollution control board
நீங்கள் தேடியது "TN pollution control board"
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம் மூடப்பட்ட பிறகு அப்பகுதியில் காற்று மாசு கணிசமாக குறைந்துள்ளது என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. #Sterlite #Airpollution
சென்னை:
தூத்துக்குடி சிப்காட் பகுதியில் 23 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் தாமிர ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், பொதுமக்களுக்கு நோய் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் கூறி ஆலையை சுற்றியுள்ள கிராமத்தினர் போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையே, ஆலையை விரிவாக்கம் செய்ய நிர்வாகம் திட்டமிட்டதால் போராட்டம் தீவிரமானது. கடந்த மே மாதம் பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடகோரி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற போது வன்முறை வெடித்தது.
அப்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு ஆணை பிறப்பித்தது. இதையடுத்து ஆலைக்கும் சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம் மூடப்பட்ட பிறகு அப்பகுதியில் காற்று மாசு கணிசமாக குறைந்துள்ளது என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள தரவு பட்டியலில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் காற்று மாசு குறைந்துள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் காற்றின் தரம் தொடர்பான தரவு பட்டியலில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடியில் காற்றின் தரம் பற்றிய தரவு பட்டியல் தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் காற்றில் சல்பர் டை ஆக்சைடு கணிசமாக குறைந்துள்ளது என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. #Sterlite #Airpollution
×

X