search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "take"

    • சேலம் சீரகாபாடி பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள் என்கிற லட்சுமி இவரது 3-வது கணவர் பிரபல ரவுடி மேட்டூர் ரகு.
    • இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி லட்சுமி வீட்டில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

    சேலம்:

    சேலம் சீரகாபாடி பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள் என்கிற லட்சுமி (வயது 42). இவரது 3-வது கணவர் பிரபல ரவுடி மேட்டூர் ரகு.

    இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி லட்சுமி வீட்டில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

    இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், 4 தனிப்படைகளை அமைத்து கொலையாளி களை பிடிக்க உத்தரவிட்டார். முதற்கட்ட விசாரணையில், ரகு, லட்சுமியிடம் நிலத்தை தனது பெயருக்கு எழுதி கொடுக்குமாறு கூறி மிரட்டியுள்ளார். அவர் மறுத்ததால் ரகு தனது கூட்டாளிகளை அழைத்து வந்து கொடூரமாக லட்சுமியை கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.

    தனிப்படை போலீசார் தீவிரமாக கொலையாளி களை தேடி வந்த நிலையில் பிரபல ரவுடி ரகு ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

    தொடர்ந்து போலீசார், அவரது கூட்டாளிகள் 3 பேரை தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ரவுடியின் கூட்டாளிகளான தூத்துக்குடி மாவட்டம் ரகமதுல்லாபுரம் மேற்கு பகுதியை சேர்ந்த ஷேக்மைதீன் (வயது 29), சேலம் செவ்வாய்ப்பேட்டை லட்சுமி அய்யர் வீதியை சேர்ந்த ஜோசப் என்கிற பாலாஜி (19), மேட்டூர் குஞ்சாண்டியூரை சேர்ந்த ஆனந்த் (28) ஆகிய 3 பேரும் நேற்று பவானி ஜே.எம்.-1 நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

    இதையடுத்து நீதிபதி, சரண் அடைந்த இவர்கள் 3 பேரையும் ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து 3 பேரும் ெஜயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

    ஏற்கனவே சரண் அடைந்த ரகுவை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனிடையே மேலும் அவரது கூட்டாளிகளையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    போலீசார், இதற்கான ஆவணங்களை கோர்ட்டில் விரைவில் தாக்கல் செய்ய உள்ளனர். போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கிடைக்கும் பட்சத்தில் லட்சுமி கொலை வழக்கு தொடர்பாக ரவுடி ரகு உள்பட 4 பேரும் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவிப்பார்கள்.

    அதன்அடிப்படையில் போலீசார், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுப்பார்கள்.

    • வருகிற 4-ந்தேதி சரஸ்வதி பூைஜ, ஆயுதபூஜை, 5-ந்தேதி விஜயதசமி, 24-ந்தேதி தீபாவளி பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன.
    • சிறப்பு பஸ்கள் இயக்க வசதியாக டிரைவர்கள், கண்டக்டர்கள் விடுமுறை எடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    வருகிற 4-ந்தேதி சரஸ்வதி பூைஜ, ஆயுதபூஜை, 5-ந்தேதி விஜயதசமி, 24-ந்தேதி தீபாவளி பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன. இதனால் தொழில் உள்பட முக்கிய நகரங்கள் இடையிலும், தென் மாவட்டங்களுக்கும் இயக்கப்படும் பஸ்களின் முன்பதிவும் முடிந்துள்ளது.

    சிறப்பு பஸ்களின் இயக்கம் குறித்து அதிகாரிகள் பட்டியல் தயாரித்து போக்குவரத்து துைற அமைச்சரின் அனுமதிக்கு அனுப்பியுள்ளனர். ஓரிரு நாளில், சிறப்பு பஸ்கள் இயக்கம் குறித்து அமைச்சர் அறிவிக்க உள்ளார். இந்த நிலையில் இன்று முதல் அக்டோபர் 6-ந்தேதி வரை மற்றும் அக்டோபர் 20-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்க வசதியாக டிரைவர்கள், கண்டக்டர்கள் விடுமுறை எடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே விடுமுறையில் சென்றவர்களில், மருத்துவ விடுமுறை தவிர மற்ற விடு முறைகள் ரத்து செய்யப்பட்டு, இன்று பணியில் இணைய போக்கு வரத்துத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    ×